Tuesday, June 2, 2009

தியாகராஜ கிருதி - இங்கா த3ய - ராகம் நாராயண கௌ3ள - Inkaa Daya - Raga Narayana Gaula

பல்லவி
இங்கா த3ய ராகுண்டே எந்தனி ஸைரிந்துரா

சரணம்
சரணம் 1
ஆஸி1ஞ்சின நன்னேல அடு33டு3கு3கு ராவேல
1வாஸிக3 ஸீதா லோல 2வர தே3ஸி1 பரிபால (இங்கா)


சரணம் 2
எந்தனி தாளுகொந்து3ரா இகனைனனு ராகுந்து3ரா
3இந்தடிகினி பா33ந்து3ரா 4எவரினி வேடு3கொந்து3ரா (இங்கா)


சரணம் 3
5நிர்ஜர வருலிக லேரா நீ 6ஸரி வாரய்யெத3ரா
து3ர்ஜன ஜலத3 ஸமீர தொ37நீவனியுண்டெ33ரா (இங்கா)


சரணம் 4
நயன நிந்தி3த ஸரோஜ நக34ர ஸ்ரீ ரகு4 ராஜ
4ய ஹர ப4க்த ஸமாஜ பாலித த்யாக3ராஜ (இங்கா)


பொருள் - சுருக்கம்
வசதியாக சீதை லோலனே! உயர் ஆசானைப் பேணுவோனே! தீயோரெனும் முகிலை விரட்டும் புயலே! தாமரையைப் பழிக்கும் கண்களோனே! மலையைச் சுமந்த இரகுராசனே! அச்சத்தைப் போக்குவோனே! தொண்டர் குழுமத்துறையே! தியாகராசனைப் பேணுவோனே!

  • இன்னமும் தயை வாராதிருந்தால் எவ்வளவு பொறுப்பேனய்யா?


  • (உன்னை) விரும்பிய என்னையாள ஒவ்வோரடிக்கும் வாராயேனோ?


  • எவ்வளவு தாளுவேனய்யா? இன்னமும் வாராமலிருப்பரோ?

  • இவ்வளவுக்கும் சரியென்பரோ? எவரை வேண்டுவேனய்யா?


  • உயர் வானோர் இங்கிலரோ? உனக்கீடு அவராவரோ?(எனவே)

  • தலைவன் நீயெனவுள்ளேனய்யா;



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
இங்கா/ த3ய/ ராக/-உண்டே/ எந்தனி/ ஸைரிந்துரா/
இன்னமும்/ தயை/ வாராது/ இருந்தால்/ எவ்வளவு/ பொறுப்பேனய்யா/


சரணம்
சரணம் 1
ஆஸி1ஞ்சின/ நன்னு/-ஏல/ அடு3கு3-அடு3கு3கு/ ராவு/-ஏல/
(உன்னை) விரும்பிய/ என்னை/ ஆள/ ஒவ்வோரடிக்கும்/ வாராய்/ ஏனோ/

வாஸிக3/ ஸீதா/ லோல/ வர/ தே3ஸி1க/ பரிபால/ (இங்கா)
வசதியாக/ சீதை/ லோலனே/ உயர்/ ஆசானை/ பேணுவோனே/


சரணம் 2
எந்தனி/ தாளுகொந்து3ரா/ இகனைனனு/ ராக/-உந்து3ரா/
எவ்வளவு/ தாளுவேனய்யா/ இன்னமும்/ வாராமல்/ இருப்பரோ/

இந்தடிகினி/ பா33ந்து3ரா/ எவரினி/ வேடு3கொந்து3ரா/ (இங்கா)
இவ்வளவுக்கும்/ சரியென்பரோ/ எவரை/ வேண்டுவேனய்யா/


சரணம் 3
நிர்ஜர/ வருலு/-இக/ லேரா/ நீ/ ஸரி/ வாரு/-அய்யெத3ரா/
வானோர்/ உயர்/ இங்கு/ இலரோ/ உனக்கு/ ஈடு/ அவர்/ ஆவரோ/ (எனவே)

து3ர்ஜன/ ஜலத3/ ஸமீர/ தொ3ர/ நீவு/-அனி/-உண்டெ33ரா/ (இங்கா)
தீயோரெனும்/ முகிலை (விரட்டும்)/ புயலே/ தலைவன்/ நீ/ என/ உள்ளேனய்யா;


சரணம் 4
நயன/ நிந்தி3த/ ஸரோஜ/ நக3/ த4ர/ ஸ்ரீ ரகு4/ ராஜ/
கண்களோனே/ பழிக்கும்/ தாமரையை/ மலையை/ சுமந்த/ ஸ்ரீ ரகு/ ராசனே/!

4ய/ ஹர/ ப4க்த/ ஸமாஜ/ பாலித/ த்யாக3ராஜ/ (இங்கா)
அச்சத்தை/ போக்குவோனே/ தொண்டர்/ குழுமத்துறையே/ பேணுவோனே/ தியாகராசனை/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
4 - எவரினி - எவரனி : இவ்விடத்தில் 'எவரினி' பொருந்தும்.

6 - ஸரி வாரய்யெத3ரா - ஸரி தனகய்யேரா : இவ்விடத்தில் 'ஸரி வாரய்யெத3ரா' பொருந்தும்.

7 - நீவனியுண்டெ33ரா - நீவனியுன்னாரா

Top

மேற்கோள்கள்

விளக்கம்
1 - வாஸிக3 ஸீதா லோல - வசதியாக சீதை லோலனே! - இறைவன் தொண்டரைக் காப்பதையும் மறந்து சீதையிடம் திளைத்திருப்பதாக.

2 - வர தே3ஸி1 - உயர் ஆசான் - நாரதர் : தியாகராஜர் நாரதரை தனது ஆசானாகக் கருதி வழிபட்டார்

3 - இந்தடிகினி பா33ந்து3ரா - இச்சொற்கள் அனைத்து புத்தகங்களிலும் இங்ஙனமே கொடுக்கப்பட்டுள்ளது. ஆயினும், இவை சரியா என தெரியவில்லை. இச்சொற்களை, 'இவ்வளவுக்கும் சரியென்பரோ?' - 'மற்றோர் ஒப்புக்கொள்வரோ?' என பொருள்பட மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

5 - நிர்ஜர வருலிக லேரா - உயர் வானோர் இங்கிலரோ? - 'இங்குளர்' என பொருள்படும். தியாகராஜர், ராமனை, மும்மூர்த்திகளுக்கும் அப்பாற்பட்ட பரம்பொருளாகக் கருதி வணங்கினார். எனவே 'உயர் வானோர்' என்பது 'சிவன்' போன்ற கடவுளரைக் குறிக்கலாம். அதனால் தான் அடுத்து 'உனக்கு ஈடு அவர் ஆவரோ' என்று கேட்கின்றார்.

Top


Updated on 02 Jun 2009

2 comments:

V Govindan said...

(Comments received by me thru email)

திரு கோவிந்தன் அவர்களே

வாஸிக3 ஸீதா லோல என்பதற்கு வசதியாக சீதை லோலனே என்று பொருள் கொடுக்கப்பட்டுள்ளது. இது அவ்வளவு தெளிவாக இல்லை. – comfortably remains enamoured by sItA என்பது தெளிவாக உள்ளது. நன்கு (சௌகரியமாக) சீதையோடு மகிழ்ந்திருப்போனே என்று தானே பொருள்?

நயன நிந்தி3த ஸரோஜ என்பதற்கு கண்களோனே/ பழிக்கும்/ தாமரையை/ என்பதற்குப் பதிலாக (உன்) கண்கள் பழிக்கும் தாமரையை என்பது அதிகம் பொருத்தமாக இருக்குமா?

வணக்கம்
கோவிந்தசாமி

V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,

'வாஸிக3' என்பதற்கு நான் விளக்கம் தந்துள்ளேன். அதனை நோக்கவும்.

பொருட் சுருக்கத்திற்கும் - பிரித்துப் பொருள் கொள்வதற்கும் சில வேறுபாடுகள் இருக்கும். அதனைப் பொருட்படுத்தவேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

சம்ஸ்கிருதம் கலந்த தெலுங்கு மொழிச் சொல்லமைப்பு தமிழிலிருந்து மாறுபடுவதே இதற்குக் காரணம். வெறும் தெலுங்கானால், தமிழைப் போன்றதே அதன் சொல்லமைப்பும்.

வணக்கம்,
கோவிந்தன்