Thursday, May 21, 2009

தியாகராஜ கிருதி - கருணா ஜலதி4 - ராகம் கேதா3ர கௌ3ள - Karunaa Jaladhi - Raga Kedaara Gaula

பல்லவி
கருணா ஜலதி4 1தா31ரதி2
2கமனீய ஸுகு3ண நிதி4

அனுபல்லவி
தருணாருண நிப4 சரணாஸுர மத3
ஹர3ணாஸ்1ரித ஜன ஸ1ரணாத்3பு4த கு3ண (கருணா)

சரணம்
சரணம் 1
மனவினி வினக யோசன ஜேஸிதே நே
வினனய்ய ஸ்ரீ ராம ஓ பரம
பாவன தாரக நாம ஸுகு3ண தா4
ஜனக தனயாவன சதுர்-முக2
ஜனக ஜனக வசன ஸு-பரி-
பாலனமு ஜேஸின வனஜ லோசன
ஸனக நுத மா த4னமு நீவே (கருணா)


சரணம் 2
ஸுர முனி வர நுத ஸரஸமுதோ நன்னு
கருணிஞ்சிதே நீது3 தண்ட்3ரி ஸொம்மு
வெரவக போ நேரது3 எந்து3கு வாது3
ஹரி க3ணாதி4ப பரிசராக3
சர பராத்பர தரமு காதி3
சரண ப4க்தி 4விதரணமுக3னீ
தருணமிதி3 ஸ்ரீ-கர த4ராதி4ப (கருணா)


சரணம் 3
4ன மத3முனனுண்டு3 5ஜனுலனு நேனு
யாசன ஸேயக3 லேனுரா த்யாக3ராஜ
வினுத க்4ரு2ணா ஸாக3ர ஸமீர
தனய ஸேவித 64னத3 நுத
ஸஜ்ஜன மனோஹர க4ன ரவ ஸ்வர
மனஸு சாலா வினது3ராயீ
தனுவு நீத3னி வினுதி ஜேஸெத3 (கருணா)


பொருள் - சுருக்கம்
 • கருணைக் கடலே, தசரதன் மைந்தா! விரும்பத்தகு நற்குணக் கடலே!

 • இளம் விடியற்காலை நிகர் (சிவந்த) திருவடியோனே! அரக்கர் செருக்கினை யழித்தவனே! சார்ந்தோரின் புகலிடமே! வியத்தகு பண்புகளோனே!

 • இராமா! முற்றிலும் தூயோனே! தாரக நாமத்தோனே! நற்குணங்களின் இருப்பிடமே! சனகன் மகளைக் காப்போனே! நான் முகனை ஈன்றோனே! தந்தையின் சொல்லினை சிறக்க நிறைவேற்றிய கமலக் கண்ணா! சனக முனிவரால் போற்றப் பெற்றோனே!

 • தேவர்களின் உயர் முனிவரால் போற்றப் பெற்றவனே! வானரர்கள் தலைவனின் சேவகம் பெற்றோனே! ஆகமங்களின் உள்ளுறையே! பராபரனே! மங்களமருள்வோனே! புவியாள்வோனே!

 • தியாகராசனால் போற்றப் பெற்றோனே! கருணைக் கடலே! வாயு மைந்தனால் தொழப் பெற்றோனே! குபேரனால் போற்றப் பெற்றோனே! நல்லோருள்ளம் கவர்வோனே! கார்முகில் முழக்கம் நிகர் குரலோனே!


  • வேண்டுகோளினைக் கேளாது, யோசனை செய்தால், நான் ஏற்க மாட்டேனய்யா;

  • எமது செல்வம் நீயே;

  • பெருந்தன்மையாக, என்னைக் கருணிப்பதனால் உனது தகப்பன் சொத்து போக நேராது; அஞ்சாதே; எதற்கு வாது?

  • தரமன்று இனியும்; திருவடிப் பற்றினை தாராளமாக வழங்க தருணமிதுவே!

  • செல்வச் செருக்கிலுள்ள மனிதர்களை நான் இரக்கவியலேனய்யா;

  • எனது மனம் சிறிதும் ஏற்காதய்யா;

  • இவ்வுடல் உனதென (உன்னைப்) போற்றி செய்தேன்.பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
கருணா/ ஜலதி4/ தா31ரதி2/
கருணை/ கடலே/ தசரதன் மைந்தா/

கமனீய/ ஸுகு3ண/ நிதி4/
விரும்பத்தகு/ நற்குண/ கடலே/


அனுபல்லவி
தருண/-அருண/ நிப4/ சரண/-அஸுர/ மத3/
இளம்/ விடியற்காலை/ நிகர்/ (சிவந்த) திருவடியோனே/ அரக்கர்/ செருக்கினை/

ஹரண/-ஆஸ்1ரித ஜன/ ஸ1ரண/-அத்3பு4த/ கு3ண/ (கருணா)
அழித்தவனே/ சார்ந்தோரின்/ புகலிடமே/ வியத்தகு/ பண்புகளோனே/


சரணம்
சரணம் 1
மனவினி/ வினக/ யோசன/ ஜேஸிதே/ நே/
வேண்டுகோளினை/ கேளாது/ யோசனை/ செய்தால்/ நான்/

வினனு-/அய்ய/ ஸ்ரீ ராம/ ஓ பரம/
ஏற்க மாட்டேன்/ அய்யா/ ஸ்ரீ ராமா/ ஓ முற்றிலும்/

பாவன/ தாரக/ நாம/ ஸுகு3ண/ தா4ம/
தூயோனே/ தாரக/ நாமத்தோனே/ நற்குணங்களின்/ இருப்பிடமே/

ஜனக/ தனய/-அவன/ சதுர்/-முக2/
சனகன்/ மகளை/ காப்போனே/ நான்/ முகனை/

ஜனக/ ஜனக/ வசன/
ஈன்றோனே/ தந்தையின்/ சொல்லினை/

ஸு-பரிபாலனமு ஜேஸின/ வனஜ/ லோசன/
சிறக்க நிறைவேற்றிய/ கமல/ கண்ணா/

ஸனக/ நுத/ மா/ த4னமு/ நீவே/ (கருணா)
சனக (முனிவரால்)/ போற்றப் பெற்றோனே/ எமது/ செல்வம்/ நீயே/


சரணம் 2
ஸுர/ முனி/ வர/ நுத/ ஸரஸமுதோ/ நன்னு/
தேவர்களின்/ முனிவரால்/ உயர்/ போற்றப் பெற்றவனே/ பெருந்தன்மையாக/ என்னை/

கருணிஞ்சிதே/ நீது3/ தண்ட்3ரி/ ஸொம்மு/
கருணிப்பதனால்/ உனது/ தகப்பன்/ சொத்து/

வெரவக/ போ/ நேரது3/ எந்து3கு/ வாது3/
அஞ்சாதே/ போக/ நேராது/ எதற்கு/ வாது/

ஹரி க3ண/-அதி4ப/ பரிசர/-ஆக3ம/
வானரர்கள்/ தலைவனின்/ சேவகம் பெற்றோனே/ ஆகமங்களின்/

சர/ பராத்பர/ தரமு/ காது3/-இக/
உள்ளுறையே/ பராபரனே/ தரம்/ அன்று/ இனியும்/

சரண/ ப4க்தி/ விதரணமுக3னு/-ஈ/
திருவடி/ பற்றினை/ தாராளமாக/ வழங்க/

தருணமு/-இதி3/ ஸ்ரீ/-கர/ த4ரா/-அதி4ப/ (கருணா)
தருணம்/ இதுவே/ மங்களம்/ அருள்வோனே/ புவி/ ஆள்வோனே/


சரணம் 3
4ன/ மத3முனனு/-உண்டு3/ ஜனுலனு/ நேனு/
செல்வ/ செருக்கில்/ உள்ள/ மனிதர்களை/ நான்/

யாசன/ ஸேயக3 லேனுரா/ த்யாக3ராஜ/
இரக்க/ இயலேனய்யா/ தியாகராசனால்/

வினுத/ க்4ரு2ணா/ ஸாக3ர/ ஸமீர/
போற்றப் பெற்றோனே/ கருணை/ கடலே/ வாயு/

தனய/ ஸேவித/ த4னத3/ நுத/
மைந்தனால்/ தொழப் பெற்றோனே/ குபேரனால்/ போற்றப் பெற்றோனே/

ஸஜ்ஜன/ மனோ/ஹர/ க4ன/ ரவ/ ஸ்வர/
நல்லோர்/ உள்ளம்/ கவர்வோனே/ கார்முகில்/ முழக்கம்/ (நிகர்) குரலோனே/

மனஸு/ சாலா/ வினது3ரா/-ஈ/
(எனது) மனம்/ சிறிதும்/ ஏற்காதய்யா/ இந்த/

தனுவு/ நீதி3/-அனி/ வினுதி/ ஜேஸெத3/ (கருணா)
உடல்/ உனது/ என/ (உன்னை) போற்றி/ செய்தேன்/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - தா31ரதி2 - தா31ரதே2

2 - கமனீய ஸுகு3ண நிதி4 - கல்யாண ஸுகு3ண நிதி4

3 - ஆஸ்1ரித ஜன ஸ1ரண - ஆஸ்1ரித ஜன சரண : இவ்விடத்தில் 'சரண' பொருந்தாது எனக் கருதுகின்றேன்.

4 - விதரணமுக3னீ (விதரணமுக3னு+ஈ) - விதரணமொஸக3னு (விதரணமு+ஒஸக3னு) : 'விதரணம்' என்ற சொல்லுக்கு 'தாராளம்' என்று பொருளாகும். 'ஈ' மற்றும் 'ஒஸகனு' என்ற சொற்கள் 'வழங்க' என்ற பொருள்படும். எனவே, 'விதரணமுக3னு+ஈ' என்பதற்கு 'தாராளமாக வழங்க' என்று பொருளாகும். 'விதரணமு+ஒஸக3னு' என்பதற்கு 'தாராளம் வழங்க' என்று பொருளாகும். ஆகவே 'விதரணமு+ஒஸக3னு' என்பது தவறாகும்.

5 - ஜனுலனு - மனுஜுல

Top

மேற்கோள்கள்
6 - 4னத3 - இது, செல்வம் வழங்கும், 'இலக்குமி'யை அல்லது 'குபேர'னைக் குறிக்கும். அடுத்து வரும் 'நுத' (போற்றப்பெற்ற) என்ற சொல்லினால், இது 'இலக்குமி'யைக் குறிக்காது. எனவே, இங்கு, இச்சொல்லுக்கு, 'குபேரன்' என்று பொருள் கொள்ளப்பட்டது. வால்மீகி ராமாயணம், உத்தர காண்டத்தில் (அத்தியாயம் 41), புஷ்பக விமானத்தினை இராமனுக்கே அனுப்பி வைக்கையில், குபேரன், இராமனைப் புகழ்ந்துரைத்தான்.

Top

விளக்கம்
தாரக நாமம் - பிறவிக் கடலைத் தாண்டுவிக்கும் நாமம்.

தேவர்களின் உயர் முனிவர் - வியாழன் (குரு)

தேவர்களின் உயர் முனிவர் - இதனை 'தேவர்கள் மற்றும் உயர் முனிவர்கள்' என்றும் கொள்ளலாம்.

வானரர்கள் தலைவன் - சுக்கிரீவன்

புவியாள்வோனே - இதனை 'புவிமகள் கேள்வா' என்றும் கொள்ளலாம்.

Top


Updated on 22 May 2009

No comments: