Wednesday, August 5, 2009

தியாகராஜ கிருதி - ஸார்வபௌ4ம - ராகம் ராக3 பஞ்ஜரம் - Saarvabhauma - Raga Raga Panjaram

பல்லவி
ஸார்வபௌ4ம ஸாகேத ராம
மனஸார பல்க ராதா3 தே3வதா (ஸார்வ)

அனுபல்லவி
பார்வதீ ரமணார்சித பாத3 1ரமா
பதி வந்த்3
பராத்பர தீ3ன ப3ந்தோ4 (ஸார்வ)

சரணம்
முத்3து3 முத்3து33 மாடலாடி3னதி3
முந்து3 ராக ஸதா3 வெத ஜெந்து3சுனு
2கத்3து3 கத்33னுசு சிர காலமுனு
3கரகு3சுண்ட3 வலெனா த்யாக3ராஜ நுத (ஸார்வ)


பொருள் - சுருக்கம்
சார்வபூமனே! சாகேத இராமா! தேவர்களின் சார்வபூமனே! பார்வதி மணாளனால் தொழப்பெற்றத் திருவடியோனே! இலக்குமி மணாளனால் வணங்கப்பெற்றோனே! பராபரனே! எளியோரின் சுற்றமே! தியாகராசனால் போற்றப் பெற்ற சார்வபூமனே!

  • மனதார பகரலாகாதா?

  • (நீ) வெகு இனிமையாகப் பகர்ந்தது எதிர்ப்படாததனால், எவ்வமயமும் துயருற்று, (கருணை) உண்டுண்டென, பல காலமும் உருகிக் கொண்டிருக்க வேணுமோ?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸார்வபௌ4ம/ ஸாகேத/ ராம/
சார்வபூமனே/ சாகேத/ இராமா/

மனஸார/ பல்க ராதா3/ தே3வதா/ (ஸார்வ)
மனதார/ பகரலாகாதா/ தேவர்களின்/ சார்வபூமனே!


அனுபல்லவி
பார்வதீ/ ரமண/-அர்சித/ பாத3/ ரமா/
பார்வதி/ மணாளனால்/ தொழப்பெற்ற/ திருவடியோனே/ இலக்குமி/

பதி/ வந்த்3ய/ பராத்பர/ தீ3ன/ ப3ந்தோ4/ (ஸார்வ)
மணாளனால்/ வணங்கப்பெற்றோனே/ பராபரனே/ எளியோரின்/ சுற்றமே/


சரணம்
முத்3து3 முத்3து33/ மாடலு-ஆடி3னதி3/
(நீ) வெகு இனிமையாக/ பகர்ந்தது/

முந்து3 ராக/ ஸதா3/ வெத/ ஜெந்து3சுனு/
எதிர்ப்படாததனால்/ எவ்வமயமும்/ துயர்/ உற்று/

கத்3து3/ கத்3து3/-அனுசு/ சிர/ காலமுனு/
(கருணை) உண்டு/ உண்டு/ என/ பல/ காலமும்/

கரகு3சு/-உண்ட3/ வலெனா/ த்யாக3ராஜ/ நுத/ (ஸார்வ)
உருகிக் கொண்டு/ இருக்க/ வேணுமோ/ தியாகராசனால்/ போற்றப் பெற்ற/ சார்வபூமனே...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ரமா பதி வந்த்3 - யுக34க்த வந்த்3ய : (யுக3', 'பாத3' என்ற சொல்லுடன் இணையும் - 'பாத3 யுக3' (திருவடியிணை) என). 'ரமா பதி வந்த்3ய' என்பதற்கு 'இலக்குமி மணாளனால் வணங்கப் பெற்ற' எனப் பொருள். தியாகராஜர், பல கீர்த்தனங்களில், இராமனை, படைத்தல் - காத்தல் - சுருட்டல் ஆகிய முத்தொழில் புரியும் மூவருக்கும் மேலான பரம்பொருளாக வழிபடுகின்றார். அடுத்து வரும், 'பராபரனே' என்பதுவே சான்று. அவருடைய 'எவரினி நிர்ணயிஞ்சிரி' என்ற தே3வாம்ரு2தவர்ஷிணி ராகப் பாடலினையும் நோக்கவும். மேலும், 'ப4க்த வந்த்3ய' (தொண்டரால் வணங்கப்பெற்ற) என்பது மிகையானதொன்றாகும். எனவே, 'யுக34க்த வந்த்3ய' என்ற சொற்கள் திணிக்கப்பெற்றதாக (interpolation) நான் கருதுகின்றேன்.

3 - கரகு3சு - கருகு3சு : தெலுங்கு அகராதியின்படி இரண்டு சொற்களுக்கும் பொருளொன்றே.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
2 - கத்3து3 கத்33னுசு - உண்டுண்டென - இறைவன் உள்ளமை திண்ணமென. தியாகராஜரின் 'கத்33னுவாரிகி' என்ற தோடி ராகப் பாடலையும் நோக்கவும்.

சார்வபூமன் - ஒருவனைப் பணியாது உலகாள்வோன்

Top


Updated on 04 Aug 2009

No comments: