Wednesday, August 5, 2009

தியாகராஜ கிருதி - ஹெச்சரிககா3 - ராகம் யது3குல காம்போ4ஜி - Heccharikagaa - Raga Yadukula Kambhoji

பல்லவி
ஹெச்சரிககா3 ராரா ஹே ராம சந்த்3
ஹெச்சரிககா3 ராரா ஹே ஸுகு3ண ஸாந்த்3

அனுபல்லவி
1பச்ச வில்துனிகன்ன பாலித ஸுரேந்த்3ர (ஹெச்சரிக)

சரணம்
சரணம் 1
கனக மயமௌ மகுட காந்தி மெரயக3னு
4னமைன 2குண்ட3ல யுக3ம்பு3 கத3லக3னு
4னமைன நூபுர யுக3ம்பு34ல்லனனு
ஸனகாது3லெல்ல கனி ஸந்தஸில்லக3னு (ஹெச்சரிக)


சரணம் 2
ஆணி முத்யால ஸருலல்லலாட33னு
வாணி பதீந்த்3ருலிரு வருஸ பொக333னு
மாணிக்ய ஸோபானமந்து3 மெல்லக3னு
வீண பல்குல வினுசு வேட்3க செல்லக3னு (ஹெச்சரிக)


சரணம் 3
நினு ஜூட3 வச்சு ப4கி3னி கரம்பு3 சிலுக
மனஸு ரஞ்ஜில்ல நீ மஹிமலனு பலுக
மினு வாஸுலெல்ல விருலனு சால ஜிலுக
4ன த்யாக3ராஜு கனுகொ3ன முத்3து3 கு3லுக (ஹெச்சரிக)


பொருள் - சுருக்கம்
ஏ இராம சந்திரா! ஏ நற்பண்புக் குவியலே! கரும்பு வில்லோன் தந்தையே! வானோர் தலைவனைப் பேணுவோனே!

  • எச்சரிக்கையாக வாராய்;


    • பொன் மயமான மகுடத்தின் சுடர் ஒளிரவும்,

    • சிறந்த குண்டலச் சோடு அசையவும்,

    • சிறந்த காற்சிலம்பின் இணை கலீரெனவும்,

    • சனகாதியர் யாவரும் கண்டு அகமகிழவும்,

  • எச்சரிக்கையாக வாராய்;


    • ஆணி முத்துச் சரங்கள் (மார்பினில்) அசைந்தாடவும்,

    • வாணி கேள்வனும், இந்திரனும் இரு வரிசைகளில் புகழவும்,

    • மாணிக்கப் படிகளில், மெதுவாக, வீணை இசையினை செவிமடுத்துக் கொண்டு,

    • வேடிக்கை நடந்தேற,

  • எச்சரிக்கையாக வாராய்;


    • உன்னைக் காண வரும் (உனது) தங்கை கரத்தின் கிளி, மனது களிக்க, உனது மகிமைகளைப் பகரவும்,

    • வானுறைவோர் யாவரும் மலர்களை மிக்கு தூவவும்,

    • உயர் தியாகராசன் கண்டுகொள்ள, எழில் குலுங்க

  • எச்சரிக்கையாக வாராய்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஹெச்சரிககா3/ ராரா/ ஹே/ ராம/ சந்த்3ர/
எச்சரிக்கையாக/ வாராய்/ ஏ/ இராம/ சந்திரா/

ஹெச்சரிககா3/ ராரா/ ஹே/ ஸுகு3ண/ ஸாந்த்3ர/
எச்சரிக்கையாக/ வாராய்/ ஏ/ நற்பண்பு/ குவியலே/


அனுபல்லவி
பச்ச/ வில்துனிகி/-அன்ன/ பாலித/ ஸுர/-இந்த்3ர/ (ஹெச்சரிக)
(பச்சை) கரும்பு/ வில்லோன்/ தந்தையே/ பேணுவோனே/ வானோர்/ தலைவனை/ எச்சரிக்கையாக...


சரணம்
சரணம் 1
கனக/ மயமௌ/ மகுட/ காந்தி/ மெரயக3னு/
பொன்/ மயமான/ மகுடத்தின்/ சுடர்/ ஒளிரவும்/

4னமைன/ குண்ட3ல/ யுக3ம்பு3/ கத3லக3னு/
சிறந்த/ குண்டல/ சோடு/ அசையவும்/

4னமைன/ நூபுர/ யுக3ம்பு3/ க4ல்லு/-அனனு/
சிறந்த/ காற்சிலம்பின்/ இணை/ கலீர்/ எனவும்/

ஸனக-ஆது3லு/-எல்ல/ கனி/ ஸந்தஸில்லக3னு/ (ஹெச்சரிக)
சனகாதியர்/ யாவரும்/ கண்டு/ அகமகிழவும்/ எச்சரிக்கையாக...


சரணம் 2
ஆணி/ முத்யால/ ஸருலு/-அல்லலாட33னு/
ஆணி/ முத்து/ சரங்கள்/ (மார்பினில்) அசைந்தாடவும்/

வாணி/ பதி/-இந்த்3ருலு/-இரு/ வருஸ/ பொக333னு/
வாணி/ கேள்வனும்/ இந்திரனும்/ இரு/ வரிசைகளில்/ புகழவும்/

மாணிக்ய/ ஸோபானமந்து3/ மெல்லக3னு/
மாணிக்க/ படிகளில்/ மெதுவாக/

வீண/ பல்குல/ வினுசு/ வேட்3க/ செல்லக3னு/ (ஹெச்சரிக)
வீணை/ இசையினை/ செவிமடுத்துக் கொண்டு/ வேடிக்கை/ நடந்தேற/ எச்சரிக்கையாக...


சரணம் 3
நினு/ ஜூட3/ வச்சு/ ப4கி3னி/ கரம்பு3/ சிலுக/
உன்னை/ காண/ வரும்/ (உனது) தங்கை/ கரத்தின்/ கிளி/

மனஸு/ ரஞ்ஜில்ல/ நீ/ மஹிமலனு/ பலுக/
மனது/ களிக்க/ உனது/ மகிமைகளை/ பகரவும்/

மினு/ வாஸுலு/-எல்ல/ விருலனு/ சால/ ஜிலுக/
வான்/ உறைவோர்/ யாவரும்/ மலர்களை/ மிக்கு/ தூவவும்/

4ன/ த்யாக3ராஜு/ கனுகொ3ன/ முத்3து3/ கு3லுக/ (ஹெச்சரிக)
உயர்/ தியாகராசன்/ கண்டுகொள்ள/ எழில்/ குலுங்க/ எச்சரிக்கையாக...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - குண்ட3ல யுக3ம்பு3 - குண்ட3ல யுக3ம்பு3லு - 'யுக3ம்பு3' என்ற சொல்லுக்கு 'சோடு' அல்லது 'இணை' என்று பொருளாகும். குண்டலங்கள் ஒரு சோடு மட்டுமே அணியப்படுவதனால், பன்மை சொல்லான 'யுக3ம்பு3லு' சரியாகாது. மேலும், அடுத்து வரும் 'நூபுர யுக3ம்பு3'-வையும் நோக்கவும்.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
1 - பச்ச வில்து - (பச்சை) கரும்பு வில்லோன் - மன்மதன்

சனகாதியர் - சனகர், சனந்தனர் ஆகிய பிரமனின் நான்கு மைந்தர்கள்

வாணி கேள்வன் - பிரமன்

தங்கை - பார்வதி

Top


Updated on 03 Aug 2009

No comments: