வர லீல கா3ன லோல ஸுர பால ஸுகு3ண ஜால
ப4ரித நீல க3ள ஹ்ரு2தா3லய ஸ்1ருதி மூல ஸு-
கருணாலவால பாலயாஸு1 மாம்
சரணம்
சரணம் 1
ஸுர வந்தி3தாப்த ப்3ரு2ந்த3
வர மந்த3ர த4ர ஸுந்த3ர கர
குந்த3 ரத3னேந்து3 முக2 ஸனந்த3ன நுத
நந்த3 நந்த3னேந்தி3ரா வர (வர)
சரணம் 2
முனி சிந்தனீய ஸ்வாந்த நரகாந்தக
நிக3மாந்த சர ஸு-காந்த குஸ1
லவாந்தர ஹித தா3ந்த குஜ
வஸந்த ஸந்ததாந்தக ஸ்துத (வர)
சரணம் 3
வர பூ4ஷ வம்ஸ1 பூ4ஷ நத போஷண
ம்ரு2து3 பா4ஷண ரிபு பீ4ஷண
நர வேஷ 1நக3 போஷண
வர ஸே1ஷ பூ4ஷ தோஷிதானக4 (வர)
சரணம் 4
ஸு-கவீஸ1 ஹ்ரு2ன்னிவேஸ1 ஜக3-
தீ3ஸ1 கு-ப4வ பாஸ1 ரஹித ஸ்ரீஸ1
ஸுர க3ணேஸ1 ஹித ஜலேஸ1 ஸ1யன
2கேஸ1வாஸ1மீஸ1 து3ர்லப4 (வர)
சரணம் 5
ரண தீ4ர ஸர்வ ஸார ஸு-குமார
பு3த4 விஹார த3னுஜ நீர த4ர
ஸமீரண கருணா ரஸ பரிபூர்ண
ஜார சோர பாஹி மாம் (வர)
சரணம் 6
நர ரக்ஷக நீரஜாக்ஷ வர ராக்ஷஸ
மத3 ஸி1க்ஷக ஸுர யக்ஷ ஸனக
ரு2க்ஷ பதி நுதாக்ஷ ஹரண
பக்ஷ த3க்ஷ ஸி1க்ஷக ப்ரிய (வர)
சரணம் 7
ரகு4 ராஜ த்யாக3ராஜ நுத
ராஜ தி3வஸ ராஜ நயன-போ4
ஜக3த3வனாஜ ஜனக ராஜ ஸுதா
விராஜ ராஜ ராஜ பூஜித (வர)
பொருள் - சுருக்கம்
- திருவிளையாடல்களோனே! இசைப் பிரியனே! வானோரைக் காப்போனே! நற்பண்புகள் நிறைந்தோனே! நீல மிடற்றோன் இதயத்துறையே! மறை மூலமே! பெருங் கருணைக் கடலே!
- வானோரால் தொழப் பெற்றோனே! இனியோர் குழுமத்தோனே! உயர் மந்தர மலை சுமந்தோனே! அழகிய கரங்களோனே! முல்லைப் பற்களோனே! மதி வதனத்தோனே! சனந்தனரால் போற்றப் பெற்றோனே! நந்தனின் மைந்தனே! இந்திரை மணாளனே!
- முனிவருள்ளங்களில் தியானிக்கப் படுவோனே! நரகாசுரனை வதைத்தவனே! மறைமுடிவில் சரிப்போனே! இனிய மனையாள், குசன், இலவன் உள்ளங்களுக்கு இனியோனே! இருடிகளுக்கு, மரங்களுக்கு இளவேனிற்காலம் நிகரே! எவ்வமயமும் நமனால் தொழப் பெற்றோனே!
- உயர் அணிகலன்களோனே! குலத்தின் அணிகலனே! பணிந்தோரைப் பேணுவோனே! மென்மொழியோனே! பகைவருக்கு அச்சமூட்டுவோனே! மனித வேடமணிந்தோனே! சேடனைப் பேணுவோனே! உயர் சேடனையணிவோனால் போற்றப் பெற்றோனே! பாவமற்றோனே!
- நற்கவி மன்னனின் இதயத்துறையே! பல்லுலகிற்கும் ஈசனே! இழிந்த பிறவிக் கடலின் பற்றற்றவனே! மா மணாளா! வானோர்கள் தலைவனுக்கினியோனே! பாற்கடற்றுயில்வோனே! கேசவா! மனவமைதி யற்றோர்களுக்கு எட்டாதவனே!
- போர்க் களத்தில் தீரனே! யாவற்றின் சாரமே! இளைஞனே! அறிஞர் உள்ளத்துறையே! அரக்கரெனும் முகிலை விரட்டும் புயலே! கருணைச் சாறு தளும்புவோனே! ஆய்ச்சியரின் காதலா! வெண்ணெய் திருடியே!
- மனிதரைக் காப்போனே! கமலக்கண்ணா! பேரரக்கனின் செருக்கையழித்தோனே! வானோர், எட்சர்கள், சனக முனிவர் மற்றும் கரடி யரசனால் போற்றப் பெற்றோனே! அட்ச குமாரனை யழித்தோனுக்கு இனியோனே! தக்கனை வதைத்தோனுக்கினியோனே!
- இரகு (குல) மன்னா! தியாகராசனால் போற்றப் பெற்றோனே! மதி, பகலவனைக் கண்களாயுடையோனே! பல்லுலகையும் காப்போனே! பிறவாதவனே! சனகன் மகள், கருடன் மற்றும் பேரரசர்களால் தொழப் பெற்றோனே!
- என்னை விரைந்து காப்பாய்
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
வர/ லீல/ கா3ன/ லோல/ ஸுர/ பால/ ஸுகு3ண ஜால/
திரு/ விளையாடல்களோனே/ இசை/ பிரியனே/ வானோரை/ காப்போனே/ நற்பண்புகள்/
ப4ரித/ நீல/ க3ள/ ஹ்ரு2த்/-ஆலய/ ஸ்1ருதி/ மூல/
நிறைந்தோனே/ நீல/ மிடற்றோன்/ இதயத்து/ உறையே/ மறை/ மூலமே/
ஸு-கருணா/-ஆலவால/ பாலய/-ஆஸு1/ மாம்/
பெருங் கருணை/ கடலே/ காப்பாய்/ விரைந்து/ என்னை/
சரணம்
சரணம் 1
ஸுர/ வந்தி3த/-ஆப்த/ ப்3ரு2ந்த3/
வானோரால்/ தொழப் பெற்றோனே/ இனியோர்/ குழுமத்தோனே/
வர/ மந்த3ர/ த4ர/ ஸுந்த3ர/ கர/
உயர்/ மந்தர/ மலை/ சுமந்தோனே/ அழகிய/ கரங்களோனே/
குந்த3/ ரத3ன/-இந்து3/ முக2/ ஸனந்த3ன/ நுத/
முல்லை/ பற்களோனே/ மதி/ வதனத்தோனே/ சனந்தனரால்/ போற்றப் பெற்றோனே/
நந்த3/ நந்த3ன/-இந்தி3ரா/ வர/ (வர)
நந்தனின்/ மைந்தனே/ இந்திரை/ மணாளனே/
சரணம் 2
முனி/ சிந்தனீய/ ஸ்வாந்த/ நரக/-அந்தக/
முனிவர்களால்/ தியானிக்கப் படுவோனே/ உள்ளங்களில்/ நரகாசுரனை/ வதைத்தவனே/
நிக3ம/-அந்த/ சர/ ஸு-காந்த/ குஸ1/
மறை/ முடிவில்/ சரிப்போனே/ இனிய மனையாள்/ குசன்/
லவ/-அந்தர/ ஹித/ தா3ந்த/ குஜ/
இலவன்/ உள்ளங்களுக்கு/ இனியோனே/ இருடிகளுக்கு/ மரங்களுக்கு/
வஸந்த/ ஸந்தத/-அந்தக/ ஸ்துத/ (வர)
இளவேனிற்காலம் (நிகரே)/ எவ்வமயமும்/ நமனால்/ தொழப் பெற்றோனே/
சரணம் 3
வர/ பூ4ஷ/ வம்ஸ1/ பூ4ஷ/ நத/ போஷண/
உயர்/ அணிகலன்களோனே/ குலத்தின்/ அணிகலனே/ பணிந்தோரை/ பேணுவோனே/
ம்ரு2து3/ பா4ஷண/ ரிபு/ பீ4ஷண/
மென்/ மொழியோனே/ பகைவருக்கு/ அச்சமூட்டுவோனே/
நர/ வேஷ/ நக3/ போஷண/
மனித/ வேடமணிந்தோனே/ சேடனை/ பேணுவோனே/
வர/ ஸே1ஷ/ பூ4ஷ/ தோஷித/-அனக4/ (வர)
உயர்/ சேடனை/ அணிவோனால்/ போற்றப் பெற்றோனே/ பாவமற்றோனே/
சரணம் 4
ஸு-கவி/-ஈஸ1/ ஹ்ரு2த்/-நிவேஸ1/ ஜக3த்-/
நற்கவி/ மன்னனின்/ இதயத்து/ உறையே/ பல்லுலகிற்கும்/
ஈஸ1/ கு-ப4வ/ பாஸ1/ ரஹித/ ஸ்ரீ/-ஈஸ1/
ஈசனே/ இழிந்த பிறவிக் கடலின்/ பற்று/ அற்றவனே/ மா/ மணாளா/
ஸுர க3ண/-ஈஸ1/ ஹித/ ஜல-ஈஸ1/ ஸ1யன/
வானோர்கள்/ தலைவனுக்கு/ இனியோனே/ பாற்கடலில்/ துயில்வோனே/
கேஸ1வ/-அஸ1ம்-ஈஸ1/ து3ர்லப4/ (வர)
கேசவா/ மன அமைதி யற்றோர்களுக்கு/ எட்டாதவனே/
சரணம் 5
ரண/ தீ4ர/ ஸர்வ/ ஸார/ ஸு-குமார/
போர்க் களத்தில்/ தீரனே/ யாவற்றின்/ சாரமே/ இளைஞனே/
பு3த4/ விஹார/ த3னுஜ/ நீர த4ர/
அறிஞர்/ உள்ளத்துறையே/ அரக்கரெனும்/ முகிலை (விரட்டும்)/
ஸமீரண/ கருணா/ ரஸ/ பரிபூர்ண/
புயலே/ கருணை/ சாறு/ தளும்புவோனே/
ஜார/ சோர/ பாஹி/ மாம்/ (வர)
(ஆய்ச்சியரின்) காதலா/ (வெண்ணெய்) திருடியே/ காப்பாய்/ என்னை/
சரணம் 6
நர/ ரக்ஷக/ நீரஜ/-அக்ஷ/ வர ராக்ஷஸ/
மனிதரை/ காப்போனே/ கமல/ கண்ணா/ பேரரக்கனின்/
மத3/ ஸி1க்ஷக/ ஸுர/ யக்ஷ/ ஸனக/
செருக்கை/ அழித்தோனே/ வானோர்/ எட்சர்கள்/ சனக முனிவர்/
ரு2க்ஷ/ பதி/ நுத/-அக்ஷ/ ஹரண/
(மற்றும்) கரடி/ யரசனால்/ போற்றப் பெற்றோனே/ அட்ச குமாரனை/ யழித்தோனுக்கு/
பக்ஷ/ த3க்ஷ/ ஸி1க்ஷக/ ப்ரிய/ (வர)
இனியோனே/ தக்கனை/ வதைத்தோனுக்கு/ இனியோனே/
சரணம் 7
ரகு4/ ராஜ/ த்யாக3ராஜ/ நுத/
இரகு (குல)/ மன்னா/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/
ராஜ/ தி3வஸ ராஜ/ நயன-போ4/
மதி/ பகலவனை/ கண்களாயுடையோனே/
ஜக3த்/-அவன/-அஜ/ ஜனக/ ராஜ/ ஸுதா/
பல்லுலகையும்/ காப்போனே/ பிறவாதவனே/ சனக/ மன்னன்/ மகள்/
விராஜ/ ராஜ ராஜ/ பூஜித/ (வர)
கருடன்/ (மற்றும்) பேரரசர்களால்/ தொழப் பெற்றோனே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
விளக்கம்
1 - நக3 போஷண - 'நக3' என்ற சொல்லுக்கு 'பாம்பு', 'மரம்', 'மலை' ஆகிய பொருட்களுண்டு. அடுத்துவரும், 'போஷண' (பேணுவோன்) என்ற சொல்லினால், சேடனைக் குறிக்கும் 'பாம்பு' என்று கொள்ளலாம். அல்லது, உரலில் கட்டுண்ட கண்ணன், உரலை இழுத்துக்கொண்டு சென்று, முற்றத்தில், நாரதருடைய சாபத்தினால் அர்ஜுன மரங்களாக மாறி நின்றிருந்த, குபேரனின் இரு மகன்களுக்கு, அம்மரங்களைச் சாய்த்து, சாபத்தினின்றும் விடுதலை அளித்த நிகழ்ச்சியையோ குறிக்கலாம். பாகவத புராணம், 10-வது புத்தகம், அத்தியாயம் 10 நோக்கவும்.
2 - கேஸ1வாஸ1மீஸ1 து3ர்லப4 - புத்தகங்களில் இந்த அடைமொழிக்கு, 'கேசவன், யோகியரால் அறியப்பட முடியாதவன்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. அத்தகைய பொருளுக்கு 'ஸ1ம+ஈஸ1' (ஸ1மேஸ1) (கேஸ1வ ஸ1மேஸ1) என்றிருக்கவேண்டும். ஏனென்றால் 'ஸ1ம+ஈஸ1' என்ற சொல் 'ஸ1மேஸ1' என்றதான் சேரும்; 'ஸ1மீஸ1' என்றல்ல. மேலும், 'கேஸ1வா' என்ற சொல்லில் கடைசி எழுத்தான 'வா' நெடிலாகும். எனவே இதனை 'கேஸ1வ+அஸ1ம்+ ஈஸ1' என்று பிரிக்கவேண்டியிருக்கும். 'ஸ1ம்' மற்றும் 'ஸ1ம' என்ற சொற்களுக்கு ஏறக்குறைய ஒரே பொருள்தான். 'அஸ1ம்' என்றால் 'மன அமைதியற்ற' என்று பொருள்படும். எனவே, இதற்கு 'மன அமைதியற்றவருக்கு எட்டாதவன்' என்று பொருள் கொள்ளப்பட்டது. கடைசியில் வரும் 'ஈஸ1' (ஈசன்) என்ற சொல் கேலியாகத் தோன்றுகின்றது.
Top
நீல மிடற்றோன் - சிவன்
மறை முடிவு - உபநிடதங்கள் - வேதாந்தம்
இந்திரை - இலக்குமி
இலவன், குசன் - இராமனின் மைந்தர்கள்
சேடனையணிவோன் - சிவன்
நற்கவி மன்னன் - வால்மீகி முனிவன்
பேரரக்கன் - இராவணன்
எட்சர்கள் - குபேரனின் பணியாளர்
கரடி அரசன் - சாம்பவான்
அட்ச குமாரன் - இராவணனின் மைந்தன்
அட்ச குமாரனை யழித்தோன் - அனுமன்
தக்கன் - பார்வதியின் தந்தை
தக்கனை வதைத்தோன் - சிவன்
Top
Updated on 26 Sep 2009
No comments:
Post a Comment