Thursday, May 21, 2009

தியாகராஜ கிருதி - ஓ ஜக3ன்னாதா2 - ராகம் கேதா3ரா கௌ3ள - O Jagannathaa - Raga Kedara Gaula - Prahlaada Bhakti Vijayam

பல்லவி
1ஜக3ன்னாதா2யனி நே பிலிசிதே
2ஒயனி ரா ராதா3

அனுபல்லவி
ராஜீவ நயன ராகேந்து3 வத3
ராஜில்லு ஸீதா ரமணி ஹ்ரு2த்ஸத3ன (ஓ)

சரணம்
சரணம் 1
இதி3 வேள காது3யிக தாள போது3
மதி3னி நீவே கானி மரி க3தி லேது3 (ஓ)


சரணம் 2
இரவொந்த3 ராகயிங்க பராகா
தொ3ர நீவேயனிதோபிக கா3க (ஓ)


சரணம் 3
லாலிஞ்சு ராஜ ரவி கோடி தேஜ
லீலாவதார பாலித த்யாக3ராஜ (ஓ)


பொருள் - சுருக்கம்
  • கமலக் கண்ணா! முழுமதி வதனத்தோனே! ஒளிரும் சீதா ரமணியின் உள்ளத்துறையே!

  • மேலோனே! கோடி பரிதிகள் ஒளியோனே! திருவிளையாடலாய் அவதரித்தவனே! தியாகராசனைப் பேணுவோனே!

    • 'ஓ உலக நாயகா' என நானழைத்தால் 'ஓ'யென வரலாகாதா?

    • இது வேளையன்று; இனியும் தாளவியலாது;

    • உள்ளத்தினில் நீயேயன்றி, வேறு புகலில்லை;

    • திண்ணமாக வாராது, இன்னும் அசட்டையோ?

    • தலைவன் நீயேயென்றேன், பொறுமையிழந்து;

    • தேற்றுவாய்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஓ/ ஜக3ன்னாதா2/-அனி/ நே/ பிலிசிதே/
'ஓ/ உலக நாயகா/' என/ நான்/ அழைத்தால்/

ஒ-/அனி/ ரா ராதா3/
'ஓ'/ யென/ வரலாகாதா/


அனுபல்லவி
ராஜீவ/ நயன/ ராகா-இந்து3/ வத3ன/
கமல/ கண்ணா/ முழுமதி/ வதனத்தோனே/

ராஜில்லு/ ஸீதா/ ரமணி/ ஹ்ரு2த்/-ஸத3ன/ (ஓ)
ஒளிரும்/ சீதா/ ரமணியின்/ உள்ளத்து/ உறையே/


சரணம்
சரணம் 1
இதி3/ வேள/ காது3/-இக/ தாள/ போது3/
இது/ வேளை/ அன்று/ இனியும்/ தாள/ இயலாது/

மதி3னி/ நீவே/ கானி/ மரி/ க3தி/ லேது3/ (ஓ)
உள்ளத்தினில்/ நீயே/ அன்றி/ வேறு/ புகல்/ இல்லை/


சரணம் 2
இரவு-ஒந்த3/ ராக/-இங்க/ பராகா/
திண்ணமாக/ வாராது/ இன்னும்/ அசட்டையோ/

தொ3ர/ நீவே/-அனிதி/-ஓபிக/ கா3க/ (ஓ)
தலைவன்/ நீயே/ யென்றேன்/ பொறுமை/ இன்றி (இழந்து)/


சரணம் 3
லாலிஞ்சு/ ராஜ/ ரவி/ கோடி/ தேஜ/
தேற்றுவாய்/ மேலோனே/ பரிதிகள்/ கோடி/ ஒளியோனே/

லீலா/-அவதார/ பாலித/ த்யாக3ராஜ/ (ஓ)
திருவிளையாடலாய்/ அவதரித்தவனே/ பேணுவோனே/ தியாகராசனை/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

1 - ஜக3ன்னாதா2 - ஜக3ன்னாத2

Top

மேற்கோள்கள்

விளக்கம்
2 - ஒயனி - பதிலுக்கு குரல் கொடுத்தல்

இப்பாடல் 'ப்ரஹ்லாத34க்தி விஜயம்' எனும் நாட்டிய நாடகத்தின் அங்கமாகும். இப்பாடலின் சொற்கள், பிரகலாதன் இறைவனை வேண்டி பாடுவதாக.

Top


Updated on 21 May 2009

No comments: