Monday, May 25, 2009

தியாகராஜ கிருதி - ரகு4 நந்த3ன - ராகம் கேதா3ர கௌ3ள - Raghu Nandana - Raga Kedara Gaula

பல்லவி
ரகு4 நந்த3ன ரகு4 நந்த3ன ரகு4 நந்த3ன ராம

சரணம்
சரணம் 1
பாடு3து3 நினு வேடு3து3 கொனியாடு3து3 ஸ்ரீ ராம (ரகு4)


சரணம் 2
கோரிதி நினு ஜேரிதி நனு தூ3ரகுமீ ராம (ரகு4)


சரணம் 3
ஏமோயனி நீ மனஸுன 1ஏமரகே ராம (ரகு4)


சரணம் 4
3தி லேத3னி பதி நீவனி மதி நே ஸ1ரணண்டி (ரகு4)


சரணம் 5
ஜாலமு நீகேலனு நே தாளனு ஸ்ரீ லோல (ரகு4)


சரணம் 6
3ட்டிக3 நினு பட்டின தனகிட்டி வெதலேல (ரகு4)


சரணம் 7
நீகே த3ய நீகே த3ம நீகெவரே ஸாடி (ரகு4)


சரணம் 8
நினு தெலிஸின க4னுலனு நே தி3ன தி3னமுனு தலது (ரகு4)


சரணம் 9
2முல்லோகமுலல்லாடி3 3இல்லே க3தி கானி (ரகு4)


சரணம் 10
இலனந்தட கல 4வானகு ஜலதே43தி கானி (ரகு4)


சரணம் 11
5கு3ணமுலலோனணிகு3ண்டே 6கு3ணியே க3தி கானி (ரகு4)


சரணம் 12
7என்னி விதமுலுன்னானு நின்னே சேரவலெ (ரகு4)


சரணம் 13
ஸ்1ரித மானவ ஹித-கர பாலித த்யாக3ராஜ (ரகு4)


பொருள் - சுருக்கம்
இரகு நந்தனா! இராமா! இலக்குமியை விரும்புவோனே! சார்ந்த மானவருக்கு இனிது செய்வோனே! தியாகராசனைப் பேணுவோனே!
  • பாடுவேன்; உன்னை வேண்டுவேன்; புகழ்ந்தேத்துவேன்;

  • கோரினேன்; உன்னையடைந்தேன்; என்னைக் கடியாதே;

  • என்னவோயென உனது மனதில் ஏமாறவேண்டாம்;

  • கதி இலதென, தலைவன் நீயென, உள்ளத்தினில் நான் புகலென்றேன்;

  • பிடிவாதம் உனக்கேன்? நான் தாளேன்;

  • கெட்டியாக உன்னைப் பிடித்த எனக்கிப்படிப்பட்ட வேதனைகளேன்?

  • உனதே தயை; உனதே ஒடுக்கம்; உனக்கெவரே ஈடு!

  • உன்னையறிந்த மேலோரை நான் அனுதினமும் நினைப்பேன்;

    • மூவுலகில் அலைந்தாலும் இல்லமே கதியன்றோ!

    • புவியெல்லாம் பெய்யும் மழைக்கு கடலே போக்கன்றோ!

    • குணங்களிலேயே அடங்கியிருந்தால் குணவானே கதியன்றோ!

    • எத்தனை நெறிகள் இருந்தாலும் உன்னையே யடையவேண்டும்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ரகு4/ நந்த3ன/ ரகு4/ நந்த3ன/ ரகு4/ நந்த3ன/ ராம/
இரகு/ நந்தனா/ இரகு/ நந்தனா/ இரகு/ நந்தனா/ இராமா/


சரணம்
சரணம் 1
பாடு3து3/ நினு/ வேடு3து3/ கொனியாடு3து3/ ஸ்ரீ ராம/ (ரகு4)
பாடுவேன்/ உன்னை/ வேண்டுவேன்/ புகழ்ந்தேத்துவேன்/ ஸ்ரீ ராமா/


சரணம் 2
கோரிதி/ நினு/ ஜேரிதி/ நனு/ தூ3ரகுமீ/ ராம/ (ரகு4)
கோரினேன்/ உன்னை/ யடைந்தேன்/ என்னை/ கடியாதே/ இராமா/


சரணம் 3
ஏமோ/-அனி/ நீ/ மனஸுன/ ஏமரகே/ ராம/ (ரகு4)
என்னவோ/ யென/ உனது/ மனதில்/ ஏமாறவேண்டாம்/ இராமா/


சரணம் 4
3தி/ லேது3/-அனி/ பதி/ நீவு/-அனி/ மதி/ நே/ ஸ1ரணு-/அண்டி/ (ரகு4)
கதி/ இலது/ என/ தலைவன்/ நீ/ என/ உள்ளத்தினில்/ நான்/ புகல்/ என்றேன்/


சரணம் 5
ஜாலமு/ நீகு/-ஏலனு/ நே/ தாளனு/ ஸ்ரீ/ லோல/ (ரகு4)
பிடிவாதம்/ உனக்கு/ ஏன்/ நான்/ தாளேன்/ இலக்குமியை/ விரும்புவோனே/


சரணம் 6
3ட்டிக3/ நினு/ பட்டின/ தனகு/-இட்டி/ வெதலு/-ஏல/ (ரகு4)
கெட்டியாக/ உன்னை/ பிடித்த/ எனக்கு/ இப்படிப்பட்ட/ வேதனைகள்/ ஏன்/


சரணம் 7
நீகே/ த3ய/ நீகே/ த3ம/ நீகு/-எவரே/ ஸாடி/ (ரகு4)
உனதே/ தயை/ உனதே/ ஒடுக்கம்/ உனக்கு/ எவரே/ ஈடு/


சரணம் 8
நினு/ தெலிஸின/ க4னுலனு/ நே/ தி3ன தி3னமுனு/ தலது/ (ரகு4)
உன்னை/ யறிந்த/ மேலோரை/ நான்/ அனுதினமும்/ நினைப்பேன்/


சரணம் 9
முல்லோகமுலு/-அல்லாடி3ன/ இல்லே/ க3தி/ கானி/ (ரகு4)
மூவுலகில்/ அலைந்தாலும்/ இல்லமே/ கதி/ யன்றோ/


சரணம் 10
இலனு/-அந்தட/ கல/ வானகு/ ஜலதே4/ க3தி/ கானி/ (ரகு4)
புவி/ எல்லாம்/ பெய்யும் (உள்ள)/ மழைக்கு/ கடலே/ போக்கு/ அன்றோ/


சரணம் 11
கு3ணமுலலோனு/-அணிகி3/-உண்டே/ கு3ணியே/ க3தி/ கானி/ (ரகு4)
குணங்களிலேயே/ அடங்கி/ யிருந்தால்/ குணவானே/ கதி/ யன்றோ/


சரணம் 12
என்னி/ விதமுலு/-உன்னானு/ நின்னே/ சேரவலெ/ (ரகு4)
எத்தனை/ நெறிகள்/ இருந்தாலும்/ உன்னையே/ அடையவேண்டும்/


சரணம் 13
ஸ்1ரித/ மானவ/ ஹித/-கர/ பாலித/ த்யாக3ராஜ/ (ரகு4)
சார்ந்த/ மானவருக்கு/ இனிது/ செய்வோனே/ பேணுவோனே/ தியாகராசனை/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - இல்லே க3தி - இட்லே கதி : ஒவ்வொரு சரணத்திலும் கடைப் பிடிக்கப்பட்டுள்ள எதுகை மோனைகளை நோக்குகையில், 'இல்லே க3தி' என்பது சரியெனத் தோன்றுகின்றது.

சில புத்தகங்களில் முதலாவது சரணம் அனுபல்லவியாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

Top

மேற்கோள்கள்
2 - முல்லோகமுலல்லாடி3ன இல்லே க3தி - மூவுலகில் அலைந்தாலும் இல்லமே கதி - தியாகராஜர் தனது 'கால ஹரணமேலரா' என்ற கீர்த்தனையில் கூறவது - "சுற்றிச் சுற்றிப் பறவைகளெல்லாம் தனது (கூடுள்ள) மரத்தினைத் தேடுவது போன்று..."

4 - வானகு ஜலதே43தி - பெய்யும் மழைக்கு கடலே போக்கு - அந்தணர்களின் அன்றை வேள்வியான 'சந்தியா வந்தன'த்தினில் கூறும் 'வானத்தினின்று பொழியும் நீர் யாவும் கடலை வந்தடையும்' என்ற செய்யுளை தியாகராஜர் இங்கு குறிப்பிடுகின்றார்.

5 - கு3ணமுலலோனணிகு3ண்டே - குணங்களிலேயே அடங்கியிருந்தால் - பகவத்கீதையில் (அத்தியாயம் 14, செய்யுள் 5) கண்ணன் கூறுவது -

"சத்துவம், இராசதம், தாமதம் என்ற இயற்கையினின்றுதித்த முக்குணங்கள், அழிவற்ற, உடலுக்குரியவனை, இவ்வுடலில் கட்டுகின்றன."

7 - என்னி விதமுலுன்னானு நின்னே சேரவலெ - எத்தனை நெறிகள் இருந்தாலும் உன்னையே அடையவேண்டும் - அந்தணர்களின் அன்றை வேள்வியான 'சந்தியா வந்தன'த்தினில் கூறும் 'அனைத்து கடவுளர்க்கும் செலுத்தப்படும் வணக்கம் கேசவனை வந்தடையும்' என்ற செய்யுளை தியாகராஜர் இங்கு குறிப்பிடுகின்றார். இது குறித்து காஞ்சி மாமுனிவரின் விளக்கத்தினை நோக்கவும்.

Top

விளக்கம்
1 - ஏமரகே - சில புத்தகங்களில் இச்சொல்லுக்கு 'ஏமாற்றேதே' என பொருள் கொள்ளப்பட்டுள்ளது. 'ஏமரகே' என்ற சொல்லுக்கு 'ஏமாறாதே' என்று பொருளாகும்.

6 - கு3ணியே க3தி - 'கு3ணி' என்ற சொல் 'குணவான்' (இறைவன்) என்று மொழி பெயர்க்கப்பட்டாலும், இவ்விடத்தில் இச்சொல்லின் பொருள் சரிவர விளங்கவில்லை.

Top


Updated on 25 May 2009

2 comments:

Govindaswamy said...

திரு கோவிந்தன் அவர்களுக்கு
சரணம் 3 ல் “என்னவோயென உனது மனதில் ஏமாறவேண்டாம்” என்பதன் பொருள் விளங்கவில்லை. இராமன் ஏன்/எப்படி ஏமாறுவான் என்று தியாகராஜர் எண்ணுகிறார்.
சரணம் 5 ல் “இலக்குமியை/ விரும்பவோனே/” என்பது இலக்குமியை/ விரும்புவோனே/
என்று இருக்கவேண்டும்.
வணக்கம்
கோவிந்தசாமி

V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,

நீங்கள் சுட்டிக்காட்டிய தவற்றினைத் திருத்திவிட்டேன். நன்றி.

இந்தப் பாடலின் அமைப்பிலிருந்து இந்த சரணத்திற்கு சரியான பொருள் கூறுவது கடினம். தியாகராஜரின் பெருவாரியான பாடல்கள் இறைவனுடன் ஒருதலை உரையாடலாக உள்ளது. அதனால் அவருடைய உள்ளப் பாங்கினை (பா4வத்தினை) அறிதல் இயலாததாகிறது.

வணக்கம்
கோவிந்தன்