Saturday, May 30, 2009

தியாகராஜ கிருதி - வேணு கா3ன - ராகம் கேதா3ர கௌ3ள - Venu Gaana - Raga Kedara Gaula

பல்லவி
வேணு கா3ன லோலுனி கன வேயி கன்னுலு 1காவலெனே

அனுபல்லவி
2(அலி) வேணுலெல்ல 3த்3ரு2ஷ்டி சுட்டி வேயுசு ம்ரொக்குசு 4ராக (வேணு)

சரணம்
விகஸித பங்கஜ வத3னுலு விவித43துலனாட33-
நொகரிகொகரு கரமுனனிடி3 ஓர கனுல ஜூட33
ஸு1க ரவமுலு-க3ல தருணுலு ஸொக3ஸுகா3னு பாட33
ஸகல ஸுருலு த்யாக3ராஜ ஸகு2னி வேட33 வச்சு (வேணு)


பொருள் - சுருக்கம்
  • குழலிசை விரும்புவோனைக் காண ஆயிரம் கண்கள் வேண்டுமடி

    • வண்டு குழலியர் யாவரும் கண்ணூறு கழித்துக்கொண்டு, வணங்கிக்கொண்டு வர

  • குழலிசை விரும்புவோனைக் காண ஆயிரம் கண்கள் வேண்டுமடி

    • அலர்ந்த பங்கய வதனத்தினர் வெவ்வேறு நடைகளிலாட,

    • ஒருவருக்கொருவர் கைகளைக் கோர்த்து, ஓரக்கண்களால் நோக்க,

    • கிளிக்குரலுடை வனிதையர் சொகுசாகப் பாட,

    • அனைத்து வானோரும் தியாகராசனின் நண்பனை வேண்ட, எழுந்தருளும்

  • குழலிசை விரும்புவோனைக் காண ஆயிரம் கண்கள் வேண்டுமடி



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
வேணு/ கா3ன/ லோலுனி/ கன/ வேயி/ கன்னுலு/ காவலெனே/
குழல்/ இசை/ விரும்புவோனை/ காண/ ஆயிரம்/ கண்கள்/ வேண்டுமடி/


அனுபல்லவி
(அலி)/ வேணுலு/-எல்ல/ த்3ரு2ஷ்டி/ சுட்டி வேயுசு/ ம்ரொக்குசு/ ராக/ (வேணு)
வண்டு/ குழலியர்/ யாவரும்/ கண்ணூறு/ கழித்துக்கொண்டு/ வணங்கிக்கொண்டு/ வர/ குழலிசை...


சரணம்
விகஸித/ பங்கஜ/ வத3னுலு/ விவித4/ க3துலனு/-ஆட33னு/-
அலர்ந்த/ பங்கய/ வதனத்தினர்/ வெவ்வேறு/ நடைகளில்/ ஆட/

ஒகரிகி/-ஒகரு/ கரமுனனு/-இடி3/ ஓர/ கனுல/ ஜூட33/
ஒருவருக்கு/ ஒருவர்/ கைகளை/ கோர்த்து/ ஓர/ கண்களால்/ நோக்க/

ஸு1க/ ரவமுலு/-க3ல/ தருணுலு/ ஸொக3ஸுகா3னு/ பாட33/
கிளி/ குரல்/ உடை/ வனிதையர்/ சொகுசாக/ பாட/

ஸகல/ ஸுருலு/ த்யாக3ராஜ/ ஸகு2னி/ வேட33/ வச்சு/ (வேணு)
அனைத்து/ வானோரும்/ தியாகராசனின்/ நண்பனை/ வேண்ட/ எழுந்தருளும்/ குழலிசை...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்

விளக்கம்
1 - காவலெனே - வேண்டுமடி - பெண்பால் விளித்தல் - நாயகி பா4வத்தில் அமைந்துள்ள பாடல்

2 - (அலி) - கரு வண்டு - இச்சொல் எல்லா புத்தகங்களிலும் bracket -களில் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம், இந்த சொல், இதற்கு முந்தைய தாள ஆவர்த்தியினைச் சேர்ந்தது என சங்கீதம் அறிந்தவர் கூறுகின்றனர்.

3 - த்3ரு2ஷ்டி சுட்டி வேயுசு - கண்ணூறு கழித்துக்கொண்டு - முக்கியமாக சிறு குழந்தைகளுக்கு தினமும் மாலை வேளையில் தாய்க்குலம் செய்யும் சடங்கு.

4 - ராக - வர - இச்சொல் பெண்களைக் குறிப்பதாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இதனை, இறைவனைக் குறிப்பதாகக் கூட மொழி பெயர்க்கலாம்.

குழலிசை விரும்புவோன் - கண்ணன்

ஓரக்கண்களால் நோக்க - கண்ணனை

தியாகராசனின் நண்பன் - கண்ணன்

Top


Updated on 31 May 2009

No comments: