Saturday, May 23, 2009

தியாகராஜ கிருதி - த4ர்மாத்ம - ராகம் கேதா3ர கௌ3ள - Dharmaatma - Raga Kedara Gaula

பல்லவி
14ர்மாத்ம நன்னிபுடு33ய ஜூட3வேயன
மர்மமுன பலுகுனதி3 2மஞ்சிதோ3

சரணம்
சரணம் 1
பதித பாவனுட3னி பா33 பேரை நீகு
3மதி லேகயுண்டு3னதி3 2மஞ்சிதோ3 (த4ர்ம)


சரணம் 2
3தி லேனி நனு நீவு காவவேயண்டி
ஸம்மதி லேகயுண்டு3னதி3 2மஞ்சிதோ3 (த4ர்ம)


சரணம் 3
4நினு ஜூட3 பதி3 வேல கனுலு காவலெனண்டி
மனுபகயுண்டு3னதி3 2மஞ்சிதோ3 (த4ர்ம)


சரணம் 4
5ஏமி நேரனு பாத3மே மிகு3ல க3தியண்டி
நா மீத3 நெபமெஞ்சுட 2மஞ்சிதோ3 (த4ர்ம)


சரணம் 5
நீது3 மாயல சேத நிஷ்டூ2ரமேல
மம்மாது3கோகனுயுண்ட3 2மஞ்சிதோ3 (த4ர்ம)


சரணம் 6
நாடி வசனமுலெல்ல நயமு ஸேயவேயண்டி
6மாடாட3குண்டு3னதி3 2மஞ்சிதோ3 (த4ர்ம)


சரணம் 7
ராஜ நுத ஸ்ரீ த்யாக3ராஜ ரக்ஷக ஸ்1ரித
ஸமாஜ நனு 7மரசுனதி3 மஞ்சிதோ3 ராம (த4ர்ம)


பொருள் - சுருக்கம்
அறவுருவே! அரசர்களால் போற்றப் பெற்றோனே! தியாகராசனைக் காப்போனே! சார்ந்தோர் குழுமத்துறைவோனே! இராமா!
  • 'எனக்கிவ்வமயம் கருணை புரிவாயய்யா' என்றால், மருமமாய்ப் பகர்தல் சரியாமோ?

  • வீழ்ந்தோரைப் புனிதமாக்குவோனெனச் சிறந்த பெயர்பெற்று, உனக்கு அறிவில்லாதிருத்தல் சரியாமோ?

  • 'கதியற்ற என்னை நீ காப்பாயய்யா' என்றேன்; (அதற்கு) சம்மதிக்காதிருத்தல் சரியாமோ?

  • 'உன்னைக் காண பதினாயிரம் கண்கள் வேண்டும்' என்றேன்; கவனியாதிருத்தல் சரியாமோ?

  • 'ஏதும் கற்றறியேன்; (உனது) திருவடிகளே மிக்கு கதி'யென்றேன்; என்மீது குற்றங்காணல் சரியாமோ?

  • உனது மாயைகளினால் கொடுமையேனோ? எம்மை யாதரியாதிருத்தல் சரியாமோ?

  • 'அன்றைய சொற்கள் யாவற்றையும் நிறைவேற்றுவாயய்யா' என்றேன்; பேசாமலுமிருத்தல் சரியாமோ?

  • என்னை மறத்தல் சரியாமோ?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
4ர்ம/-ஆத்ம/ நன்னு/-இபுடு3/ த3ய/ ஜூட3வே/-அன/
அற/ உருவே/ எனக்கு/ இவ்வமயம்/ கருணை/ புரிவாயய்யா/ என்றால்/

மர்மமுன/ பலுகுனதி3/ மஞ்சிதோ3/
மருமமாய்/ பகர்தல்/ சரியாமோ/


சரணம்
சரணம் 1
பதித/ பாவனுடு3/-அனி/ பா33/ பேரை/ நீகு/
வீழ்ந்தோரை/ புனிதமாக்குவோன்/ என/ சிறந்த/ பெயர்பெற்று/ உனக்கு/

மதி/ லேக/-உண்டு3னதி3/ மஞ்சிதோ3/ (த4ர்ம)
அறிவு/ இல்லாது/ இருத்தல்/ சரியாமோ/


சரணம் 2
3தி/ லேனி/ நனு/ நீவு/ காவவே/-அண்டி/
கதி/ யற்ற/ என்னை/ நீ/ காப்பாயய்யா/ என்றேன்/

ஸம்மதி லேக/-உண்டு3னதி3/ மஞ்சிதோ3/ (த4ர்ம)
(அதற்கு) சம்மதிக்காது/ இருத்தல்/ சரியாமோ/


சரணம் 3
நினு/ ஜூட3/ பதி3 வேல/ கனுலு/ காவலெனு/-அண்டி/
உன்னை/ காண/ பதினாயிரம்/ கண்கள்/ வேண்டும்/ என்றேன்/

மனுபக/-உண்டு3னதி3/ மஞ்சிதோ3/ (த4ர்ம)
கவனியாது/ இருத்தல்/ சரியாமோ/


சரணம் 4
ஏமி/ நேரனு/ பாத3மே/ மிகு3ல/ க3தி/-அண்டி/
ஏதும்/ கற்றறியேன்/ (உனது) திருவடிகளே/ மிக்கு/ கதி/ என்றேன்/

நா/ மீத3/ நெபமு/-எஞ்சுட/ மஞ்சிதோ3/ (த4ர்ம)
என்/ மீது/ குற்றம்/ காணல்/ சரியாமோ/


சரணம் 5
நீது3/ மாயல சேத/ நிஷ்டூ2ரமு/-ஏல/
உனது/ மாயைகளினால்/ கொடுமை/ யேனோ/

மம்மு/-ஆது3கோகனு/-உண்ட3/ மஞ்சிதோ3/ (த4ர்ம)
எம்மை/ ஆதரியாது/ இருத்தல்/ சரியாமோ/


சரணம் 6
நாடி/ வசனமுலு/-எல்ல/ நயமு ஸேயவே/-அண்டி/
அன்றைய/ சொற்கள்/ யாவற்றையும்/ நிறைவேற்றுவாயய்யா/ என்றேன்/

மாட-ஆட3க/-உண்டு3னதி3/ மஞ்சிதோ3/ (த4ர்ம)
பேசாமலும்/ இருத்தல்/ சரியாமோ/


சரணம் 7
ராஜ/ நுத/ ஸ்ரீ த்யாக3ராஜ/ ரக்ஷக/ ஸ்1ரித/
அரசர்களால்/ போற்றப் பெற்றோனே/ தியாகராசனை/ காப்போனே/ சார்ந்தோர்/

ஸமாஜ/ நனு/ மரசுனதி3/ மஞ்சிதோ3/ ராம/ (த4ர்ம)
குழுமத்துறைவோனே/ என்னை/ மறத்தல்/ சரியாமோ/ இராமா/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - மஞ்சிதோ3 - மஞ்சிதோ3 ராம

5 - ஏமி நேரனு - ஏமி நேரமு : 'ஏமி நேரனு' என்றால் 'ஏதும் கற்றறியேன்' என்றும், 'ஏமி நேரமு' என்றால் 'எனது குற்றமென்ன?' என்றும் பொருளாகும். இவ்விடத்தில் 'ஏமி நேரனு' மிக்குப் பொருந்தும்

6 - மாடாட3குண்டு3னதி3 - மாடலாட3குண்டு3னதி3

7 - மரசுனதி3 - மரசினதி3

சில புத்தகங்களில் சரணங்கள் 5-ம், 6-ம் வரிசை மாற்றி கொடுக்கப்பட்டுள்ளது.

Top

மேற்கோள்கள்
1 - 4ர்மாத்ம - அற உருவே - 'த4ர்மம்' என்ற சொல்லுக்கு, பொதுவாக, 'அறம்' என்று பொருளானாலும், பற்பல சந்தர்ப்பங்களில், பற்பல பொருள்கள் கொள்ளப்படும். 'த4ர்ம'த்தின் பல விளக்கங்கள் நோக்கவும்.

4 - நினு ஜூட3 பதி3 வேல கனுலு காவலெ - உன்னைக் காண பதினாயிரம் கண்கள் வேண்டும் - திருப்பதி வேங்கடேசப் பெருமானைப் பற்றிய தனது 'வேங்கடேஸ நின்னு ஸேவிம்ப' என்ற கீர்த்தனையில், இவ்விதம் தியாகராஜர் கூறுகின்றார்.

Top

விளக்கம்
3 - மதி லேகயுண்டு3னதி3 - அறிவு இல்லாதிருத்தல் - இது 'நிந்தா3 ஸ்துதி' எனப்படும் 'இகழ்ச்சிப் போற்றி'யாகும்.

Top


Updated on 23 May 2009

2 comments:

Govindaswamy said...

திரு கோவிந்தன் அவர்களே
• சரணம் 3 ன் பொருள் “'உன்னைக் காண பதினாயிரம் கண்கள் வேண்டும்' என்றேன்; கவனியாதிருத்தல் சரியாமோ?” தெளிவாக இல்லை. தியாகராஜருக்கு இரு கண்கள் தானெ இருந்தன. அவ்வாறாயின் ராமன் அவரைக் கவனியாமல் இருந்தது சரிதானே?
வணக்கம்
கோவிந்தசாமி

V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,

"உன்னை இப்படிப் புகழ்ந்தேனே, அப்படியும் நீ என்னைக் கவனியாதிருத்தல் சரியாமோ?" என்று பொருளாகும் என்று நான் கருதுகின்றேன்.

வணக்கம்
கோவிந்தன்