Thursday, June 18, 2009

தியாகராஜ கிருதி - நெனருஞ்சினானு - ராகம் மாளவி - Nenarunchinaanu - Raga Maalavi

பல்லவி
நெனருஞ்சினானு அன்னிடிகி 1நிதா3னுட3னி நேனு நீது3பை

அனுபல்லவி
4னாக4 ஜீமூதாஸு13 ஜலதி43ம்பீ4ர நீ பாத3முலபை (நெனரு)

சரணம்
கலிலோ மாடல நேர்சுகொனி காந்தலனு தனயுல ப்3ரோசுடகை
ஸி1லாத்முடை3 பலுக 2நேரனுர ஸ்ரீ த்யாக3ராஜாப்த நீயெட3 (நெனரு)


பொருள் - சுருக்கம்
கொடிய பாவ முகிலை விரட்டும் புயலே! கடல் நிகர் மாட்சிமையுடைத்தோனே! தியாகராசனுக்கு இனியோனே!
  • நான் உந்தன் மீது அன்பு வைத்துள்ளேன், அனைத்திற்கும் (நீ) மூலப்பொருளென;

  • நான் உந்தன் திருவடிகளின் மீது அன்பு வைத்துள்ளேன், அனைத்திற்கும் (நீ) மூலப்பொருளென;

  • கலியில் பேசக் கற்றுக்கொண்டு, மனைவியையும், மக்களையும் காப்பதற்கென, கல் மனத்தோனாகிப் பகர நேரேனய்யா;

  • உன்னிடம் அன்பு வைத்துள்ளேன், அனைத்திற்கும் (நீ) மூலப்பொருளென.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நெனரு/-உஞ்சினானு/ அன்னிடிகி/ நிதா3னுடு3/-அனி/ நேனு/ நீது3பை/
அன்பு/ வைத்துள்ளேன்/ அனைத்திற்கும்/ (நீ) மூலப்பொருள்/ என/ நான்/ உந்தன் மீது/


அனுபல்லவி
4ன/-அக4/ ஜீமூத/-ஆஸு13/ ஜலதி4/ க3ம்பீ4ர/ நீ/ பாத3முலபை/ (நெனரு)
கொடிய/ பாவ/ முகிலை/ (விரட்டும்) புயலே/ கடல் (நிகர்)/ மாட்சிமையுடைத்தோனே/ உந்தன்/ திருவடிகளின் மீது/ அன்பு...


சரணம்
கலிலோ/ மாடல/ நேர்சுகொனி/ காந்தலனு/ தனயுல/ ப்3ரோசுடகை/
கலியில்/ பேச/ கற்றுக்கொண்டு/ மனைவியையும்/ மக்களையும்/காப்பதற்கென/

ஸி1லா/-ஆத்முடை3/ பலுக/ நேரனுர/ ஸ்ரீ த்யாக3ராஜ/-ஆப்த/ நீயெட3/ (நெனரு)
கல்/ மனத்தோனாகி/ பகர/ நேரேனய்யா/ ஸ்ரீ தியாகராசனுக்கு/ இனியோனே/ உன்னிடம்/ அன்பு...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - நிதா3னுட3னி - நிதா4னுட3னி : 'நிதா3னுடு3' என்ற சொல்லுக்கு 'மூலப்பொருள்' என்றும், 'நிதா4னுடு3' என்ற சொல்லுக்கு 'களஞ்சியம்' என்று பொருளாகும். எல்லா புத்தகங்களிலும் 'மூலப்பொருள்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. அங்ஙனமே இங்கும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

விளக்கம்
2 - நேரனுர - நேரேனய்யா. இது விளி வேற்றுமையாகையினால், சொல்லின் கடைசியில் உயிர்மெய்யெழுத்தாகிய 'ர' -' ரா'-யென (நேரனுரா) நீட்டப்படவேண்டும். எல்லா புத்தகங்களிலும் 'நேரனுர' என்றுதான் கொடுக்கப்பட்டுள்ளது.

Top


Updated on 18 Jun 2009

No comments: