Monday, June 8, 2009

தியாகராஜ கிருதி - வினனாஸகொனி - ராகம் ப்ரதாப வராளி - Vinanaasakoni - Raga Prataapa Varali

பல்லவி
வினனாஸகொனியுன்னானுரா விஸ்1வ ரூபுட3 நே

அனுபல்லவி
மனஸாரக3 வீனுல விந்து33 மது4ரமைன பலுகுல (வின)

சரணம்
ஸீதா ரமணிதோ 1ஓமன-கு3ண்டலாடி3 கெ3லுசுட
சேதனொகரிகொகரு ஜூசி ஆ பா4வமெரிகி3
ஸாகேதாதி4ப நிஜமகு3 ப்ரேமதோ பல்குகொன்ன முச்சட
வாதாத்மஜ ப4ரதுலு வின்னடுல த்யாக3ராஜ ஸன்னுத (வின)

பொருள் - சுருக்கம்
அனைத்துலக உருவத்தோனே! சாகேத நகர்த் தலைவா! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
  • நான் கேட்க ஆசைகொண்டுளேனய்யா;

  • மனதார, காதுகளுக்கு விருந்தாக, இனிய (அச்)சொற்களைக் கேட்க நான் ஆசைகொண்டுளேனய்யா;

    • அழகி சீதையுடன் பன்னாங்குழியாடி, வென்றவுடன்,

    • ஒருவரையொருவர் நோக்கி, அந்த உணர்வறிந்து,

    • உண்மையான காதலுடன், நடத்திய உரையாடலை,

    • அனுமனும் பரதனும் கேட்டது போன்று,

  • கேட்க நான் ஆசைகொண்டுளேனய்யா.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
வினனு/-ஆஸகொனி/-உன்னானுரா/ விஸ்1வ/ ரூபுட3/ நே/
கேட்க/ ஆசைகொண்டு/ உள்ளேனய்யா/ அனைத்துலக/ உருவத்தோனே/ நான்/


அனுபல்லவி
மனஸாரக3/ வீனுல/ விந்து33/ மது4ரமைன/ பலுகுல/ (வின)
மனதார/ காதுகளுக்கு/ விருந்தாக/ இனிய/ (அச்)சொற்களை/ கேட்க...


சரணம்
ஸீதா/ ரமணிதோ/ ஓமன-கு3ண்டலு/-ஆடி3/ கெ3லுசுட/
சீதை/ அழகியுடன்/ பன்னாங்குழி/ ஆடி/ வென்ற/

சேதனு/-ஒகரிகி/-ஒகரு/ ஜூசி/ ஆ/ பா4வமு/-எரிகி3/
உடன்/ ஒருவரை/ ஒருவர்/ நோக்கி/ அந்த/ உணர்வு/ அறிந்து/

ஸாகேத/-அதி4ப/ நிஜமகு3/ ப்ரேமதோ/ பல்குகொன்ன/ முச்சட/
சாகேத நகர்/ தலைவா/ உண்மையான/ காதலுடன்/ பேசிய (நடத்திய)/ உரையாடலை/

வாத/-ஆத்மஜ/ ப4ரதுலு/ வின்ன/-அடுல/ த்யாக3ராஜ/ ஸன்னுத/ (வின)
வாயு/ மைந்தனும்/ பரதனும்/ கேட்டது/ போன்று/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/ கேட்க...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
1 - ஓமன-கு3ண்டலு - பன்னாங்குழி - பல்லாங்குழி

வால்மீகி ராமாயணத்தில், இந்த நிகழ்ச்சி காணப்படவில்லை. ஆனால், வைணவப் பெருந்தகை, பெரியாழ்வார், தமது திருமொழியில் (1.3.10) (319) கூறியுள்ளது -

"ராமனும் சீதையும் சதுரங்கம் விளையாடி, சீதை வென்றாள். அதற்கு, தண்டனையாக, ராமனை மல்லிகை மலர் மாலையினால் கட்டிப்போட்டாளாம். இந்த நிகழ்ச்சியை, அனுமன், இலங்கையில் சீதையிடம், தான், ராமனின் தூதன் என்பதற்கோர் ஆதாரமாகச் சொன்னான்." அனுமன் தூது

பெரியாழ்வார் திருமொழி

விளக்கம்
சாகேத நகர் - அயோத்தி நகர்

Top

No comments: