Monday, June 22, 2009

தியாகராஜ கிருதி - பருலனு வேட3னு - ராகம் ப3லஹம்ஸ - Parulanu Vedanu - Raga Balahamsa

பல்லவி
பருலனு வேட3னு பதித பாவனுடா3

அனுபல்லவி
கரி வரதா3 நீவே 1காங்க்ஷதோ ப்3ரோவுமிக (ப)

சரணம்
அமர வர நீது3 நாமாதிஸ1யம்பே3
ஜீவனமு 2ஸேயுசுன்னானு ஸ்ரீ த்யாக3ராஜ வினுத (ப)


பொருள் - சுருக்கம்
வீழ்ந்தோரை புனிதப்படுத்துவோனே! கரிக்கருள்வோனே! அமரிற் சிறந்தோனே! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
  • பிறரை வேண்டேன்;

  • நீயே விரும்பிக் காப்பாயினியும்;

  • உனது பெயரின் அதிசயமே (நான்) வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கின்றேன்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பருலனு/ வேட3னு/ பதித/ பாவனுடா3/
பிறரை/ வேண்டேன்/ வீழ்ந்தோரை/ புனிதப்படுத்துவோனே/


அனுபல்லவி
கரி/ வரதா3/ நீவே/ காங்க்ஷதோ/ ப்3ரோவுமு/-இக/ (ப)
கரிக்கு/ அருள்வோனே/ நீயே/ விரும்பி/ காப்பாய்/ இனியும்/


சரணம்
அமர/ வர/ நீது3/ நாம/-அதிஸ1யம்பே3/
அமரிற்/ சிறந்தோனே/ உனது/ பெயரின்/ அதிசயமே/

ஜீவனமு/ ஸேயுசு/-உன்னானு/ ஸ்ரீ த்யாக3ராஜ/ வினுத/ (ப)
(நான்) வாழ்க்கை/ நடத்திக்கொண்டு/ இருக்கின்றேன்/ ஸ்ரீ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - காங்க்ஷதோ - ஆகாங்க்ஷதோ : சம்ஸ்கிருத மற்றும் தெலுங்கு அகராதிகளி்ன்படி, இரண்டு சொற்களுக்கும் பொருளொன்றுதான்.

2 - ஸேயுசுன்னானு - ஸேயுன்னானு : 'ஸேயுசுன்னானு' சரியான சொல்லாகும்.

Top



Updated on 22 Jun 2009

No comments: