Tuesday, June 9, 2009

தியாகராஜ கிருதி - ப4ஜன ஸேயு மார்க3மு - ராகம் நாராயணி - Bhajana Seyu Margamu - Raga Narayani

பல்லவி
4ஜன ஸேயு மார்க3முனு ஜூபவே பரம
பா43வத பா43தே4ய ஸத்3-(ப4ஜன)

அனுபல்லவி
அஜுடு3 1ருத்3ராக2ண்ட3 பவனஜ
2விஜயாது3லு கு3மி கூடி3 நீது3 சரண (ப4ஜன)

சரணம்
ஸகல வேத3 ஸா1ஸ்த்ர புராணாதி3 தீ3
ஸகல மந்த்ர தந்த்ர ரூப ஸீதா-ப
ஸகல தே3வ ரிபு ஸமர ப்ரதாப
ஸாது4 த்யாக3ராஜ நுத ஸ்ரீ ராம 3நிஜ (ப4ஜன)


பொருள் - சுருக்கம்
தலைசிறந்த பாகவதர்களின் பேறே! அனைத்து மறை, சாத்திர, புராணங்களின் ஒளியே! அனைத்து மந்திர, தந்திர உருவத்தோனே! சீதைக் கேள்வா! அனைத்து தேவர் பகைவரின் போரில் புகழ் பெற்றோனே! சாது தியாகராசனால் போற்றப் பெற்ற இராமா!

  • தூயவழிபாடு செய்யும் நெறியினைக் காட்டுவாய்;

  • பிரமன், உருத்திரன், இந்திரன், வாயு மைந்தன், விசயர் ஆகியோர் ஒன்றுகூடி உனது திருவடிகளை வழிபாடு செய்யும் நெறியினைக் காட்டுவாய்;

  • உண்மையான வழிபாடு செய்யும் நெறியினைக் காட்டுவாய்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
4ஜன/ ஸேயு/ மார்க3முனு/ ஜூபவே/ பரம/
வழிபாடு/ செய்யும்/ நெறியினை/ காட்டுவாய்/ தலைசிறந்த/

பா43வத/ பா43தே4ய/ ஸத்3/-(ப4ஜன)
பாகவதர்களின்/ பேறே/ தூய/ வழிபாடு...


அனுபல்லவி
அஜுடு3/ ருத்3ர/-ஆக2ண்ட3ல/ பவனஜ/
பிரமன்/ உருத்திரன்/ இந்திரன்/ வாயு மைந்தன்/

விஜய/-ஆது3லு/ கு3மி/ கூடி3/ நீது3/ சரண/ (ப4ஜன)
விசயர்/ ஆகியோர்/ ஒன்று/ கூடி/ உனது/ திருவடிகளை/ வழிபாடு...


சரணம்
ஸகல/ வேத3/ ஸா1ஸ்த்ர/ புராண-ஆதி3/ தீ3ப/
அனைத்து/ மறை/ சாத்திர/ புராணங்களின்/ ஒளியே/

ஸகல/ மந்த்ர/ தந்த்ர/ ரூப/ ஸீதா/-ப/
அனைத்து/ மந்திர/ தந்திர/ உருவத்தோனே/ சீதை/ கேள்வா/

ஸகல/ தே3வ/ ரிபு/ ஸமர/ ப்ரதாப/
அனைத்து/ தேவர்/ பகைவரின்/ போரில்/ புகழ் பெற்றோனே/

ஸாது4/ த்யாக3ராஜ/ நுத/ ஸ்ரீ ராம/ நிஜ/ (ப4ஜன)
சாது/ தியாகராசனால்/ போற்றப் பெற்ற/ ஸ்ரீ ராமா/ உண்மையான/ வழிபாடு...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ருத்3ராக2ண்ட3 - ருத்3ருடு3 ஆக2ண்ட3

Top

மேற்கோள்கள்

விளக்கம்
2 - விஜய - வைகுண்டத்தின் காவலர்கள் ஜய, விஜயர்கள் அல்லது அருச்சுனன்

3 - நிஜ ப4ஜன - உண்மையான வழிபாடு - தியாகராஜர் 'அதி3 காது34ஜன' என்னும் யது3குல காம்போ4ஜி ராக பாடலில் வழிபாடு எதுவல்ல என்று கூறுகின்றார்.

Top


Updated on 09 Jun 2009

No comments: