Wednesday, August 5, 2009

தியாகராஜ கிருதி - வரதா3 நவனீதாஸ1 - ராகம் ராக3 பஞ்ஜரம் - Varadaa Navaneetaasa - Raga Raga Panjaram

பல்லவி
வரதா3 1நவனீதாஸ1 பாஹி
வர தா3னவ மத3 2நாஸ1 ஏஹி

அனுபல்லவி
1ரதா34 கர வித்4ரு2
31ராஸ1ரதா3ஸு13 ஸும ஸ1ரதா31 ரஹித (வர)

சரணம்
த்3விரதா3த்3பு4த க3மன புர த3ஹன நுத
ஸ்பு2ரதா34ரணாஜராவன பர
3ரதா31ன துரக3 ரத2 4த்3யுதி ஜித
வர தா3ஸ ஜனாக்3ரேஸர
த்யாக3ராஜ (வர)


பொருள் - சுருக்கம்
  • வரதா! வெண்ணெய் விரும்புவோனே! அரக்கரின் செருக்கினையழித்த மேலோனே!

  • முகில் வண்ணா! கையில் அம்பேந்துவோனே! அரக்கரெனும் முகிலை விரட்டும் புயலே! மலர்க் கணையோனை யீன்றோனே! இச்சைகளற்றோனே!

  • வியத்தகு களிறு நடையோனே! புரமெரித்தோனால் போற்றப் பெற்றோனே! சுடர்விடும் அணிகலன்களோனே! மூப்பற்றோரைக் காப்பதில் வல்லவனே! நச்சரவுண்போனின் விரைவுத் தேரோனே! தன்னொளியினால் தலையாய தொண்டர்களின் (மனத்தினை) வென்ற மேலோனே! தியாகராசனின் வரதா!


    • காப்பாய்; அருகில் வாராய்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
வரதா3/ நவனீத/-ஆஸ1/ பாஹி/
வரதா/ வெண்ணெய்/ விரும்புவோனே/ காப்பாய்/

வர/ தா3னவ/ மத3/ நாஸ1/ ஏஹி/
மேலோனே/ அரக்கரின்/ செருக்கினை/ யழித்த/ அருகில் வாராய்/


அனுபல்லவி
1ர-த3/-ஆப4/ கர/ வித்4ரு2த/ ஸ1ர-/
முகில்/ வண்ணா/ கையில்/ ஏந்துவோனே/ அம்பினை/

1ர/-த3/-ஆஸு13/ ஸும/ ஆஸ1ர-/த3/-ஆஸ1/ ரஹித/ (வர)
அரக்கரெனும்/ முகிலை/ (விரட்டும்) புயலே/ மலர்/ கணையோனை/ யீன்றோனே/ இச்சைகள்/ அற்றோனே/


சரணம்
த்3விரத3/-அத்3பு4த/ க3மன/ புர/ த3ஹன/ நுத/
களிற்றின்/ வியத்தகு/ நடையோனே/ புரம்/ எரித்தோனால்/ போற்றப் பெற்றோனே/

ஸ்பு2ரத்/-ஆப4ரண/-அஜர/-அவன/ பர/
சுடர்விடும்/ அணிகலன்களோனே/ மூப்பற்றோரை/ காப்பதில்/ வல்லவனே/

3ர-த3/-அஸ1ன/ துரக3/ ரத2/ த்3யுதி/ ஜித/
நச்சரவு/ உண்போனின்/ விரைவு/ தேரோனே/ தன்னொளியினால்/ (மனத்தினை) வென்றோனே/

வர/ தா3ஸ ஜன/-அக்3ரேஸர/ த்யாக3ராஜ/ (வர)
மேலோனே/ தொண்டர்களின்/ தலையாய/ தியாகராசனின்/ வரதா...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - நவனீதாஸ1 - நவனீதாஸா1.

2 - நாஸ1 - நாஸா1.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
3 - ஆஸ1ரதா3ஸு13 - (ஆஸ1ர+த3+ஆஸு13) : 'ஆஸ1ர' என்ற சொல் 'அரக்கரை'யும், 'ஆஸு13' என்ற சொல் 'புயல்' அல்லது 'காற்றினை'யும் குறிக்கும். தியாகராஜர், பல கீர்த்தனைகளில் 'அரக்கரெனும் முகிலை விரட்டும் புயலே' என்று இறைவனை அழைக்கின்றார். திரு கோவிந்த ராவ் அவர்களின் 'Compositions of Tyagaraja' என்ற புத்தகத்தில், அத்தகைய பொருளே இச்சொற்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இவ்விரு சொற்களுக்குமிடையில், 'முகில்' என்று பொருள்படும் சொல் ஏதும் இல்லை. இடையில் வரும் 'த3' என்ற சொல்லுக்கு 'முகில்' என்று பொருளில்லை. 'ஸ1ர-த3' என்றிருந்தால் 'முகில்' என்று பொருள் கொள்ளலாம் (ஆஸ1ர+ஸ1ர-த3+ஆஸு13). எனவே 'ஸ1ர' என்ற சொல் விடப்பட்டுள்ளதா எனத்தெரியவில்லை. எனவே இச்சொற்களின் மொழிபெயர்ப்பு ஐயத்திற்குரியது.

Top

4 - த்3யுதி ஜித வர தா3ஸ ஜனாக்3ரேஸர - மேற்கூறிய புத்தகத்தில், இச்சொற்களுக்கு 'தன்னொளியினால் சிறந்த தொண்டர்களைக் கவர்ந்தோன்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. 'த்3யுதி ஜித' (ஒளியில் வெல்லும்) என்ற சொற்களை 'மதி' போன்றவற்றுடன் ஒப்பிடுவதற்கு, பல கீர்த்தனைகளில் தியாகராஜர் பயன்படுத்துகின்றார். எனவே இச்சொற்களின் மொழிபெயர்ப்பும் ஐயத்திற்குரியதே.

மேற்கூறிய புத்தகத்தில், இப்பாடல், காஞ்சி வரதனைப் புகழ்ந்து பாடியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மலர்க் கணையோன் - மன்மதன்

மூப்பற்றோர் - வானவர்

நச்சரவுண்போன் - கருடன்

Top


Updated on 03 Aug 2009

No comments: