Wednesday, August 5, 2009

தியாகராஜ கிருதி - எந்த வேடு3கொந்து3 - ராகம் ஸரஸ்வதி மனோஹரி - Enta Vedukondu - Raga Sarasvati Manohari

பல்லவி
எந்த வேடு3கொந்து3 ராக4
பந்தமேலரா ஓ ராக4

அனுபல்லவி
சிந்த தீர்சுடகெந்த மோடி3ரா
அந்தராத்ம நா 1செந்த ரானு நே(னெந்த)

சரணம்
சித்தமந்து3 நின்னு ஜூசு ஸௌக்2யமே
உத்தமம்ப3னுசுனுப்பொங்கு3சுனு
ஸத்த மாத்ரமா சால நம்மிதினி
ஸார்வபௌ4ம ஸ்ரீ த்யாக3ராஜ நுத (எந்த)


பொருள் - சுருக்கம்
ஓ இராகவா? உள்ளுறை ஆன்மாவே! உண்மை மாத்திரமே! சார்வபூமனே! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!

  • எனதருகில் வர நான் எவ்வளவு வேண்டிக்கொள்வேன்? பிடிவாதம் ஏனய்யா?

  • மனக் கவலை தீர்ப்பதற்கு எவ்வளவு பிணக்கய்யா?

  • உள்ளத்தினில் உன்னைக் காணும் சௌக்கியமே தலை சிறந்ததென, பெருமிதமுற்று, மிக்கு நம்பினேன்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
எந்த/ வேடு3கொந்து3/ ராக4வ/
எவ்வளவு/ வேண்டிக்கொள்வேன்/ இராகவா/

பந்தமு/-ஏலரா/ ஓ/ ராக4வ/
பிடிவாதம்/ ஏனய்யா/ ஓ/ இராகவா/


அனுபல்லவி
சிந்த/ தீர்சுடகு/-எந்த/ மோடி3ரா/
(மனக்) கவலை/ தீர்ப்பதற்கு/ எவ்வளவு/ பிணக்கய்யா/

அந்தராத்ம/ நா/ செந்த/ ரானு/ நேனு/-(எந்த)
உள்ளுறை ஆன்மாவே/ எனது/ அருகில்/ வர/ நான்/ எவ்வளவு...


சரணம்
சித்தமந்து3/ நின்னு/ ஜூசு/ ஸௌக்2யமே/
உள்ளத்தினில்/ உன்னை/ காணும்/ சௌக்கியமே/

உத்தமம்பு3/-அனுசுனு/-உப்பொங்கு3சுனு/
தலை சிறந்தது/ என/ பெருமிதமுற்று/

ஸத்த/ மாத்ரமா/ சால/ நம்மிதினி/
உண்மை/ மாத்திரமே/ மிக்கு/ நம்பினேன்/

ஸார்வபௌ4ம/ ஸ்ரீ த்யாக3ராஜ/ நுத/ (எந்த)
சார்வபூமனே/ ஸ்ரீ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - செந்த ரானு நேனெந்த - செந்த ராக நேனெந்த - செந்த ராக நின்னெந்த : 'செந்த ரானு நேனெந்த' அல்லது 'செந்த ரானு நின்னெந்த' - இச்சொற்களைத்தான் பல்லவியுடன் பொருள்பட இணைக்கமுடியும். 'ராக' என்று வரும் வேறுபாடுகள் தவறாகும்.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
உண்மை மாத்திரமே - சச்சிதானந்தம் (சத்-சித்-ஆனந்தம்) எனப்படும் பரம்பொருளின் இலக்கணத்தினில் 'சத்' எனப்படும் 'உண்மை'யினைக் குறிக்கும்.

சார்வபூமன் - ஒருவனைப் பணியாது உலகாள்வோன்

Top


Updated on 04 Aug 2009

No comments: