Sunday, June 14, 2009

தியாகராஜ கிருதி - குவலய த3ள - ராகம் நாட குறஞ்சி - Kuvalaya Dala - Raga Nata Kuranji

பல்லவி
குவலய த3ள நயன ப்3ரோவவே
குந்த3 1குட்3மல ரத3

சரணம்
சரணம் 1
மமத மிஞ்சி நீது3 பைனி
மருலு கொன்ன நேனெந்து3 போது3 (கு)


சரணம் 2
கமனீயானனமுனு 2தலசி நே
கரகி3
நில்வ ஜூட3வேடி கு3ணமு (கு)


சரணம் 3
மனஸு தெலிஸி நீவு நன்னு
3மரசி மரவனட்லுன்னாவு (கு)


சரணம் 4
மஹிலோ கலி ப4யமோ ராவு
மஹிம லேனி தை3வமா நீவு (கு)


சரணம் 5
தே3வ ஸி1ரோ-மணி நீவனுசுனு
ஏ வேள மதி3னி பாடு3சுண்டி (கு)


சரணம் 6
4அன்ய மதமுலெருக3 ஸ்ரீ
ராஜன்ய ப4ஜன ஜேஸிதி மதி3 கரக3 (கு)


சரணம் 7
நேனு பு4வினி மானி நீவு 5க்4ரு2
ஹீனுட3னுசு பேரு ராதோ3யனி
(கு)


சரணம் 8
பு3த்3தி4னொஸகி3 த்யாக3ராஜுனி
வத்33 நிலிசி பூஜ கொனுமு பா33 (கு)


பொருள் - சுருக்கம்
குவளையிதழ்க் கண்ணா! முல்லை மொட்டுப் பல்லோனே! மேதகு மன்னா!

  • காப்பாயய்யா;

  • பாசம் மிகுந்து, உந்தன் மீது காதல் கொண்ட நான், எங்கு போவேன்?

  • (உனது) விரும்பத்தகு வதனத்தினை நினைந்து நான் உருகி நிற்க, நோக்கமாட்டாய்; என்ன பண்பு (இஃது)?

  • மனதறிந்து, நீயென்னை மறந்தும், மறவாததுபோன்றுள்ளாய்;

  • புவியில் கலியின் பயமோ, வரமாட்டாய்? மகிமையற்ற தெய்வமா நீ?

  • தேவ சிரோமணி நீயென எவ்வேளையும் உள்ளத்தினில் பாடிக்கொண்டிருந்தேன்;

  • மற்ற நெறிகளறியேன்; வழிபாடு செய்தேன், உள்ளம் உருக;

  • நான் புவியைத் துறந்தேன் - நீ கருணை யற்றவனென இழுக்கு வாராதோயென;

  • அறிவினையருளி, தியாகராசனின் அருகில் நின்று, பூசையையேற்பாய், நன்கு.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
குவலய/ த3ள/ நயன/ ப்3ரோவவே/
குவளை/ இதழ்/ கண்ணா/ காப்பாயய்யா/

குந்த3/ குட்3மல/ ரத3ன/
முல்லை/ மொட்டு/ பல்லோனே/


சரணம்
சரணம் 1
மமத/ மிஞ்சி/ நீது3/ பைனி/
பாசம்/ மிகுந்து/ உந்தன்/ மீது/

மருலு/ கொன்ன/ நேனு/-எந்து3/ போது3/ (கு)
காதல்/ கொண்ட/ நான்/ எங்கு/ போவேன்/


சரணம் 2
கமனீய/-ஆனனமுனு/ தலசி/ நே/
(உனது) விரும்பத்தகு/ வதனத்தினை/ நினைந்து/ நான்/

கரகி3/ நில்வ/ ஜூட3வு/-ஏடி/ கு3ணமு/ (கு)
உருகி/ நிற்க/ நோக்கமாட்டாய்/ என்ன/ பண்பு (இஃது)/


சரணம் 3
மனஸு/ தெலிஸி/ நீவு/ நன்னு/
மனது/ அறிந்து/ நீ/ என்னை/

மரசி/ மரவனி/-அட்லு/-உன்னாவு/ (கு)
மறந்தும்/ மறவாதது/ போன்று/ உள்ளாய்/


சரணம் 4
மஹிலோ/ கலி/ ப4யமோ/ ராவு/
புவியில்/ கலியின்/ பயமோ/ வரமாட்டாய்/

மஹிம/ லேனி/ தை3வமா/ நீவு/ (கு)
மகிமை/ யற்ற/ தெய்வமா/ நீ/


சரணம் 5
தே3வ/ ஸி1ரோ/-மணி/ நீவு/-அனுசுனு/
தேவ/ சிரோ/ மணி/ நீ/ யென/

ஏ வேள/ மதி3னி/ பாடு3சு/-உண்டி/ (கு)
எவ்வேளையும்/ உள்ளத்தினில்/ பாடிக்கொண்டு/ இருந்தேன்/


சரணம் 6
அன்ய/ மதமுலு/-எருக3/ ஸ்ரீ/
மற்ற/ நெறிகள்/ அறியேன்/ மேதகு/

ராஜன்ய/ ப4ஜன/ ஜேஸிதி/ மதி3/ கரக3/ (கு)
மன்னா/ வழிபாடு/ செய்தேன்/ உள்ளம்/ உருக/


சரணம் 7
நேனு/ பு4வினி/ மானி/ நீவு/ க்4ரு2ண/
நான்/ புவியை/ துறந்தேன்/ - நீ/ கருணை/

ஹீனுடு3/-அனுசு/ பேரு/ ராதோ3/-அனி/ (கு)
அற்றவன்/ என/ இழுக்கு (பெயர்)/ வாராதோ/ என/


சரணம் 8
பு3த்3தி4னி/-ஒஸகி3/ த்யாக3ராஜுனி/
அறிவினை/ அருளி/ தியாகராசனின்/

வத்33/ நிலிசி/ பூஜ/ கொனுமு/ பா33/ (கு)
அருகில்/ நின்று/ பூசையை/ ஏற்பாய்/ நன்கு/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - குட்3மல - குட்மல : இரண்டு சொற்களுக்கும் சரியாகும்.

2 - தலசி நே கரகி3 - தலசுசு கரகி3.

5 - க்4ரு2ண ஹீனுட3னுசு (கருணையற்றவன் என) - கு3ண ஹீனுட3னுசு (பண்பற்றவன் என) : பாடலின் மற்ற சரணங்களில் கூறப்பட்டவற்றினை நோக்குகையில், 'க்4ரு2ண ஹீனுட3னுசு' அதிகம் பொருந்தும்.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
3 - மரசி மரவனட்லு - மறந்தும் மறவாது : முரண்பாடான நடவடிக்கைகள்.

4 - அன்ய மதமுலு - பொதுவாக, தியாகராஜர், 'மதம்' என்ற சொல்லினால், ஆறு விதமான கடவுளர்களின் வழிபாட்டு முறையினை (சிவன், விஷ்ணு, சக்தி, கணபதி, முருகன், சூரியன்) குறிப்பிடுவது வழக்கம். இவ்விடத்தில், அடுத்து வரும் 'பஜனை மட்டும் செய்திருந்தேன்' என்ற சொற்களினால், அப்படிப்பட்ட, 'ஆறு வழிபாட்டு முறை' என பொருள் கொள்ளவியலாது. ஏனெனில், 'பஜனை நெறி' அந்த ஆறு முறைகளுக்குமே பொதுவானது. எனவே, இங்கு 'மற்ற மதம்' என்ற சொல்லினால், பக்தி நெறியன்றி, மற்ற, 'கரும', 'ஞான நெறி'களினைக் குறிப்பதாகக் கொள்ளப்படும்.

5 - க்4ரு2ண ஹீனுட3னுசு - கருணையற்றவனென - புத்தகங்களில் இதற்கு, 'என்னைக் கைவிட்டால் உனக்கு இழுக்கு நேராதோ?' என பொருள் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், சரணத்தின் கடைசியில் வரும், 'அனி' (என) என்ற சொல்லினால், 'கருணையற்றவனென உனக்கு இழுக்கு வருமென, உலகத்தினை நான் துறந்தேன்' என்றுதான் பொருள் கொள்ளமுடியும்.

கலி - கலி யுகம்

தேவ சிரோமணி - தேவரில் தலைசிறந்தவன்

Top


Updated on 15 Jun 2009

No comments: