Monday, June 1, 2009

தியாகராஜ கிருதி - ஸிக்3கு3 மாலி - ராகம் கேதா3ர கௌ3ள - Siggu Maali - Raga Kedara Gaula

பல்லவி
ஸிக்3கு3 மாலி நா வலெ த4ரனெவ்வரு திருக3 ஜாலரய்ய

அனுபல்லவி
முக்3கு3ரிலோ மேலைன ராம மா
முகா2ப்3ஜ தி3ன ரமண நின்னு நம்மி (ஸிக்3கு3)

சரணம்
சரணம் 1
முந்து33யதோ பல்கினதி3ங்க முந்து3 ராக போயெ
13ந்த3னலதோ தி3னமுலு க33பனு தா3ரி தெலிஸி போயெ
அந்த3ரி சேதனு நா ப்3ரதுகுலிபுடு3 நிந்த3னலகெட3மாயெ
மந்த3ர த42நா ஜீவுடு3 ஜீவனமிந்து3 ஸேயனாயெனனி தெலிஸி (ஸிக்3கு3)


சரணம் 2
எல்ல வாரி வலெ ப4வ ஸாக3ரமுனனீத3 மனஸு ராது3
உல்லமுனனு கனி 3நீவு நேனையுண்ட3 தெலிய லேது3
ஒல்லனி பனுலகு பொய்யெடி3 வெஸனமோர்வ தரமு காது3
தல்லடி3ல்லுசுன்னதி3 நா மனஸு தாளது3யிகமீத3யனி தெலிஸி (ஸிக்3கு3)


சரணம் 3
நின்னாட3னு நா மனஸெபுடை3ன நிஜமுக3 ரா லேது3
4வென்னவண்டி நீ சித்தமுனகு நா வெதலு தெலிய லேது3
பன்னக31யன நீ 53யகு நே பாத்ருடு3 கா லேது3
கன்ன தண்ட்3ரி 6த்யாக3ராஜுனிகிங்க கருண ஜூட3 லேத3னி தெலிஸி (ஸிக்3கு3)


பொருள் - சுருக்கம்
மூவரில் மேலான இராமா! இலக்குமி வதனத்தாமரையினை மலரச்செய்யும் பகலவனே! மந்தர மலை சுமந்தோனே! அரவணைத் துயில்வோனே! ஈன்ற தந்தையே!

  • உன்னை நம்பி வெட்கம் கெட்டு என்னைப்போல் புவியில் எவரும் திரியமாட்டாரய்யா


    • முன்பு தயையுடன் பகர்ந்தவை இன்னமும் எதிர்ப்படவில்லை;

    • தந்திரங்களுடன் நாட்களைக் கடத்தும் வழி தெரிந்து போனது;

    • எல்லோரிடமும் எனது பிழைப்பு இப்போழ்து நிந்தைக் கிடமானது;

    • எனது சீவன் இங்கு வாழ நேர்ந்ததெனத் தெரிந்தும்

  • வெட்கம் கெட்டு என்னைப்போல் புவியில் எவரும் திரியமாட்டாரய்யா


    • எல்லோரையும் போன்று பிறவிக் கடலில் நீந்த மனது வாராது;

    • உள்ளத்தில் (உன்னைக்) கண்டு நீ நானாகி யிருக்கத் தெரியவில்லை;

    • விருப்பமற்றப் பணிகளுக்குச் செல்லும் வேதனை தாளவியலவில்லை;

    • தள்ளாடுகின்றது எனது மனம்; தாளாது இனியுமெனத் தெரிந்தும்

  • வெட்கம் கெட்டு என்னைப்போல் புவியில் எவரும் திரியமாட்டாரய்யா


    • உன்னைக் குறை சொல்ல எனது மனதென்றும் நிசமாக விழையவில்லை;

    • வெண்ணெய் நிகருனது சிந்தைக்கு எனது துயரம் தெரியவில்லை;

    • உனது கருணைக்கு நான் தகுதி பெறவில்லை;

    • தியாகராசனுக்கு இன்னமும் கருணை காட்டவில்லையெனத் தெரிந்தும்

  • வெட்கம் கெட்டு என்னைப்போல் புவியில் எவரும் திரியமாட்டாரய்யா.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸிக்3கு3/ மாலி/ நா/ வலெ/ த4ரனு/-எவ்வரு/ திருக3/ ஜாலரு/-அய்ய/
வெட்கம்/ கெட்டு/ என்னை/ போல்/ புவியில்/ எவரும்/ திரிய/ மாட்டார்/ அய்யா


அனுபல்லவி
முக்3கு3ரிலோ/ மேலைன/ ராம/ மா/
மூவரில்/ மேலான/ இராமா/ இலக்குமி/

முக2/-அப்3ஜ/ தி3ன/ ரமண/ நின்னு/ நம்மி/ (ஸிக்3கு3)
வதன/ தாமரையினை/ பகலவனே/ மலரச்செய்யும்/ உன்னை/ நம்பி/ வெட்கம் கெட்டு...


சரணம்
சரணம் 1
முந்து3/ த3யதோ/ பல்கினதி3/-இங்க/ முந்து3 ராக போயெ/
முன்பு/ தயையுடன்/ பகர்ந்தவை/ இன்னமும்/ எதிர்ப்படவில்லை/

3ந்த3னலதோ/ தி3னமுலு/ க33பனு/ தா3ரி/ தெலிஸி/ போயெ/
தந்திரங்களுடன்/ நாட்களை/ கடத்தும்/ வழி/ தெரிந்து/ போனது/;

அந்த3ரி சேதனு/ நா/ ப்3ரதுகுலு/-இபுடு3/ நிந்த3னலகு/-எட3மாயெ/
எல்லோரிடமும்/ எனது/ பிழைப்பு/ இப்போழ்து/ நிந்தைக்கு/ இடமானது/

மந்த3ர/ த4ர/ நா/ ஜீவுடு3/ ஜீவனமு/-இந்து3/ ஸேயனாயெனு/-அனி/ தெலிஸி/ (ஸிக்3கு3)
மந்தர/ (மலை) சுமந்தோனே/ எனது/ சீவன்/ வாழ/ இங்கு/ நேர்ந்தது/ என/ தெரிந்தும்/ வெட்கம் கெட்டு...


சரணம் 2
எல்ல வாரி/ வலெ/ ப4வ/ ஸாக3ரமுன/-ஈத3/ மனஸு/ ராது3/
எல்லோரையும்/ போன்று/ பிறவி/ கடலில்/ நீந்த/ மனது/ வாராது/

உல்லமுனனு/ கனி/ நீவு/ நேனை/-உண்ட3/ தெலிய/ லேது3/
உள்ளத்தில்/ (உன்னைக்) கண்டு/ நீ/ நானாகி/ யிருக்க/ தெரியவில்லை/

ஒல்லனி/ பனுலகு/ பொய்யெடி3/ வெஸனமு/-ஓர்வ/ தரமு காது3/
விருப்பமற்ற/ பணிகளுக்கு/ செல்லும்/ வேதனை/ தாள/ இயலவில்லை/

தல்லடி3ல்லுசு-உன்னதி3/ நா/ மனஸு/ தாளது3/-இகமீத3/-அனி/ தெலிஸி/ (ஸிக்3கு3)
தள்ளாடுகின்றது/ எனது/ மனம்/ தாளாது/ இனியும்/ என/ தெரிந்தும்/ வெட்கம் கெட்டு...

சரணம் 3
நின்னு/-ஆட3னு/ நா/ மனஸு/-எபுடை3ன/ நிஜமுக3/ ரா லேது3/
உன்னை/ குறை சொல்ல/ எனது/ மனது/ என்றும்/ நிசமாக/ விழையவில்லை/

வென்ன/-அண்டி/ நீ/ சித்தமுனகு/ நா/ வெதலு/ தெலிய லேது3/
வெண்ணெய்/ நிகர்/ உனது/ சிந்தைக்கு/ எனது/ துயரம்/ தெரியவில்லை/

பன்னக3/ ஸ1யன/ நீ/ த3யகு/ நே/ பாத்ருடு3/ கா லேது3/
அரவணை/ துயில்வோனே/ உனது/ கருணைக்கு/நான்/ தகுதி/ பெறவில்லை/

கன்ன/ தண்ட்3ரி/ த்யாக3ராஜுனிகி/-இங்க/ கருண/ ஜூட3 லேது3/-அனி/ தெலிஸி/ (ஸிக்3கு3)
ஈன்ற/ தந்தையே/ தியாகராசனுக்கு/ இன்னமும்/ கருணை/ காட்டவில்லை/ என/ தெரிந்தும்/ வெட்கம் கெட்டு...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
5 - 3யகு நே - த3யகுனு நே

6 - த்யாக3ராஜுனிகிங்க - த்யாக3ராஜுனிங்க

Top

மேற்கோள்கள்
2 - நா ஜீவுடு3 ஜீவனமிந்து3 ஸேயனாயெ - எனது ஜீவன் இங்கு வாழ நேர்ந்தது - 'எனது ஜீவன்' என்ற சொற்கள் முரண்பாடாகத் தோன்றுகின்றது. மெய்ந்நெறி செல்வோருக்கு ஏற்படும் இடைஞ்சல்கள் குறித்து ஆதி சங்கரர் இயற்றிய 'அபரோக்ஷ அனுபூதி' (நேரிடை உணர்வு) என்ற நூலில் காணலாம்.

"சமாதி நிலையைப் பயிலுகையில், தவிர்க்க இயலாத பல இடைஞ்சல்கள் ஏற்படுகின்றன. அவையாவன - ஆராய்ச்சியில் குறைவு, சோம்பல், புலன் நுகர்ச்சிக்கு இச்சை, உறக்கம், மந்தம், தடுமாற்றம், இன்பங்களை நுகர்தல், சூன்னிய உணர்ச்சி. பரம்பொருளினை அறிய விரும்புவோர் இவ்வித இடைஞ்சல்களை மெதுவாகக் களைந்திடல் வேண்டும்." (127-128) (ஸ்வாமி விமுக்தாநந்தாவின் ஆங்கில மொழி பெயர்ப்பின் தமிழாக்கம்)

3 - நீவு நேனையுண்ட3 - நான் நீயாகியிருக்க - நானே அவன் - அவனே நான் : 'அஹம் ப்3ரஹ்மாஸ்மி' - 'ப்3ரஹ்மைவாஹம்' எனும் மகா வாக்கியங்கள். ஆதி சங்கரர் இயற்றிய 'அபரோக்ஷ அனுபூதி' (நேரிடை உணர்வு) என்ற நூலினை நோக்கவும்.

Top

விளக்கம்
1 - 3ந்த3னலதோ - தந்திரங்களுடன் - இஃது தியாகராஜரைக் குறிக்குமா அல்லது இறைவனைக் குறிக்குமா என்று தெரியவில்லை. வழிவழியாக இச்சொல் இறைவனைக் குறிப்பதாக புத்தகங்களில் கூறப்பட்டுள்ளது.

4 - வென்னவண்டி - வெண்ணெய் நிகர் - சிறிது சூடாக்கினாலும் வெண்ணெய் கரைய ஆரம்பிக்கும். அப்படிப்பட்ட உள்ளத்தினை இறைவன் கொண்டிருந்தும் அவன் மனம் கரையவில்லை என்கின்றார்.

மூவர் - அரி, அரன், பிரமன்

Top


Updated on 01 Jun 2009

No comments: