Saturday, June 20, 2009

தியாகராஜ கிருதி - த3ண்ட3மு - ராகம் ப3லஹம்ஸ - Dandamu - Raga Balahamsa

பல்லவி
13ண்ட3மு பெட்டெத3னுரா கோத3ண்ட3 பாணி ஜூட3ரா

அனுபல்லவி
2அண்ட3 ஸு-வாஹன 3மார்தாண்ட3 சந்த்3ர லோசன
குண்ட3லி ஸ1யன ப்3ரஹ்மாண்ட3 நாயக நீகு (த3)

சரணம்
4பேருகா ப்ரதிஷ்ட2கா ஊருகா நின்னு நம்மிதி
ஊருவாரு வீதி4வாரு ஒக 5ஜாதிவாரு காரு
தா3ரினி செயி பட்டி ப்3ரோவுமு த்யாக3ராஜார்சித நீகு (த3)


பொருள் - சுருக்கம்
கோதண்டபாணீ! கருடனை நல் வாகனமாயுடையோனே! பரிதி மதி கண்களோனே! அரவணையிற்றுயில்வோனே! பேரண்டத் தலைவா! தியாகராசனால் தொழப்பெற்றோனே!
  • உனக்கு தெண்டனிட்டேனய்யா; நோக்குவாயய்யா.

  • பேருக்கா, பதவிக்கா, ஊருக்கா உன்னை நம்பினேன்?

  • ஊரார், தெருவிலுள்ளோர் ஓரெண்ணத்தினரல்லர்;

  • பாதையினில் கைப்பற்றிக் காப்பாயய்யா;(அல்லது)

  • நன்னெறியினில் கைப்பற்றி நடத்துவாயய்யா.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
3ண்ட3மு/ பெட்டெத3னுரா/ கோத3ண்ட3/ பாணி/ ஜூட3ரா/
தெண்டன்/ இட்டேனய்யா/ கோதண்ட/ பாணீ/ நோக்குவாயய்யா/


அனுபல்லவி
அண்ட3ஜ/ ஸு-வாஹன/ மார்தாண்ட3/ சந்த்3ர/ லோசன/
கருடனை/ நல் வாகனமாயுடையோனே/ பரிதி/ மதி/ கண்களோனே/

குண்ட3லி/ ஸ1யன/ ப்3ரஹ்மாண்ட3/ நாயக/ நீகு/ (த3)
அரவு (அணையில்)/ துயில்வோனே/ பேரண்ட/ தலைவா/ உனக்கு/ தெண்டன்...


சரணம்
பேருகா/ ப்ரதிஷ்ட2கா/ ஊருகா/ நின்னு/ நம்மிதி/
பேருக்கா/ பதவிக்கா/ ஊருக்கா/ உன்னை/ நம்பினேன்/

ஊருவாரு/ வீதி4வாரு/ ஒக/ ஜாதிவாரு/ காரு/
ஊரார்/ தெருவிலுள்ளோர்/ ஒரு/ எண்ணத்தினர் (ஜாதியினர்)/ அல்லர்/

தா3ரினி/ செயி/ பட்டி/ ப்3ரோவுமு/ த்யாக3ராஜ/-அர்சித/ நீகு/ (த3)
பாதையினில்/ கை/ பற்றி/ காப்பாயய்யா/ தியாகராசனால்/ தொழப்பெற்றோனே/ உனக்கு/ தெண்டன்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - 3ண்ட3மு பெட்டெத3னுரா - த3ண்ட3மு பெட்டேனுரா.

Top

மேற்கோள்கள்
2 - அண்ட3 - முட்டையினின்றுதித்த - கருடனைக் குறிக்கும். இந்து மதத்தினில் கருடனுக்கு உயர்ந்த இடமுண்டு. கருட புராணம் நோக்கவும்.

3 - மார்தாண்ட3 - உயிரற்ற முட்டை - பரிதியினைக் குறிக்கும். பாகவத புராணம், 5-வது புத்தகம், 20-வது அத்தியாயம், செய்யுள் 44 நோக்கவும்.

Top

விளக்கம்
4 - பேருகா ஊருகா - சொல்வழக்கில் இது புகழினைக் குறிக்கும்.

5 - ஜாதிவாரு காரு - இங்கு 'ஜாதி' என்ற சொல்லுக்கு 'எண்ணம்' அல்லது 'நோக்கு' என்று பொருளாகும். தன்னுடைய வழிபாட்டுக்கு உகந்த சூழ்நிலை இல்லாதிருப்பதனை 'ஊராரும், தெருவிலுள்ளவரும் ஓர் எண்ணத்தினர் அல்லர்' என்று கூறுகின்றார்.

பேரண்டம் - பல்லுலகம்

பாதையினில் கைப்பற்றிக் காப்பாயய்யா - இதனை 'நன்னெறியினில் கைப்பற்றி நடத்துவாயய்யா' என்றும் பொருள் கொள்ளலாம்.

Top


Updated on 20 Jun 2009

No comments: