Saturday, September 5, 2009

தியாகராஜ கிருதி - நன்னு ப்3ரோவகனு - ராகம் ஸ1ங்கராப4ரணம் - Nannu Brovakanu - Raga Sankarabharanam - Prahlada Bhakti Vijayam

பல்லவி
நன்னு ப்3ரோவகனு விட3வனுரா ராம

சரணம்
சரணம் 1
காஸுனு வெதுகக3 கன்ன ரத்னமு ரீதி
தோ3ஸமு தொலகி3ம்ப தொ3ரிகி3திவி கானி (நன்னு)


சரணம் 2
அம்ப3லி தினு வேள அம்ரு2தமப்3பி3ன ரீதி
தும்பு3ரு ஸன்னுத தொ3ரிகி3திவி கானி (நன்னு)


சரணம் 3
செய்யலஸின வேள 1தெப்ப தொ3ருகு ரீதி-
நய்யா நா2பாலிடிக3மரிதிவி கானி (நன்னு)


சரணம் 4
ஆட3 போயின தீர்த2மெது3ரைன ரீதி
ஈடு3 ஜோடு3 லேனி இஷ்டுட3வைதிவி (நன்னு)


சரணம் 5
ஸிக்3கு3 போவு வேள சீரலப்3பி3ன ரீதி-
நொக்3கி3 மாயிண்டிகி வச்சிதிவி கானி (நன்னு)


சரணம் 6
ஆக3ம நிக3ம சயார்த2மு நீவனி
த்யாக3ராஜ நுத தலசியுன்னானு ராம (நன்னு)


பொருள் - சுருக்கம்
இராமா! தும்புருவால் போற்றப் பெற்றோனே! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
  • என்னைக் காவாது விடேனய்யா;

    • காசைத் தேட, கண்டெடுத்த இரத்தினம் போன்று, (எனது) குற்றங்களை ஒழிக்க (நீ) கிடைத்தாய்;

    • கூழுண்ணும் வேளை, அமிழ்து கிடைத்தாற் போன்று, (நீ) கிடைத்தாய்;

    • கை சோர்ந்த வேளை, தெப்பம் கிடைத்தாற் போன்று, என் பங்கில் அமர்ந்தாய்;

    • நீராடச்சென்ற புண்ணிய நீர்நிலை எதிர்ப்பட்டாற் போன்று, ஈடு இணையற்ற விருப்பமானவனாகினாய் (நீ);

    • மானமிழக்கும் வேளை புடவைகள் கிடைத்தாற் போன்று, இசைந்து எமதில்லத்திற்கு வந்தாய்;

  • மறைகள், சாத்திரங்களின் உட்பொருள் நீயென்று எண்ணியுள்ளேன்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நன்னு/ ப்3ரோவகனு/ விட3வனுரா/ ராம/
என்னை/ காவாது/ விடேனய்யா/ இராமா/


சரணம்
சரணம் 1
காஸுனு/ வெதுகக3/ கன்ன/ ரத்னமு/ ரீதி/
காசை/ தேட/ கண்டெடுத்த/ இரத்தினம்/ போன்று/

தோ3ஸமு/ தொலகி3ம்ப/ தொ3ரிகி3திவி/ கானி/ (நன்னு)
(எனது) குற்றங்களை/ ஒழிக்க/ (நீ) கிடைத்தாய்/ ஆயினும்/ என்னை...


சரணம் 2
அம்ப3லி/ தினு/ வேள/ அம்ரு2தமு/-அப்3பி3ன/ ரீதி/
கூழ்/ உண்ணும்/ வேளை/ அமிழ்து/ கிடைத்தாற்/ போன்று/

தும்பு3ரு/ ஸன்னுத/ தொ3ரிகி3திவி/ கானி/ (நன்னு)
தும்புருவால்/ போற்றப் பெற்றோனே/ (நீ) கிடைத்தாய்/ ஆயினும்/ என்னை...


சரணம் 3
செய்யி/-அலஸின/ வேள/ தெப்ப/ தொ3ருகு/ ரீதினி/-
கை/ சோர்ந்த/ வேளை/ தெப்பம்/ கிடைத்தாற்/ போன்று/

அய்யா/ நாபாலிடிக3/-அமரிதிவி/ கானி/ (நன்னு)
ஐயா/ என் பங்கில்/ அமர்ந்தாய்/ ஆயினும்/ என்னை...


சரணம் 4
ஆட3/ போயின/ தீர்த2மு/-எது3ரைன/ ரீதி/
நீராட/ சென்ற/ புண்ணிய நீர்நிலை/ எதிர்ப்பட்டாற்/ போன்று/

ஈடு3/ ஜோடு3/ லேனி/ இஷ்டுட3வு/-ஐதிவி/ (நன்னு)
ஈடு/ இணை/ அற்ற/ விருப்பமானவன்/ ஆகினாய்/ (நீ)


சரணம் 5
ஸிக்3கு3/ போவு/ வேள/ சீரலு/-அப்3பி3ன/ ரீதினி/-
மானம்/ இழக்கும்/ வேளை/ புடவைகள்/ கிடைத்தாற்/ போன்று/

ஒக்3கி3/ மா/-இண்டிகி/ வச்சிதிவி/ கானி/ (நன்னு)
இசைந்து/ எமது/ இல்லத்திற்கு/ வந்தாய்/ ஆயினும்/ என்னை...


சரணம் 6
ஆக3ம/ நிக3ம சய/-அர்த2மு/ நீவு/-அனி/
சாத்திரங்கள்/ மறைகளின்/ உட்பொருள்/ நீ/ என்று/

த்யாக3ராஜ/ நுத/ தலசி/-உன்னானு/ ராம/ (நன்னு)
தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/ எண்ணி/ உள்ளேன்/ இராமா!


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - தெப்ப தொ3ருகு - தெப்ப தொ3ரிகின.

2 - பாலிடிக3மரிதிவி - பாலிடினமரிதிவி.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
இப்பாடல் 'பிரகலாத பக்தி விஜயம்' என்ற நாட்டிய நாடகத்தின் அங்கமாகும். இப்பாடலில், பிரகலாதனின் திண்ணமான உள்ளத்தினைத் தியாகராஜர் விவரிக்கின்றார்.

தும்புரு - வானோரின் பாணரரசன்

மானமிழக்கும் வேளை - துரோபதையைக் குறிக்கும்

Top


Updated on 05 Sep 2009

No comments: