Friday, August 28, 2009

தியாகராஜ கிருதி - எது3ட நிலிசிதே - ராகம் ஸ1ங்கராப4ரணம் - Eduta Nilichite - Raga Sankarabharanam

பல்லவி
எது3ட நிலிசிதே நீது3 1ஸொம்முலேமி போவுரா

அனுபல்லவி
நுது3டி வ்ராத கானி மட்டு மீரனு
நா 2தரமு தெலிஸி 3மோஸ போது3னா (எது3ட)

சரணம்
சரணம் 1
ஸராஸரிக3 ஜூதுரா நாது3-
யவஸரால தெலியுமு வராலடு33
ஜாலரா ஸகல தே3வ ராய மனவி
வினராக4 ஹர ஸுந்த3ராகார நா(யெது3ட)


சரணம் 2
விதே3ஹஜா ரமண தே3வ ப்3ரோவக3-
னிதே3 ஸமயமன்ய தே3வதல
வேட3தே3 மனஸு தெலியதே3மி ராக4
இதே3டி ஸௌ1ர்யமு பதே3 பதே3 நா(யெது3ட)


சரணம் 3
4தரான தொ3ரகனி பராகு நா-
யெட3னு ராம ஜேஸிதே ஸுராஸுருலு
5மெத்துராயிபுடு3யீ 6ஹராமி தன-
மேலரா ப4க்த த்யாக3ராஜ நுத நா(யெது3ட)


பொருள் - சுருக்கம்
அனைத்து தேவர்கள் தலைவா! பாவங்களைக் களைவோனே! எழிலுருவத்தோனே! வைதேகி மணாளனே, தேவா! இராகவா! இராமா! தொண்டன் தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
  • ஒவ்வோரடியிலும் எனது எதிரில் நின்றால் உனது சொத்தென்ன போகுமய்யா?

  • நெற்றி எழுத்தேயன்றி, மட்டு மீரமாட்டேன்; எனது தரம் தெரிந்தும், மோசம் போவேனோ? (அல்லது)

  • நெற்றி எழுத்தேயன்றி, மட்டு மீர எனது தரமா? தெரிந்தும் மோசம் போவேனோ?

    • சராசரியாக நோக்குவரோ? எனது அவசரங்களை தெரிந்துகொள்வாய்; வரங்கள் வேண்ட இயலேனய்யா; வேண்டுகோளைக் கேளுமய்யா;

    • காப்பதற்கு இதுவே சமயம்; பிற தெய்வங்களை வேண்டாதே (எனது) மனது; தெரியாதா, என்ன? இஃதென்ன சூரத்தனம்?

  • உவமை காணாத புறக்கணிப்பு, என்னிடம் (நீ) செய்தால், வானோரும், அரக்கரும் (கூட) மெச்சுவரோ? இவ்வமயம், இந்த துடுக்குத்தனம் ஏனய்யா?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
எது3ட/ நிலிசிதே/ நீது3/ ஸொம்முலு/-ஏமி/ போவுரா/
எதிரில்/ நின்றால்/ உனது/ சொத்து/ என்ன/ போகுமய்யா/


அனுபல்லவி
நுது3டி/ வ்ராத/ கானி/ மட்டு/ மீரனு/
நெற்றி/ எழுத்தே/ அன்றி/ மட்டு/ மீரமாட்டேன் (மீர)/

நா/ தரமு/ தெலிஸி/ மோஸ/ போது3னா/ (எது3ட)
எனது/ தரம் (தரமா)/ தெரிந்தும்/ மோசம்/ போவேனோ/


சரணம்
சரணம் 1
ஸராஸரிக3/ ஜூதுரா/ நாது3/-
சராசரியாக/ நோக்குவரோ/ எனது/

அவஸரால/ தெலியுமு/ வராலு/-அடு33/
அவசரங்களை/ தெரிந்துகொள்வாய்/ வரங்கள்/ வேண்ட/

ஜாலரா/ ஸகல/ தே3வ/ ராய/ மனவி/
இயலேனய்யா/ அனைத்து/ தேவர்கள்/ தலைவா/ வேண்டுகோளை/

வினரா/-அக4/ ஹர/ ஸுந்த3ர/-ஆகார/ நா-/(எது3ட)
கேளுமய்யா/ பாவங்களை/ களைவோனே/ எழில்/ உருவத்தோனே/ எனது/ எதிரில்...


சரணம் 2
விதே3ஹஜா/ ரமண/ தே3வ/ ப்3ரோவக3னு/-
வைதேகி/ மணாளனே/ தேவா/ காப்பதற்கு/

இதே3/ ஸமயமு/-அன்ய/ தே3வதல/
இதுவே/ சமயம்/ பிற/ தெய்வங்களை/

வேட3தே3/ மனஸு/ தெலியதா3/-ஏமி/ ராக4வ/
வேண்டாதே/ (எனது) மனது/ தெரியாதா/ என்ன/ இராகவா/

இதி3/-ஏடி/ ஸௌ1ர்யமு/ பதே3 பதே3/ நா/-(எது3ட)
இஃது/ என்ன/ சூரத்தனம்/ ஒவ்வோரடியிலும்/ எனது/ எதிரில்...


சரணம் 3
தரான/ தொ3ரகனி/ பராகு/ நா-எட3னு/
உவமை/ காணாத/ புறக்கணிப்பு/ என்னிடம்/

ராம/ ஜேஸிதே/ ஸுர/-அஸுருலு/
இராமா/ (நீ) செய்தால்/ வானோரும்/ அரக்கரும் (கூட)/

மெத்துரா/-இபுடு3/-ஈ/ ஹராமி/ தனமு/-
மெச்சுவரோ/ இவ்வமயம்/ இந்த/ துடுக்கு/ தனம்/

ஏலரா/ ப4க்த/ த்யாக3ராஜ/ நுத/ நா/-(எது3ட)
ஏனய்யா/ தொண்டன்/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/ எனது/ எதிரில்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - தரமு - தரமா : 'தரமா' என்ற சொல் சரியானால், அனுபல்லவியின் மொழிபெயர்ப்பு சிறிது மாறுபடும். இரண்டு விதமான மொழிபெயர்ப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

3 - மோஸ போது3னா - மோஸமு போது3னா : இவ்விடத்தில் 'மோஸ போது3னா' என்பதே பொருந்தும்.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
1 - ஸொம்முலேமி போவுரா - சொத்தென்ன போகுமய்யா? 'உனக்கு இதனால் இழப்பு ஒன்றுமில்லை'யென பொருளாகும்.

4 - தரான - இச்சொல்லுக்கு, புத்தகங்களில் 'உவமை' என்ற பொருள்பட கூறப்பட்டுள்ளது. அந்தப் பொருள் இவ்விடத்தில் பொருந்துமானாலும், தெலுங்கில் அத்தகைய பொருள் அச்சொல்லுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. இங்கு 'உவமை' என்றே பொருள் கொள்ளப்பட்டுள்ளது.

5 - மெத்துரா - இவ்விடத்தில், இச்சொல்லுக்கு, 'மெச்சுவரா' என்று பொருளிருக்க வேண்டும். ஆனால், தமிழ்ச்சொல்லுக்கு ஈடான 'மெச்சு' என்ற தெலுங்கு சொல் திரிந்து 'மெச்சுது3ரா' என்றிருக்கவேண்டும். ஆனால் 'மெச்சுது3ரா' 'மெத்துரா' என்று திரியுமா எனத் தெரியவில்லை.

6 - ஹராமி தனம் - தெலுங்கு அகராதியின்படி, இச்சொல்லுக்கு 'துடுக்குத் தனம்' என்ற பொருளாகும். ஆனால் இஃது 'ஹராம்' என்ற அரபிய மொழிச் சொல்லின் உருது மொழித் திரிபாகும். வட இந்தியாவில், இச்சொல் ஒரு ஏச்சாகும். 'ஹராமி' என்றால் 'தந்தைபெயர் தெரியாதவன்' என்று பொருள்.

Top


Updated on 29 Aug 2009

2 comments:

Govindaswamy said...

திரு கோவிந்தன் அவர்களே

சரணம் 1ல் அவஸரால/ தெலியுமு என்பதற்கு அவசரங்களை/ தெரிந்துகொள்வாய் என்று பொருள் கொடுத்துள்ளீர். அவஸரம் தெலுங்கிலும் தமிழிலும் வெவ்வேறு பொருள்களைத் தரும். அவஸரம் என்றால் தேவை (needs) என்று பொருள்.
நன்றி
கோவிந்தசாமி

V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,

அவசரம் என்ற சொல்லுக்கு தெலுங்கிலும் தமிழிலும் கிட்டத்தட்ட ஒரே பொருள்தான். அதாவது ஆங்கிலத்தில் exigency, urgency என. தெலுங்கு அவஸரம்; தமிழ் அவசரம்

வணக்கம்
கோவிந்தன்