Sunday, May 24, 2009

தியாகராஜ கிருதி - மா ராமசந்த்3ருனிகி - ராகம் கேதா3ர கௌ3ள - Maa Ramachandruniki - Raga Kedara Gaula

பல்லவி
மா ராமசந்த்3ருனிகி ஜய மங்க3ளம்
கோ4ர ப4வ நீர நிதி4 தாரகுனிகி மங்க3ளம் (மா)

சரணம்
சரணம் 1
1மாருனி கன்ன ராஜ குமாருனிகி மங்க3ளம்
மாரு லேனி ஹரிகி 2மும்மாரு ஜய மங்க3ளம் (மா)


சரணம் 2
3பா3ஹுலேயாப்துனிகி 4ஸுபா3ஹு வைரிகி மங்க3ளம்
5பா3ஹுஜ ஸூ1ருடா3ஜானு பா3ஹுனிகி மங்க3ளம் (மா)


சரணம் 3
ப்3ரு2ந்தா3வன ஸ்தி2த மௌனி ப்3ரு2ந்தா3வனுனிகி மங்க3ளம்
6ப்3ரு2ந்தா3 லோலுனிகி பாலித ப்3ரு2ந்தா3ரகுனிகி மங்க3ளம் (மா)


சரணம் 4
ராஜ வேஷுனிகி ராஜ ராஜார்சிதுனிகி மங்க3ளம்
ராஜ த4ருட3கு3 7த்யாக3ராஜ நுதுனிகி மங்க3ளம் (மா)


பொருள் - சுருக்கம்
  • எமது இராமசந்திரனுக்கு ஜெய மங்களம்;

  • கொடிய பிறவிக் கடலை கடத்துவிப்போனுக்கு மங்களம்;

  • மாரனை யீன்ற அரச குமாரனுக்கு மங்களம்;

  • மாற்றற்ற (ஈடற்ற) அரிக்கு மும்முறை ஜெய மங்களம்;

  • முருகனுக்கு இனியோனுக்கும், சுபாகுவின் பகைவனுக்கும் மங்களம்;

  • மன்னரில் சூரனுக்கும், முழந்தாள் நீளக் கையனுக்கும் மங்களம்;

  • பிருந்தாவனத்திலுறை முனிவர்களைக் காப்போனுக்கு மங்களம்;

  • பிருந்தாவை விரும்புவோனுக்கும், தேவரைக் காப்போனுக்கும் மங்களம்;

  • அரச வேடத்தோனுக்கும், பேரரசரால் தொழப்பெற்றோனுக்கும் மங்களம்;

  • பிறையணியும் தியாகராசனால் போற்றப் பெற்றோனுக்கு மங்களம்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
மா/ ராமசந்த்3ருனிகி/ ஜய/ மங்க3ளம்/
எமது/ இராமசந்திரனுக்கு/ ஜெய/ மங்களம்/

கோ4ர/ ப4வ/ நீர நிதி4/ தாரகுனிகி/ மங்க3ளம்/ (மா)
கொடிய/ பிறவி/ கடலை/ கடத்துவிப்போனுக்கு/ மங்களம்/


சரணம்
சரணம் 1
மாருனி/ கன்ன/ ராஜ/ குமாருனிகி/ மங்க3ளம்/
மாரனை/ யீன்ற/ அரச/ குமாரனுக்கு/ மங்களம்/

மாரு/ லேனி/ ஹரிகி/ மும்மாரு/ ஜய/ மங்க3ளம்/ (மா)
மாற்று (ஈடு)/ அற்ற/ அரிக்கு/ மும்முறை/ ஜெய/ மங்களம்/


சரணம் 2
பா3ஹுலேய/-ஆப்துனிகி/ ஸுபா3ஹு/ வைரிகி/ மங்க3ளம்/
முருகனுக்கு/ இனியோனுக்கும்/ சுபாகுவின்/ பகைவனுக்கும்/ மங்களம்/

பா3ஹுஜ/ ஸூ1ருடு3/-ஆஜானு/ பா3ஹுனிகி/ மங்க3ளம்/ (மா)
மன்னரில்/ சூரன்/ முழந்தாள் நீள/ கையனுக்கும்/ மங்களம்/


சரணம் 3
ப்3ரு2ந்தா3வன/ ஸ்தி2த/ மௌனி ப்3ரு2ந்த3/-அவனுனிகி/ மங்க3ளம்/
பிருந்தாவனத்தில்/ உறை/ முனிவர்களை/ காப்போனுக்கு/ மங்களம்/

ப்3ரு2ந்தா3/ லோலுனிகி/ பாலித/ ப்3ரு2ந்தா3ரகுனிகி/ மங்க3ளம்/ (மா)
பிருந்தாவை/ விரும்புவோனுக்கும்/ காப்போன்/ தேவர்களை/ மங்களம்/


சரணம் 4
ராஜ/ வேஷுனிகி/ ராஜ ராஜ/-அர்சிதுனிகி/ மங்க3ளம்/
அரச/ வேடத்தோனுக்கும்/ பேரரசரால்/ தொழப்பெற்றோனுக்கும்/ மங்களம்/;

ராஜ/ த4ருட3கு3/ த்யாக3ராஜ/ நுதுனிகி/ மங்க3ளம்/ (மா)
மதி (பிறை)/ அணியும்/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனுக்கு/ மங்களம்/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
4 - ஸுபா3ஹு - சுபாகு - மாரீசனுடனிருந்த, ராமனால் கொல்லப்பட்ட அரக்கன்

5 - பா3ஹுஜ - கைகளிலிருந்து உதித்த - க்ஷத்திரிய குலம் பரம்பொருளின் கைகளிலிருந்து தோன்றியதென புருஷ ஸூக்தம் (செய்யுள் 13) கூறும்

6 - ப்3ரு2ந்தா3 - பிருந்தா - துளசி : துளசியின் கதை

Top

விளக்கம்
1 - மாருனி கன்ன - மாரனை ஈன்ற - இதனை, 'மாருனிகி அன்ன' என்றும் (மாரனுக்குத் தந்தை) பிரிக்கலாம்; இரண்டிற்கும் பொருளொன்றுதான்

2 - மும்மாரு - ஒரு சொல்லினை மூன்று முறை மொழிந்தால் அது முடிவானதாகக் கொள்ளப்படும்.

3 - பா3ஹுலேய - கார்த்திகை மாதம் பிறந்தவன் - குமரக்கடவுள்

7 - த்யாக3ராஜ - தியாகராசன் - இங்கு திருவாரூர் சிவனைக் குறிக்கும்

Top


Updated on 24 May 2009

No comments: