Wednesday, June 3, 2009

தியாகராஜ கிருதி - இன்னாள்ளு த3ய - ராகம் நாராயண கௌ3ள - Innaallu Daya - Raga Narayana Gaula

பல்லவி
இன்னாள்ளு 13ய ராகுன்ன வைனமேமி
இபுடை3ன தெலுபவய்ய

அனுபல்லவி
2சின்ன நாடனுண்டி3 நின்னே கானி
நேனன்யுல நம்மிதினா ஓ 3ராம (இன்னாள்ளு)

சரணம்
சரணம் 1
அல நாடு3 தரணி ஸுதார்தினி தீர்பனு
வெலஸி நில்வக3 லேதா3 அதி3யு கா3
3லமு ஜூப லேதா3 வானி
நேரமுலகு தாளுகொனி செலிமி ஜேஸி
பத3முல 44க்தினீயக3 லேதா3 நாயந்து3 நீகி(ன்னாள்ளு)


சரணம் 2
4ன க3ஜாஸ்1வமுலு தனகு கலுக3 ஜேயு-
மனி நே நின்னடி3கி3தினா இங்க நே
கனகமிம்மனினானா ஸ்ரீ ராம நா
மனஸுன நினு குல த4னமுக3
ஸம்ரக்ஷணமு ஜேஸிதி கானி மரசிதினா (இன்னாள்ளு)


சரணம் 3
5தல்லி தண்ட்3ருலன்ன தம்முலு நீவனி
உல்லமு ரஞ்ஜில்ல பெத்33லதோனு
கல்லலாட3க மொல்ல ஸுமமுல நீ
சல்லனி 6பத3முல கொல்லலாடு3சு வெத3
சல்லிதி கானி த்யாக3ராஜுனிபை நீகி(ன்னாள்ளு)


பொருள் - சுருக்கம்
ஓ இராமா!
 • என்னிடமுனக்கு இத்தனை நாள் தயை வாராதிருக்கும் விவரமென்ன? இப்போழ்தாவது தெரிவியுமய்யா


 • சிறு வயது முதலே உன்னையேயன்றி நான் மற்றவரை நம்பினேனா?


  • அன்று பரிதி மைந்தனின் துயர் தீர்ப்பதற்கு, ஒளிர்ந்து நிற்கவில்லையா?

  • அஃதன்றி, வல்லமையைக் காட்டவில்லையா?

  • அவனுடைய தவறுகளைப் பொறுத்து, தோழமை கொண்டு, திருவடிகளின் பற்றினையருளவில்லையா?


  • செல்வம், யானை, குதிரைகள் தனக்குண்டாகச் செய்வாயென நானுன்னை வேண்டினேனா?

  • மேலும், நான் பொன் வேண்டினேனா?

  • எனது மனத்தினிலுன்னை குலச் செல்வமாகப் பாதுகாத்தேனேயன்றி, மறந்தேனா?


  • தாய், தந்தையர், அண்ணன், தம்பியர் நீயென உள்ளம் களிக்க,

  • பெரியோரிடம் பொய் பகராது,

  • முல்லை மலர்களை, உனது குளிர்ந்த திருவடிகளைக் கொள்ளை கொண்டு, தூவினேனன்றோ?


 • தியாகராசன் மீதுனக்கு இத்தனை நாள் தயை வாராதிருக்கும் விவரமென்ன? இப்போழ்தாவது தெரிவியுமய்யா!பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
இன்னாள்ளு/ த3ய/ ராக/-உன்ன/ வைனமு/-ஏமி/
இத்தனை நாள்/ தயை/ வாராது/ இருக்கும்/ விவரம்/ என்ன/

இபுடை3ன/ தெலுபு/-அய்ய/
இப்போழ்தாவது/ தெரிவியும்/ அய்யா/


அனுபல்லவி
சின்ன/ நாடனு/-உண்டி3/ நின்னே/ கானி/
சிறு/ வயது/ முதலே/ உன்னையே/ யன்றி/

நேனு/-அன்யுல/ நம்மிதினா/ ஓ/ ராம/ (இன்னாள்ளு)
நான்/ மற்றவரை/ நம்பினேனா/ ஓ/ இராமா/


சரணம்
சரணம் 1
அல நாடு3/ தரணி/ ஸுத/-ஆர்தினி/ தீர்பனு/
அன்று/ பரிதி/ மைந்தனின்/ துயர்/ தீர்ப்பதற்கு/

வெலஸி/ நில்வக3 லேதா3/ அதி3யு/ கா3க/
ஒளிர்ந்து/ நிற்கவில்லையா/ அஃது/ அன்றி/

3லமு/ ஜூப லேதா3/ வானி/
வல்லமையை/ காட்டவில்லையா/ அவனுடைய/

நேரமுலகு/ தாளுகொனி/ செலிமி/ ஜேஸி/
தவறுகளை/ பொறுத்து/ தோழமை/ கொண்டு/

பத3முல/ ப4க்தினி/-ஈயக3 லேதா3/ நா-அந்து3/ நீகு/-(இன்னாள்ளு)
திருவடிகளின்/ பற்றினை/ யருளவில்லையா/ என்னிடம்/ உனக்கு/ இத்தனை நாள்...


சரணம் 2
4ன/ க3ஜ/-அஸ்1வமுலு/ தனகு/ கலுக3/ ஜேயுமு/-
செல்வம்/ யானை/ குதிரைகள்/ தனக்கு/ உண்டாக/ செய்வாய்/

அனி/ நே/ நின்னு/-அடி3கி3தினா/ இங்க/ நே/
என/ நான்/ உன்னை/ வேண்டினேனா/ மேலும்/ நான்/

கனகமு/-இம்மு/-அனினானா/ ஸ்ரீ ராம/ நா/
பொன்/ தருவாய்/ என்றேனா (வேண்டினேனா)/ ஸ்ரீ ராமா/ எனது/

மனஸுன/ நினு/ குல/ த4னமுக3/
மனத்தினில்/ உன்னை/ குல/ செல்வமாக/

ஸம்ரக்ஷணமு ஜேஸிதி/ கானி/ மரசிதினா/ (இன்னாள்ளு)
பாதுகாத்தேனே/ யன்றி/ மறந்தேனா/


சரணம் 3
தல்லி/ தண்ட்3ருலு/-அன்ன/ தம்முலு/ நீவு/-அனி/
தாய்/ தந்தையர்/ அண்ணன்/ தம்பியர்/ நீ/ யென/

உல்லமு/ ரஞ்ஜில்ல/ பெத்33லதோனு/
உள்ளம்/ களிக்க/ பெரியோரிடம்/

கல்லலு/-ஆட3க/ மொல்ல/ ஸுமமுல/ நீ/
பொய்/ பகராது/ முல்லை/ மலர்களை/ உனது/

சல்லனி/ பத3முல/ கொல்லலு/-ஆடு3சு/
குளிர்ந்த/ திருவடிகளை/ கொள்ளை/ கொண்டு/

வெத3/ சல்லிதி/ கானி/ த்யாக3ராஜுனிபை/ நீகு/-(இன்னாள்ளு)
விதை/ இறைத்தேன் (தூவினேன்)/ அன்றோ/ தியாகராசன் மீது/ உனக்கு/ இத்தனை நாள்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - 3ய ராகுன்ன - த3ய ராகுந்த : 'த3ய ராகுந்த' தவறாகும்.

2 - சின்ன நாடனுண்டி3 - சின்ன நாட3னுண்டி3 : 'சின்ன நாடனுண்டி3' சரியான சொல்லாகும்.

3 - ராம (இன்னாள்ளு) - ராம நீகி(ன்னாள்ளு)

4 - 4க்தினீயக3 - ப4க்தீயக3

5 - தல்லி தண்ட்3ருலன்ன - தல்லி தண்ட்3ரியன்ன

6 - பத3முல - பத3மு

Top

மேற்கோள்கள்

விளக்கம்

பரிதி மைந்தன் - சுக்கிரீவன்

Top


Updated on 03 Jun 2009

3 comments:

Govindaswamy said...

அன்புள்ள கோவிந்தன் அவர்களே
சரணம் 3 ல்
விதை இறைத்தேன் (தூவினேன்) அன்றோ என்று பொருள் கொடுத்துள்ளீர்.
‘வெத3’ என்பதைத் தனிச்சொல்லாக எடுத்துக்கொண்டால் அதற்குத் தமிழில் விதை என்று தான் பொருள். ஆனால் வெத3(த்)சல்லு [veda(t)callu] என்பது ஒரே வார்த்தை அதன் பொருள் இவ்வாறு கொடுக்கப்பட்டுள்ளது;
paaRachallu; vyApiMpajEyu; పాఱచల్లు; వ్యాపింపజేయు; பாரசல்லு; வ்யாபி1ம்ப1ஜேயு;
இதற்கு பரவலாகத்தூவு/வாரித்தூவு என்று பொருளல்லவா?
மலர்களை ’விதை’ இறைத்தேன் என்பது பொருத்தமாகத் தோன்றவில்லை.
கோவிந்தசாமி

V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,

தெலுங்கு அகராதியின்படி 'வெத3 சல்லு' என்பதற்கு 'scatter' என்பது பொருளாகும். 'வெத3 சல்லிதி' என்பதற்கு 'தூவினேன்' என்று கொடுத்துள்ளேன். சொற்களைப் பிரிக்கையில் அந்தந்த சொற்களுக்குத் தக்க பொருள் கொடுத்துள்ளேன்.

வணக்கம்,
கோவிந்தன்

Govindaswamy said...
This comment has been removed by a blog administrator.