Wednesday, June 17, 2009

தியாகராஜ கிருதி - ப்3ரோவ பா4ரமா - ராகம் ப3ஹுதா3ரி - Brova Bhaaramaa - Raga Bahudaari

பல்லவி
ப்3ரோவ பா4ரமா ரகு4 ராம பு4வனமெல்ல நீவை நன்னொகனி (ப்3ரோவ)

அனுபல்லவி
ஸ்ரீ 1வாஸு தே3 அண்ட3 கோட்ல 2குக்ஷினியுஞ்சுகோ லேதா3 நன்னு (ப்3ரோவ)

சரணம்
கலஸா1ம்பு3தி4லோ த3யதோ3னமருலகையதி3 கா3
4கோ3பிகலகை கொண்ட3லெத்த லேதா3 கருணாகர த்யாக3ராஜுனி (ப்3ரோவ)


பொருள் - சுருக்கம்
இரகு ராமா! வாசு தேவா! கருணாகரா!
  • புவனங்கள் யாவும் நீயாகவிருக்க, என்னொருவனைக் காத்தலுனக்கு பளுவா?

    • கோடிக்கணக்கான அண்டங்களை (உனது) வயிற்றினில் (நீ) கொள்ளவில்லையா?

    • பாற்கடலில், தயையுடன் அமரருக்காகவும், மேலும் கோபியருக்காகவும், மலைகளைச் சுமக்கவில்லையா?

  • புவனங்கள் யாவும் நீயாகவிருக்க, தியாகராசனைக் காத்தலுனக்கு பளுவா?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ப்3ரோவ/ பா4ரமா/ ரகு4/ ராம/ பு4வனமு/-எல்ல/ நீவை/ நன்னு/-ஒகனி/ (ப்3ரோவ)
காத்தல்/ (உனக்கு) பளுவா/ இரகு/ ராமா/ புவனங்கள்/ யாவும்/ நீயாகவிருக்க/ என்/ ஒருவனை/


அனுபல்லவி
ஸ்ரீ வாஸு/ தே3வ/ அண்ட3/ கோட்ல/ குக்ஷினி/-உஞ்சுகோ லேதா3/ நன்னு/ (ப்3ரோவ)
ஸ்ரீ/ வாசு/ தேவா/ அண்டங்கள்/ கோடிகளை/ (உனது) வயிற்றினில்/ (நீ) கொள்ளவில்லையா/ என்னை/ காத்தல்...


சரணம்
கலஸ1/-அம்பு3தி4லோ/ த3யதோனு/-அமருலகை/-அதி3 கா3க/
கலச (பால்)/ கடலில்/ தயையுடன்/ அமரருக்காகவும்/ மேலும்/

கோ3பிகலகை/ கொண்ட3லு/-எத்த லேதா3/ கருணாகர/ த்யாக3ராஜுனி/ (ப்3ரோவ)
கோபியருக்காகவும்/ மலைகளை/ சுமக்கவில்லையா/ கருணாகரா/ தியாகராசனை/ காத்தல்....


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
1 - வாஸு தே3 - வாசு தேவன் - யாவற்றிலும் உள்ளுறைவோன் - விஷ்ணு ஸஹஸ்ர நாமம் (332) நோக்கவும்.

2 - குக்ஷினியுஞ்சுகோ லேதா3 - உனது வயிற்றினில் நீ கொள்ளவில்லையா : இதுகுறித்து பாகவத புராணம், 3-வது புத்தகம், 33-வது அத்தியாயம், (செய்யுள் 4) (தேவஹூதியின் தோத்திரத்தினை) நோக்கவும்.

பாகவத புராணம், 10-வது புத்தகம், 8-வதுஅத்தியாயத்தில், கண்ணன், தன் தாய், யசோதைக்கு தன் வாயினில் அண்டங்களைக் காட்டுதலையும், கீதையில், (அத்தியாயம் 11) கண்ணன், அர்ஜுனனுக்கு விஸ்வ ரூப தரிசனம் காட்டுவதனையும் நோக்கவும்.

இது குறித்து வைணவப் பெருந்தகைகளின் விவரங்களையும் நோக்கவும்.

3 - அமருலகை - அமரருக்காக - ஆமையாக, மந்தர மலையைச் சுமந்தது

4 - கோ3பிகலகை - கோபியருக்காக - கண்ணனாக, கோவர்த்தன மலையைச் சுமந்தது

Top

Updated on 18 Jun 2009

No comments: