Thursday, June 4, 2009

தியாகராஜ கிருதி - கத3லுவாடு3 - ராகம் நாராயண கௌ3ள - Kadaluvaadu - Raga Narayana Gaula

பல்லவி
1கத3லுவாடு3 காடே3 ராமுடு3 கத2லென்னோ கலவாடே3

அனுபல்லவி
2மொத3லு தானைனாடே3 3துத3 மொத3லு லேனிவாடை3னாடே3 (கத3லு)

சரணம்
கல்பனலென்னடு3 லேது3 4ஸங்கல்பமுலே கலவாடு3 5ஸே1
தல்ப ஸ1யனுடே3 வாடு3 ஸ்ரீ த்யாக3ராஜ நுதுடை3னாடு3 (கத3லு)


பொருள் - சுருக்கம்
  • நிலை பெயர்பவனன்றே, இராமன்;

  • கதைகளெத்தனையோ உடையவனே!


  • முதல் தானாகினானே!

  • முடிவும் முதலுமற்றவனாகினானே!


  • கற்பனைகளென்றும் இல்லை;

  • சங்கற்பங்களே உடையவன்;

  • அரவு அணையில் துயில்பவன் அவன்;

  • தியாகராசனால் போற்றப் பெற்றோனாகினான்



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
கத3லுவாடு3/ காடே3/ ராமுடு3/ கத2லு/-என்னோ/ கலவாடே3/
நிலை பெயர்பவன்/ அன்றே/ இராமன்/ கதைகள்/ எத்தனையோ/ உடையவனே/


அனுபல்லவி
மொத3லு/ தானு/-ஐனாடே3/ துத3/ மொத3லு/ லேனிவாடு3/-ஐனாடே3/ (கத3லு)
முதல்/ தான்/ ஆகினானே/ முடிவும்/ முதலும்/ அற்றவன்/ ஆகினானே/


சரணம்
கல்பனலு/-என்னடு3/ லேது3/ ஸங்கல்பமுலே/ கலவாடு3/ ஸே1ஷ/
கற்பனைகள்/ என்றும்/ இல்லை/ சங்கற்பங்களே/ உடையவன்/ அரவு (சேடன்)

தல்ப/ ஸ1யனுடே3/ வாடு3/ ஸ்ரீ த்யாக3ராஜ/ நுதுடு3/-ஐனாடு3/ (கத3லு)
அணையில்/ துயில்பவன்/ அவன்/ ஸ்ரீ தியாகராசனால்/ போற்றப் பெற்றோன்/ ஆகினான்/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - கத3லு - கத3லே : மொத3லு - மொத3லே : நுதுடை3னாடு3 - நுதுடை3னாடே3

Top

மேற்கோள்கள்
4 - ஸங்கல்பமுலே கலவாடு3 - சங்கற்பம் - சித்தம் - எண்ணியதை முடித்தல் :

விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தில் (253) இறைவனுக்கோர் பெயர் 'ஸித்34 ஸங்கல்ப' என. உபநிடதங்கள் அவனை 'ஸத்ய ஸங்கல்பவான்' என்று கூறும். இது குறித்து விஷ்ணு ஸஹஸ்ர நாமம், ஆதி சங்கரர் எழுதிய உரையைத் தழுவிய, ஆங்கில மொழிபெயர்ப்பினை நோக்கவும்.

அதற்கு நேரிடையாக, மனிதனின் சங்கற்பங்கள் ஏதோ கோரிக்கைகளுக்காக மேற்கொள்ளப்படுவதனால், அத்தகைய சங்கற்பங்கள் மனிதனை இப்பிறவிக்கடலில் பிணைக்கின்றன. இது குறித்து, கீதையில் (அத்தியாயம் 6, செய்யுள் 24) கண்ணன் கூறியதாவது -

"சங்கற்பங்களினால் உண்டாகும் அனைத்து ஆசைகளையும் மிகுதியின்று கைவிட்டு, பற்பல திசைகளிள் திரியும் அனைத்து புலன்களையும் மனத்தினாலேயே அடக்கு....." (ஸ்வாமி ஸ்வரூபானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்)

5 - ஸே1 - பொதுவாக, இது விஷ்ணுவின் படுக்கையான ஆதிசேடனைக் குறிக்கும். ஆனால் இதன் உட்பொருள் வேறுண்டு. விஷ்ணு, 'ஸே1ஷி' என்றும், அவன் படைப்பனைத்தும் 'ஸே1ஷ' என்றும் கூறப்படும். ஸே1ஷ - ஸே1ஷி (ஆங்கில விளக்கம்) நோக்கவும்.

Top

விளக்கம்
1 - கத3லுவாடு3 காடே3 - நிலை பெயர்பவனன்று - பரம்பொருளினைக் குறிக்கும்

2 - மொத3லு தானைனாடே3 - முதல் தானாகினான் - பிரபஞ்சத்திற்கு ஆதிமூலமாக

3 - துத3 மொத3லு லேனிவாடை3னாடே3 - முடிவும் முதலுமற்றவன் - சனாதனன் - என்றுமிருக்கும் பரம்பொருள்

கதைகளெத்தனையோ - அவதாரங்களைக் குறித்த கதைகள்

Top


Updated on 04 Jun 2009

No comments: