Sunday, September 6, 2009

தியாகராஜ கிருதி - நாபாலி ஸ்ரீ ராம - ராகம் ஸ1ங்கராப4ரணம் - Napaali Sri Rama - Raga Sankarabharanam

பல்லவி
நாபாலி ஸ்ரீ ராம பூ4-பாலக 1ஸ்தோம
காபாட3 ஸமயமு நீ 2பாத3முலீரா

சரணம்
சரணம் 1
4ளி ப4ளி ப4க்துல பூஜா ப2லமு நீவனுகொண்டி
நளின லோசன நீகு 3நலுகு3 4பெட்டேரா (நா)


சரணம் 2
கோடி மன்மது2லைன 5ஸாடிகா3 நீ ஸொக3ஸு
நாடியுன்னதி3 மதி3னி மேடி ஸ்ரீ ராம (நா)


சரணம் 3
தொலி பூஜா 62லமேமோ கலிகெ3 நீ பத3 ஸேவ
நலுவகைனனு நின்னு தெலியக3 தரமா (நா)


சரணம் 4
பதித பாவன நீவு பாலிஞ்சகுண்டேனு
3தி மாகெவரு மம்மு க்3ரக்குன ப்3ரோவு (நா)


சரணம் 5
கோரி நீ பத3 ஸேவ ஸாரெகு ஸேயனு தலசி
மா ரமண நா லோனே மருலுகொன்னானு (நா)


சரணம் 6
நிருபேத3கப்3பி3ன நிதி4 ரீதி தொ3ரிகி3திவி
வர த்யாக3ராஜுனி வரத3 7ம்ரொக்கேரா (நா)


பொருள் - சுருக்கம்
எனது காவல் தெய்வமே, இராமா! புவியாள்வோர் குழுமத்தோனே! கமலக்கண்ணா! மேதகு இராமா! வீழ்ந்தோரைப் புனிதமாக்குவோனே! மாரமணா! உயர் தியாகராசனுக் கருள்வோனே!
  • காப்பாற்ற இது சமயம்;

  • உனது திருவடிகளைத் தாருமய்யா; உனக்கு நலங்கிட்டேனய்யா;

  • பலே! பலே! தொண்டரின் வழிபாட்டுப் பயன் நீயெனக் கொண்டேன்;

  • கோடி மன்மதர்களாயினும், ஈடாகாது; உனது சொகுசு நாட்டியுள்ளது (எனது) உள்ளத்தினில்;

  • முன் வழிபாட்டுப் பயனாகவோ, கிடைத்தது உனது திருவடித் தொண்டு; நான்முகனுக்காகிலும் உன்னை யறியத் தரமா?

  • நீ காவாதிருந்தாயெனில், புகல் எமக்கு யார்? எம்மை உடனே காப்பாய்;

  • கோரி உனது திருவடி சேவையை எவ்வமயமும் செய்ய எண்ணி, என்னுள்ளேயே (நான் உன்மீது) காதல் கொண்டேன்;

  • மிக்கு வறியோனுக்குக் கிடைத்த செல்வம் போலும் (நீ) கிடைத்தாய்;

வணங்கினேனய்யா.


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நாபாலி/ ஸ்ரீ ராம/ பூ4/-பாலக/ ஸ்தோம/
எனது காவல் தெய்வமே/ ஸ்ரீ ராமா/ புவி/ ஆள்வோர்/ குழுமத்தோனே/

காபாட3/ ஸமயமு/ நீ/ பாத3முலு/-ஈரா/
காப்பாற்ற/ (இது) சமயம்/ உனது/ திருவடிகளை/ தாருமய்யா/


சரணம்
சரணம் 1
4ளி/ ப4ளி/ ப4க்துல/ பூஜா/ ப2லமு/ நீவு/-அனுகொண்டி/
பலே/ பலே/ தொண்டரின்/ வழிபாட்டு/ பயன்/ நீ/ எனக் கொண்டேன்/

நளின/ லோசன/ நீகு/ நலுகு3/ பெட்டேரா/ (நா)
கமல/ கண்ணா/ உனக்கு/ நலங்கு/ இட்டேனய்யா/


சரணம் 2
கோடி/ மன்மது2லு/-ஐன/ ஸாடிகா3/ நீ/ ஸொக3ஸு/
கோடி/ மன்மதர்கள்/ ஆயினும்/ ஈடாகாது/ உனது/ சொகுசு/

நாடி/-உன்னதி3/ மதி3னி/ மேடி/ ஸ்ரீ ராம/ (நா)
நாட்டி/ உள்ளது/ (எனது) உள்ளத்தினில்/ மேதகு/ ஸ்ரீ ராமா/


சரணம் 3
தொலி/ பூஜா/ ப2லமோ-ஏமோ/ கலிகெ3/ நீ/ பத3/ ஸேவ/
முன்/ வழிபாட்டு/ பயனாகவோ/ கிடைத்தது/ உனது/ திருவடி/ தொண்டு/

நலுவகு/-ஐனனு/ நின்னு/ தெலியக3/ தரமா/ (நா)
நான்முகனுக்கு/ ஆகிலும்/ உன்னை/ யறிய/ தரமா/


சரணம் 4
பதித/ பாவன/ நீவு/ பாலிஞ்சக/-உண்டேனு/
வீழ்ந்தோரை/ புனிதமாக்குவோனே/ நீ/ காவாது/ இருந்தாயெனில்/

3தி/ மாகு/-எவரு/ மம்மு/ க்3ரக்குன/ ப்3ரோவு/ (நா)
புகல்/ எமக்கு/ யார்/ எம்மை/ உடனே/ காப்பாய்/


சரணம் 5
கோரி/ நீ/ பத3/ ஸேவ/ ஸாரெகு/ ஸேயனு/ தலசி/
கோரி/ உனது/ திருவடி/ சேவையை/ எவ்வமயமும்/ செய்ய/ எண்ணி/

மா/ ரமண/ நா லோனே/ மருலுகொன்னானு/ (நா)
மா/ ரமணா/ என்னுள்ளேயே/ (நான் உன்மீது) காதல் கொண்டேன்/


சரணம் 6
நிருபேத3கு/-அப்3பி3ன/ நிதி4/ ரீதி/ தொ3ரிகி3திவி/
மிக்கு வறியோனுக்கு/ கிடைத்த/ செல்வம்/ போலும்/ (நீ) கிடைத்தாய்/

வர/ த்யாக3ராஜுனி/ வரத3/ ம்ரொக்கேரா/ (நா)
உயர்/ தியாகராசனுக்கு/ அருள்வோனே/ வணங்கினேனய்யா/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில் இப்பாடலின் ராகம் 'நவரோஜ்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

4 - பெட்டேரா - பெட்டெத3னுரா.

5 - ஸாடிகா3 நீ ஸொக3ஸு - ஸாடிகா3னி ஸொக3ஸு : பிற்குறிப்பிட்ட வேறுபாடு சரியென்றால், 2-வது சரணம் இங்ஙனம் மொழிபெயர்க்கப்படும் -

"கோடி மன்மதர்களாயினும், ஈடாகாத உனது சொகுசு நாட்டியுள்ளது (எனது) உள்ளத்தினில்; மேதகு ஸ்ரீ ராமா".

6 - 2லமேமோ - ப2லமோ.

7 - ம்ரொக்கேரா - ம்ரொக்கெத3னுரா.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
1 - ஸ்தோம - இச்சொல் பன்மையைக் குறிப்பதாகவும், 'புகழ்ச்சி' என்றும் பொருள்படும். ஆனால், புத்தகங்களில் (புவியாள்வோரின்) பன்மையைக் குறிப்பதாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மேலும், 'புகழ்ச்சி' என்ற பொருள் கொள்ளும் வகையில் 'ஸ்தோம' என்ற சொல் இல்லை.

2 - பாத3முலீரா - திருவடிகளைத் தாருமய்யா. இதனை, அனுபல்லவியில் கூறிய 'நலங்கிட்டேனய்யா' என்பதுடன் சேர்த்து பொருள் கொள்ளவேண்டும்.

3 - நலுகு3 - நலங்கு - கால்களில் மஞ்சள், குங்குமம், வாசனைத் திரவியங்களைக் குழைத்து அழகு செய்தல்.

மாரமணன் - இலக்குமி மணாளன் - அரி

Top


Updated on 06 Sep 2009

No comments: