Friday, May 22, 2009

தியாகராஜ கிருதி - துலஸீ பி3ல்வ - ராகம் கேதா3ர கௌ3ள - Tulasi Bilva - Raga Kedara Gaula

பல்லவி
துலஸீ பி3ல்வ மல்லிகாதி3
ஜலஜ 1ஸுமமுல பூஜல கைகொனவே

அனுபல்லவி
ஜலஜாஸன ஸனகாதி3 கரார்சித
ஜலதா34 ஸு-நாப4 விபா4-கர ஹ்ரு2ஜ்-
ஜலேஸ1 ஹரிணாங்க ஸு-க3ந்த4 (துலஸீ)

சரணம்
உரமுன முக2முன ஸி1ரமுன பு4ஜமுன
கரமுன நேத்ரமுன சரண யுக3ம்பு3
2கருணதோ நெனருதோ பரமானந்த3முதோ
3நிரதமுனு ஸ்ரீ த்யாக3ராஜு 4நிருபாதி4குடை3 அர்சிஞ்சு (துலஸீ)


பொருள் - சுருக்கம்
மலரோன், சனகாதியரின் கரங்களினால் தொழப்பெற்றோனே! கார்முகில் வண்ண உயர் உந்தியோனே! பரிதி இதயக் கடலின் மதியே!
  • மணம் கமழும் துளசி, வில்வம், மல்லிகை, தாமரை ஆகிய மலர்களின் வழிபாட்டினை ஏற்றுக் கொள்வாயய்யா.

    • திருமார்பினில், திருமுகத்தில், தலையினில், தோள்களில், கரங்களில், கண்களில், திருவடி யிணையினில்,

    • கனிவுடன், காதலுடன், பெருங்களிப்புடன்,

    • எவ்வமயமும், தியாகராசன், வேண்டுதலற்றவனாகி, அருச்சிக்கும்

  • துளசி, வில்வம், மல்லிகை, தாமரை ஆகிய மலர்களின் வழிபாட்டினை ஏற்றுக் கொள்வாயய்யா.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
துலஸீ/ பி3ல்வ/ மல்லிகா/ ஆதி3/
துளசி/ வில்வம்/ மல்லிகை/ ஆகிய/

ஜலஜ/ ஸுமமுல/ பூஜல/ கைகொனவே/
தாமரை/ மலர்களின்/ வழிபாட்டினை/ ஏற்றுக் கொள்வாயய்யா/


அனுபல்லவி
ஜலஜ-ஆஸன/ ஸனக-ஆதி3/ கர/-அர்சித/
மலரோன்/ சனகாதியரின்/ கரங்களினால்/ தொழப்பெற்றோனே/

ஜலத3/-ஆப4/ ஸு-நாப4/ விபா4-கர/ ஹ்ரு2த்-/
கார்முகில்/ வண்ண/ உயர் உந்தியோனே/ பரிதி/ இதய/

ஜல-ஈஸ1/ ஹரிண-அங்க/ ஸு-க3ந்த4/ (துலஸீ)
கடலின்/ (மான் சின்ன) மதியே/ மணம் கமழும்/ துளசி...


சரணம்
உரமுன/ முக2முன/ ஸி1ரமுன/ பு4ஜமுன/
திருமார்பினில்/ திருமுகத்தில்/ தலையினில்/ தோள்களில்/

கரமுன/ நேத்ரமுன/ சரண/ யுக3ம்பு3ன/
கரங்களில்/ கண்களில்/ திருவடி/ இணையினில்/

கருணதோ/ நெனருதோ/ பரம/-ஆனந்த3முதோ/
கனிவுடன்/ காதலுடன்/ பெரும்/ களிப்புடன்/

நிரதமுனு/ ஸ்ரீ த்யாக3ராஜு/ நிருபாதி4குடை3/ அர்சிஞ்சு/ (துலஸீ)
எவ்வமயமும்/ தியாகராசன்/ வேண்டுதலற்றவனாகி/ அருச்சிக்கும்/ துளசி...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ஸுமமுல - ஸும : இவ்விடத்தில் 'ஸுமமுல' பொருந்தும்

3 - நிரதமுனு - நிரதம்முன

Top

மேற்கோள்கள்

விளக்கம்
2 - கருணதோ நெனருதோ பரமானந்த3முதோ - கனிவுடன், காதலுடன், பெருங்களிப்புடன் - இச்சொற்கள், இறைவனைக் குறிப்பதாகக் கொள்ளலாம் (கனிவுடன், காதலுடன், பெருங்களிப்புடன் வழிபாட்டினை ஏற்றுக்கொள்வாய்). ஆனால், இவ்விடத்தில், பாடலின் கோர்வையின்படி, இது தியாகராஜரைக் குறிக்கும்.

4 - நிருபாதி4குடை3 - 'நிருபாதி4க' என்ற சொல்லுக்கு, 'குணங்களற்ற', 'எல்லையற்ற', 'முழுமை' என்று பொருளாகும். இச்சொல், பொதுவாக பரம்பொருளைக் குறிக்க பயன்படுத்தப்படும். தியாகராஜரின் 'நீ சித்தமு நா பா4க்3யமு' என்ற கீர்த்தனையில், இறைவனை 'நிருபாதி4க' என்று குறிப்பிடுகின்றார். ஆனால், இவ்விடத்தில், இச்சொல் தியாகராஜரைக் குறிப்பதனால், 'வேண்டுதலற்றவனாக' என்று பொருள் கொள்ளப்பட்டது. சைதன்ய சரித்ராம்ருதம் ஆதி 4.200-201 நோக்கவும்.

மலரோன் - பிரமன்

சனகர் - சனக முனிவர் - பிரமனின் மைந்தர்

உந்தியோன் - அரி

Top


Updated on 22 May 2009

No comments: