Sunday, September 27, 2009

தியாகராஜ கிருதி - விஷ்ணு வாஹனு - ராகம் ஸ1ங்கராப4ரணம் - Vishnu Vaahanu - Raga Sankarabharanam - Prahlada Bhakti Vijayam

பல்லவி
விஷ்ணு வாஹனுண்டி3தி3கோ3 வெட3லெ ஜூட3ரே

அனுபல்லவி
க்ரு2ஷ்ண சரண ப4க்துலலோ கீர்தி க3ல்கு3 பா4க்3யஸா1லி (வி)

சரணம்
சரணம் 1
ரங்க3 பதினி பொங்கு3சு ஹ்ரு2த்3-ரங்க3முனனு தலசி
3ங்க3ரு ஸரி ரங்கு33ல பதங்க3 ராஜு தானனுசுனு (வி)


சரணம் 2
1வருணாலயு மொரலிட3 வினி கருணா பூரிதுடை3
ஹரி ப4க்துல பரிதாபமு ஹரியிந்துனனுசு வேட்3கக3 (வி)


சரணம் 3
ராஜில்லு விராஜாதி4புடீ3 ஜக3முனகேகி3 அஹி
ராஜ ராஜ போ4ஜி த்யாக3ராஜ நுதுனி தா பொக3டு3சு (வி)


பொருள் - சுருக்கம்
  • விஷ்ணு வாகனனாகிய,

  • கண்ணனின் திருவடித் தொண்டர்களில் புகழ்மிக்க, பேறுடைத்த,

  • ஒளிரும் பறவைகள் தலைவனாகிய,

  • பேரரவுகளை உண்போனாகிய,

  • கருடன்,

    • கடலரசன் முறையிட, செவிமடுத்து,

    • கருணை நிறைந்தோனாக,

    • அரி தொண்டர்களின் துயரம் களைவேனென,


    • பொன்னிகர் வண்ணமுடை, பறவைகள் மன்னன் தானென,

    • அரங்க பதியினை, களிப்புடன், இதய அரங்கினில் நினைந்து,

    • தியாகராசன் போற்றுவோனை, தான் புகழ்ந்துகொண்டு,

  • இவ்வுலகிற்குச் செல்ல,

  • இதோ புறப்பட்டனன், கொண்டாட்டமாக.


  • காணீரே!


    பதம் பிரித்தல் - பொருள்
    பல்லவி
    விஷ்ணு/ வாஹனுண்டு3/-இதி3கோ3/ வெட3லெ/ ஜூட3ரே/
    விஷ்ணு/ வாகனன்/ இதோ/ புறப்பட்டனன்/ காணீரே/


    அனுபல்லவி
    க்ரு2ஷ்ண/ சரண/ ப4க்துலலோ/ கீர்தி/ க3ல்கு3/ பா4க்3யஸா1லி/ (வி)
    கண்ணனின்/ திருவடி/ தொண்டர்களில்/ புகழ்/ மிக்க/ பேறுடைத்த/ விஷ்ணு...


    சரணம்
    சரணம் 1
    ரங்க3/ பதினி/ பொங்கு3சு/ ஹ்ரு2த்3/-ரங்க3முனனு/ தலசி/
    அரங்க/ பதியினை/ களிப்புடன்/ இதய/ அரங்கினில்/ நினைந்து/

    3ங்க3ரு/ ஸரி/ ரங்கு3/ க3ல/ பதங்க3/ ராஜு/ தானு/-அனுசுனு/ (வி)
    பொன்/ நிகர்/ வண்ணம்/ உடைத்த/ பறவைகள்/ மன்னன்/ தான்/ என/ விஷ்ணு...


    சரணம் 2
    வருண-ஆலயு/ மொரலு/-இட3/ வினி/ கருணா/ பூரிதுடை3/
    கடலரசன்/ முறை/ இட/ செவிமடுத்து/ கருணை/ நிறைந்தோனாக/

    ஹரி/ ப4க்துல/ பரிதாபமு/ ஹரியிந்துனு/-அனுசு/ வேட்3கக3/ (வி)
    அரி/ தொண்டர்களின்/ துயரம்/ களைவேன்/ என/ கொண்டாட்டமாக/ விஷ்ணு...


    சரணம் 3
    ராஜில்லு/ விராஜ/-அதி4புடு3/-ஈ/ ஜக3முனகு/-ஏகி3/ அஹி/
    ஒளிரும்/ பறவைகள்/ தலைவன்/ இந்த/ உலகிற்கு/ செல்ல/ அரவுகளின்/

    ராஜ ராஜ/ போ4ஜி/ த்யாக3ராஜ/ நுதுனி/ தா/ பொக3டு3சு/ (வி)
    பேரரசர்களை/ உண்போன்/ தியாகராசன்/ போற்றுவோனை/ தான்/ புகழ்ந்துகொண்டு/ விஷ்ணு...


    குறிப்புக்கள் - (Notes)
    வேறுபாடுகள் - (Pathanthara)

    மேற்கோள்கள்

    விளக்கம்
    இப்பாடல் 'பிரகலாத பக்தி விஜயம்' என்ற நாட்டிய நாடகத்தின் அங்கமாகும்.

    1 - வருணாலயு மொரலிட3 - பிரகலாதன், அவனுடைய தந்தையாகிய இரணியனின் ஆணைப்படி, நாக பாசத்தினால் கட்டப்பட்டு, ஆகாயத்திலிருந்து, கடலுக்குள் எறியப்பட்டான். பிரகலாதனை, கடலரசன் காப்பாற்றி, நாக பாசத்தினைத் துண்டிக்க, கருடனை வேண்டி அழைத்தான். கடலரசன் அழைப்புக்கிணங்கி, கருடன் பூமிக்கு விரைந்த காட்சியினைத் தியாகராஜர் சித்திரக்கின்றார்.

    விஷ்ணு வாகனன் - கருடன்
    பேரரவுகளை உண்போன் - கருடன்

    Top


    Updated on 27 Sep 2009

    No comments: