Wednesday, August 5, 2009

தியாகராஜ கிருதி - ஸ்ரீ ராம ரகு4 ராம - யது3குல காம்போ4ஜி - Sri Rama Raghu Rama - Raga Yadukula Kambhoji

பல்லவி
ஸ்ரீ ராம 1ரகு4 ராம ஸ்1ரு2ங்கா3ர ராமயனி
2சிந்திம்ப ராதே3 ஓ மனஸா

சரணம்
சரணம் 1
தளுகு செக்குல முத்3து3 3பெட்ட கௌஸல்ய முனு
தபமேமி ஜேஸெனோ (கௌஸல்ய
தபமேமி ஜேஸெனோ) தெலிய (ஸ்ரீ)


சரணம் 2
31ரது2டு3 ஸ்ரீ ராம ராராயனி பில்வ முனு
தபமேமி ஜேஸெனோ (த31ரது2டு3
தபமேமி ஜேஸெனோ) தெலிய (ஸ்ரீ)


சரணம் 3
4தனிவார பரிசர்ய ஸேய ஸௌமித்ரி முனு
தபமேமி ஜேஸெனோ (ஸௌமித்ரி
தபமேமி ஜேஸெனோ) தெலிய (ஸ்ரீ)


சரணம் 4
தன வெண்ட சன ஜூசியுப்பொங்க3 கௌஸி1குடு3
தபமேமி ஜேஸெனோ (கௌஸி1குடு3
தபமேமி ஜேஸெனோ) தெலிய (ஸ்ரீ)


சரணம் 5
தாபம்ப3ணகி3 ரூபவதியௌடகஹல்ய
தபமேமி ஜேஸெனோ (அஹல்ய
தபமேமி ஜேஸெனோ) தெலிய (ஸ்ரீ)


சரணம் 6
54ர்மாத்ம சரணம்பு3 ஸோக 6ஸி1 சாபம்பு3
தபமேமி ஜேஸெனோ (சாபம்பு3
தபமேமி ஜேஸெனோ) தெலிய (ஸ்ரீ)


சரணம் 7
தன தனயனொஸகி3 கனுலார கன ஜனகுண்டு3
தபமேமி ஜேஸெனோ (ஜனகுண்டு3
தபமேமி ஜேஸெனோ) தெலிய (ஸ்ரீ)


சரணம் 8
3ஹரம்பு3 கரக3 கரமுனு பட்ட ஜானகி
தபமேமி ஜேஸெனோ (ஜானகி
தபமேமி ஜேஸெனோ) தெலிய (ஸ்ரீ)


சரணம் 9
7த்யாக3ராஜாப்தயனி பொக33 நாரத3 மௌனி
தபமேமி ஜேஸெனோ (ஆ மௌனி
தபமேமி ஜேஸெனோ) தெலிய (ஸ்ரீ)


பொருள் - சுருக்கம்
ஓ மனமே!
  • 'இராமா, இரகு ராமா, சிங்கார ராமா' யென சிந்திக்கலாகாதா?

    1. தளுக்கு கன்னங்களில் முத்தமிட, கௌசலை முன்பு தவமென்ன செய்தனளோ, யாரறிவர்?

    2. தசரதன் 'இராமா, வாடா' யென்றழைக்க, முன்பு தவமென்ன செய்தனனோ, யாரறிவர்?

    3. உளமாரத் தொண்டு செய்ய, இலக்குவன் முன்பு, தவமென்ன செய்தனனோ, யாரறிவர்?

    4. தன் பின்னர் வரக்கண்டு பொங்கிட, கௌசிகன் தவமென்ன செய்தனனோ, யாரறிவர்?

    5. தவிப்படங்கி பொலிவுடையவளாவதற்கு, அகலியை தவமென்ன செய்தனளோ, யாரறிவர்?

    6. அறவுள்ளத்தோனின் திருவடியினைத் தொட, சிவ வில் தவமென்ன செய்ததோ, யாரறிவர்?

    7. தன் மகளையளித்து கண்ணாரக் காண, சனகன் தவமென்ன செய்தனனோ, யாரறிவர்?

    8. உள்ளம் உருக, கரம் பற்ற, சானகி தவமென்ன செய்தனளோ, யாரறிவர்?

    9. 'தியாகராசனுக் கினியோனே' யெனப் புகழ, நாரத முனிவன் தவமென்ன செய்தனனோ, யாரறிவர்?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸ்ரீ ராம/ ரகு4/ ராம/ ஸ்1ரு2ங்கா3ர/ ராம/-அனி/
'ஸ்ரீ ராமா/ ரகு/ ராமா/ சிங்கார/ ராமா/' யென/

சிந்திம்ப ராதே3/ ஓ மனஸா/
சிந்திக்கலாகாதா/ ஓ மனமே/


சரணம்
சரணம் 1
தளுகு/ செக்குல/ முத்3து3/ பெட்ட/ கௌஸல்ய/ முனு/
தளுக்கு/ கன்னங்களில்/ முத்தம்/ இட/ கௌசலை/ முன்பு/

தபமு/-ஏமி/ ஜேஸெனோ/ (கௌஸல்ய/
தவம்/ என்ன/ செய்தனளோ/ (கௌசலை/

தபமு/-ஏமி/ ஜேஸெனோ/) தெலிய/ (ஸ்ரீ)
தவம்/ என்ன/ செய்தனளோ/) யாரறிவர்/?


சரணம் 2
31ரது2டு3/ ஸ்ரீ ராம/ ராரா/-அனி/ பில்வ/ முனு/
தசரதன்/ 'ஸ்ரீ ராமா/ வாடா/' என்று/ அழைக்க/ முன்பு/

தபமு/-ஏமி/ ஜேஸெனோ/ (த31ரது2டு3/
தவம்/ என்ன/ செய்தனனோ/ (தசரதன்/

தபமு/-ஏமி/ ஜேஸெனோ/) தெலிய/ (ஸ்ரீ)
தவம்/ என்ன/ செய்தனனோ/) யாரறிவர்/?


சரணம் 3
தனிவி-ஆர/ பரிசர்ய/ ஸேய/ ஸௌமித்ரி/ முனு/
உளமார/ தொண்டு/ செய்ய/ இலக்குவன்/ முன்பு/

தபமு/-ஏமி/ ஜேஸெனோ/ (ஸௌமித்ரி/
தவம்/ என்ன/ செய்தனனோ/ (இலக்குவன்/

தபமு/-ஏமி/ ஜேஸெனோ/) தெலிய/ (ஸ்ரீ)
தவம்/ என்ன/ செய்தனனோ/) யாரறிவர்/?


சரணம் 4
தன/ வெண்ட/ சன/ ஜூசி/-உப்பொங்க3/ கௌஸி1குடு3/
தன்/ பின்னர்/ வர/ கண்டு/ பொங்கிட/ கௌசிகன்/

தபமு/-ஏமி/ ஜேஸெனோ/ (கௌஸி1குடு3/
தவம்/ என்ன/ செய்தனனோ/ (கௌசிகன்/

தபமு/-ஏமி/ ஜேஸெனோ/) தெலிய/ (ஸ்ரீ)
தவம்/ என்ன/ செய்தனனோ/) யாரறிவர்/?


சரணம் 5
தாபம்பு3/-அணகி3/ ரூபவதி/-ஔடகு/-அஹல்ய/
தவிப்பு/ அடங்கி/ பொலிவுடையவள்/ ஆவதற்கு/ அகலியை/

தபமு/-ஏமி/ ஜேஸெனோ/ (அஹல்ய/
தவம்/ என்ன/ செய்தனளோ/ (அகலியை/

தபமு/-ஏமி/ ஜேஸெனோ/) தெலிய/ (ஸ்ரீ)
தவம்/ என்ன/ செய்தனளோ/) யாரறிவர்/?


சரணம் 6
4ர்மாத்ம/ சரணம்பு3/ ஸோக/ ஸி1வ/ சாபம்பு3/
அறவுள்ளத்தோனின்/ திருவடியினை/ தொட/ சிவ/ வில்/

தபமு/-ஏமி/ ஜேஸெனோ/ (சாபம்பு3/
தவம்/ என்ன/ செய்ததோ/ (வில்/

தபமு/-ஏமி/ ஜேஸெனோ/) தெலிய/ (ஸ்ரீ)
தவம்/ என்ன/ செய்ததோ/) யாரறிவர்/?


சரணம் 7
தன/ தனயனு/-ஒஸகி3/ கனுலார/ கன/ ஜனகுண்டு3/
தன்/ மகளை/ அளித்து/ கண்ணார/ காண/ சனகன்/

தபமு/-ஏமி/ ஜேஸெனோ/ (ஜனகுண்டு3/
தவம்/ என்ன/ செய்தனனோ/ (சனகன்/

தபமு/-ஏமி/ ஜேஸெனோ/) தெலிய/ (ஸ்ரீ)
தவம்/ என்ன/ செய்தனனோ/) யாரறிவர்/?


சரணம் 8
3ஹரம்பு3/ கரக3/ கரமுனு/ பட்ட/ ஜானகி/
உள்ளம்/ உருக/ கரம்/ பற்ற/ சானகி/

தபமு/-ஏமி/ ஜேஸெனோ/ (ஜானகி/
தவம்/ என்ன/ செய்தனளோ/ (சானகி/

தபமு/-ஏமி/ ஜேஸெனோ/) தெலிய/ (ஸ்ரீ)
தவம்/ என்ன/ செய்தனளோ/) யாரறிவர்/?


சரணம் 9
த்யாக3ராஜ/-ஆப்த/-அனி/ பொக33/ நாரத3/ மௌனி/
'தியாகராசனுக்கு/ இனியோனே/' என/ புகழ/ நாரத/ முனிவன்/

தபமு/-ஏமி/ ஜேஸெனோ/ (ஆ/ மௌனி/
தவம்/ என்ன/ செய்தனனோ/ (அந்த/ முனிவன்/

தபமு/-ஏமி/ ஜேஸெனோ/) தெலிய/ (ஸ்ரீ)
தவம்/ என்ன/ செய்தனனோ/) யாரறிவர்/?


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சரணங்களில் 'முனு' என்னும் சொல் புத்தகங்களில் பலவிதமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

சரணங்களில் திருப்பப்பட்ட பகுதிகள் பலவிதமாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

சரணங்களில் 'தெலிய' எனும் சொல் பலவிதமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

இவை யாவற்றிற்கும் திரு கோவிந்த ராவ் அவர்களின் 'The Compositions of Tyagaraja' என்ற புத்தகத்தினில் கொடுக்கப்பட்ட முறையையே இங்கு பின்பற்றப்பட்டுள்ளது.

1 - ரகு4 ராம - ஜய ராம.

2 - சிந்திம்ப - சிந்திஞ்ச.

3 - பெட்ட - பெட்டு : மற்ற சரணங்களில் கொடுத்துள்ளது போன்று ('பில்வ', 'ஸேய', 'உப்பொங்க', 'ஸோக', 'கன') இங்கும் 'பெட்ட' என்றிருக்கவேண்டும். எனினும், 'பெட்டு' சரியென்றால், 'தளுக்குக் கன்னங்களில் முத்தமிடும் கௌசலை தவமென்ன செய்தனளோ' என்று மொழிபெயர்க்கப்படும்.

4 - தனிவார - தனிதபர : 'தனிதபர' சரியெனப்படவில்லை.

5 - 4ர்மாத்ம - த4ர்மாத்மு.

6 - ஸி1 - ஸி1வு.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
2 - சிந்திம்ப ராதே3 - புத்தகங்களில், இதற்கு 'சிந்திக்கலாகாதா' என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. எனினும், சரணங்களில் கொடுக்கப்பட்டுள்ள மேற்கோள்களை நோக்குகையில், 'தவங்கள் பல இயற்றினாலன்றி, வெறும் சிந்தப்பதால் மட்டும், அத்தகைய பேற்றினை அடையமுடியாது' என தியாகராஜர் கூறுவதாகத் தோன்றுகின்றது. எனவே, இதற்கு 'உணர்ந்து பார்க்கவியலாதே' என பொருள் பொருந்தும் எனத் தோன்றுகின்றது. ஆயினும், பரம்பரையாகக் கொள்ளப்பட்ட 'சிந்திக்கலாகாதா' என்ற பொருளே இங்கும் ஏற்கப்பட்டது.

4 - தனிவார - தெலுங்கு அகராதியின்படி, 'தனிவி தீர' என்பது சரியான சொல்லாகும். ஆயினும், 'ஆர' மற்றும் 'தீர' என்ற சொற்களுக்குக் கிட்டத்தட்ட ஒரே பொருளாகும்.

7 - த்யாக3ராஜாப்த - சில புத்தகங்களில் 'தியாகராஜ' என்ற சொல் சிவனைக் குறிப்பதாகப் பொருள் கொள்ளப்பட்டுள்ளது. அது சரியெனப்படவில்லை.

கௌசிகன் - விசுவாமித்திர முனி

Top


Updated on 02 Aug 2009

No comments: