Tuesday, May 26, 2009

தியாகராஜ கிருதி - ராமுனி மரவகவே - ராகம் கேதா3ர கௌ3ள - Ramuni Maravakave - Raga Kedara Gaula

பல்லவி
1ராமுனி மரவகவே ஓ மனஸா

சரணம்
சரணம் 1
ராமுனி யாக3மு காசின பாப
விராமுனி ஸத்3-கு3ண தா4முனி ஸீதா (ராமுனி)


சரணம் 2
தீ4ருனி தை3த்ய விதா3ருனி
லோகாதா4ருனி வம்ஸோ1த்3தா4ருனி ஸீதா (ராமுனி)


சரணம் 3
த்4யேயுனி முனி ஜன கே3யுனி க4ன நிப4
காயுனி தே3வ ராயுனி ஸீதா (ராமுனி)


சரணம் 4
வாஸவ ஹ்ரு23ய நிவாஸுனி ப3ஹு ரவி
பா4ஸுனி ஸு14-கர வேஸுனி ஸீதா (ராமுனி)


சரணம் 5
கீ3த ப்ரியுனி விதா4த நுதுனி
கஞ்ஜாத ப3ந்து4 குல ஜாதுனி ஸீதா (ராமுனி)


சரணம் 6
ஈ ஜக3தினி அவ்யாஜமுனனாப்த
ஸமாஜமுனனு ப்3ரோசு 2ஜக3த்பதினி ஸீதா (ராமுனி)


சரணம் 7
தா3னவ ஹருனீஸா1ன வினுதுனி
ஸதா3 நரோத்தமுல மான ரக்ஷகுனி (ராமுனி)


சரணம் 8
ஸோ14னது3னி 3கி3ரிஜா பா3ஹுனி
து3ரிதேப4 ஹருனி
3ஹு ப்ரபா4வுனி ஸீதா (ராமுனி)


சரணம் 9
ஸீ1லினி ஸத்3-கு3ண-ஸா1லினி க4னுனி
கபாலி நுதுனி 4வன-மாலினி ஸீதா (ராமுனி)


சரணம் 10
5ஸ்ரீ கு3ரு சரணமுலே3தியனின
ஸதா33திஜ ஹிதுனி த்யாக3ராஜ நுதுனி (ராமுனி)


பொருள் - சுருக்கம்
ஓ மனமே! இராமனை மறவாதே,
  • களிப்பூட்டுவோனை,

  • வேள்வியைக் காத்த, பாவங்களை யொழிப்போனை,

  • நற்குணங்களின் இருப்பிடமானவனை,

  • தீரனை,

  • அரக்கரையழித்தோனை,

  • உலகத்திற்கு ஆதாரமானவனை,

  • குலத்தினை உயர்த்தியோனை,

  • தியானிக்கத் தக்கோனை,

  • முனிவர்களால் பாடப்பெற்றோனை,

  • கார்முகில் நிகருடலோனை,

  • தேவர்களின் தலைவனை,

  • வாசவன் இதயத்துறைவோனை,

  • எண்ணிறந்த பரிதிகளின் ஒளியோனை,

  • நலன் அருளும் வேடத்தோனை,

  • இசை விரும்பியை,

  • பிரமனால் போற்றப் பெற்றோனை,

  • கமல நண்பன் குலத்துதித்தோனை,

  • இப்புவியில், நோக்கமேதுமின்றி, இனியோரின் குழுமத்தினைக் காக்கும் உலகத்தலைவனை,

  • அசுரரை யழித்தோனை,

  • சிவனால் போற்றப் பெற்றோனை,

  • எவ்வமயமும் மனிதரில் உத்தமரின் மானம் காப்போனை,

  • மங்களமருள்வோனை,

  • மலைமகள் சோதரனை,

  • பாவமெனும் கரியினையழிப்போனை,

  • மிக்கு மாட்சிமை யுடையோனை,

  • ஒழுக்கத்தோனை,

  • நற்பண்பு இயல்பினனை,

  • மேலோனை,

  • கபாலியினால் போற்றப் பெற்றோனை,

  • வனமாலியினை,

  • உயர் ஆசானின் திருவடிகளே புகலெனும், வாயு மைந்தனுக்கு இனியோனை,

  • தியாகராசனால் போற்றப் பெற்றோனை,

சீதாராமனை மறவாதே.


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராமுனி/ மரவகவே/ ஓ/ மனஸா/
இராமனை/ மறவாதே/ ஓ/ மனமே/


சரணம்
சரணம் 1
ராமுனி/ யாக3மு/ காசின/ பாப/
களிப்பூட்டுவோனை/ வேள்வியை/ காத்த/ பாவங்களை/

விராமுனி/ ஸத்3-கு3ண/ தா4முனி/ ஸீதா/ (ராமுனி)
ஒழிப்போனை/ நற்குணங்களின்/ இருப்பிடமானவனை/ சீதா/ ராமனை...


சரணம் 2
தீ4ருனி/ தை3த்ய/ விதா3ருனி/ லோக/-
தீரனை/ அரக்கரை/ யழித்தோனை/ உலகத்திற்கு/

ஆதா4ருனி/ வம்ஸ1/-உத்3தா4ருனி/ ஸீதா/ (ராமுனி)
ஆதாரமானவனை/ குலத்தினை/ உயர்த்தியோனை/ சீதா/ ராமனை...


சரணம் 3
த்4யேயுனி/ முனி ஜன/ கே3யுனி/ க4ன/ நிப4/
தியானிக்கத் தக்கோனை/ முனிவர்களால்/ பாடப்பெற்றோனை/ கார்முகில்/ நிகர்/

காயுனி/ தே3வ/ ராயுனி/ ஸீதா/ (ராமுனி)
உடலோனை/ தேவர்களின்/ தலைவனை/ சீதா/ ராமனை...


சரணம் 4
வாஸவ/ ஹ்ரு23ய/ நிவாஸுனி/ ப3ஹு/ ரவி/
வாசவன்/ இதயத்து/ உறைவோனை/ எண்ணிறந்த/ பரிதிகளின்/

பா4ஸுனி/ ஸு14/-கர/ வேஸுனி/ ஸீதா/ (ராமுனி)
ஒளியோனை/ நலன்/ அருளும்/ வேடத்தோனை/ சீதா/ ராமனை...


சரணம் 5
கீ3த/ ப்ரியுனி/ விதா4த/ நுதுனி/
இசை/ விரும்பியை/ பிரமனால்/ போற்றப் பெற்றோனை/

கஞ்ஜாத/ ப3ந்து4/ குல/ ஜாதுனி/ ஸீதா/ (ராமுனி)
கமல/ நண்பன்/ குலத்து/ உதித்தோனை/ சீதா/ ராமனை...


சரணம் 6
ஈ/ ஜக3தினி/ அவ்யாஜமுனனு/-ஆப்த/
இந்த/ புவியில்/ நோக்கமேதுமின்றி/ இனியோரின்/

ஸமாஜமுனனு/ ப்3ரோசு/ ஜக3த்/ பதினி/ ஸீதா/ (ராமுனி)
குழுமத்தினை/ காக்கும்/ உலக/ தலைவனை/ சீதா/ ராமனை...


சரணம் 7
தா3னவ/ ஹருனி/-ஈஸா1ன/ வினுதுனி/
அசுரரை/ யழித்தோனை/ சிவனால்/ போற்றப் பெற்றோனை/

ஸதா3/ நர/-உத்தமுல/ மான/ ரக்ஷகுனி/ (ராமுனி)
எவ்வமயமும்/ மனிதரில்/ உத்தமரின்/ மானம்/ காப்போனை/ இராமனை...


சரணம் 8
ஸோ14னது3னி/ கி3ரிஜா/ பா3ஹுனி/ து3ரித/-
மங்களமருள்வோனை/ மலைமகள்/ சோதரனை/ பாவமெனும்/

இப4/ ஹருனி/ ப3ஹு/ ப்ரபா4வுனி/ ஸீதா/ (ராமுனி)
கரியினை/ யழிப்போனை/ மிக்கு/ மாட்சிமை யுடையோனை/ சீதா/ ராமனை...


சரணம் 9
ஸீ1லினி/ ஸத்3-கு3ண/-ஸா1லினி/ க4னுனி/
ஒழுக்கத்தோனை/ நற்பண்பு/ இயல்பினனை/ மேலோனை/

கபாலி/ நுதுனி/ வன-மாலினி/ ஸீதா/ (ராமுனி)
கபாலியினால்/ போற்றப் பெற்றோனை/ வனமாலியினை/ சீதா/ ராமனை...


சரணம் 10
ஸ்ரீ/ கு3ரு/ சரணமுலே/ க3தி/-அனின/
உயர்/ ஆசானின்/ திருவடிகளே/ புகல்/ எனும்/

ஸதா33திஜ/ ஹிதுனி/ த்யாக3ராஜ/ நுதுனி/ (ராமுனி)
வாயு மைந்தனுக்கு/ இனியோனை/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனை/ இராமனை...

குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ராமுனி மரவகவே ஓ மனஸா - ராமுனி மரவகவே மனஸா ராமுனி மரவகவே ஓ மனஸா

2 - ஜக3த்பதினி ஸீதா - ஜக3த்பதினி

மேற்கோள்கள்
4 - வன-மாலி - வனமாலை அணியும் அரி - விஷ்ணு அணியும் 'வைஜயந்தி' மாலை 'வனமாலை' எனப்படும். துளசி, மல்லிகை, மந்தாரை, பாரிஜாதம் மற்றும் தாமரை மலர்களால் தொடுக்கப்பட்டதாகும் வனமாலை. வைஜயந்தி மற்றும் வனமாலை பற்றி விளக்கம் நோக்கவும்.

Top

விளக்கம்
3 - கி3ரிஜா பா3ஹுனி - இச்சொற்களின் பொருள் சரிவர விளங்கவில்லை. கி3ரிஜா - மலைமகள் - பார்வதியைக் குறிக்கும். இங்கு 'பா3ஹ' என்ற சொல்லுக்கு, சில புத்தகங்களில் 'சோதரன்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், அச்சொல்லுக்கு அப்படிப்பட்ட பொருளில்லை. சமஸ்கிருதத்தில் 'ப4கி3னி' என்ற சொல் சோதரியைக் குறிக்கும். அதனால், தியாகராஜர் இங்கு 'பா43' (சோதரன்) என்ற சொல்லினை பயன்படுத்தியிருக்கலாம்.

3 - கி3ரிஜா பா3ஹுனி து3ரிதேப4 ஹருனி - சில புத்தகங்களில், இதற்கு 'பாவங்களெனும் கரிகளுக்கு சி்ங்கம்' என்ற பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இவ்விடத்தில், 'சிங்கம்' என்ற பொருள்பட ஏதும் சொல் இல்லை. 'கி3ரிஜா பா3ஹ' என்பதற்கு பதிலாக 'கி3ரிஜா வாஹ' என்றிருந்தாலோ, அல்லது 'து3ரிதேப4 ஹருனி' என்பதற்கு பதிலாக 'து3ரிதேப4 ஹரினி' என்றிருந்தாலோ 'சிங்கம்' என்று பொருள் கொள்ளலாம். (பார்வதியின் வாஹனம், சிங்கமாகும் : 'ஹரி' என்ற சொல்லுக்கு 'சிங்கம்' என்றும் பொருளாகும்). ஆனால் 'னி' என்ற விகுதி பயன் படுத்தப்பட்டுள்ளதால் அப்படி (சிங்கம் என) பொருள் கொள்வதற்கில்லை. எனவே, இவற்றினை, இரண்டு அடைமொழிகளாக பொருள் கொள்ளப்பட்டது.

Top

5 - ஸ்ரீ கு3ரு சரண - தியாகராஜர், இராமனை, அனுமனின் ஆசான் என்று கூறுகின்றார். இறைவனைக்காட்டிலும் ஆசானுக்கு உயர் நிலையினை அளித்து கபீர்தாசரும் பாடுகின்றார்.

"கோவிந்தனும் (இறைவன்), எனது குருவும், என் முன் நிற்கின்றனர்; எவருக்கு முதலில் வணக்கம் செலுத்துவது? - குருவுக்கே; ஏனெனில், குருதான் கோவிந்தனைக் காட்டினார்." (குருவின் கருணையின்றேல், இறைவன் நம் கண் முன்னே நின்றாலும் நம்மால் அடையாளம் கண்டுகொள்ள இயலாது என்கிறார்.) 'கபீர்தாசரின் தோ3ஹா' - ஈரடிகள் நோக்கவும்.

களிப்பூட்டுவோன் - 'ராம' எனும் சொல்லுக்கு அப்பொருளாகும்

வாசவன் - இந்திரன்

கமல நண்பண் - பகலவன்

மலைமகள் - பார்வதி

கபாலி - சிவன்

உயர் ஆசான் - இராமனைக் குறிக்கும்

Top


Updated on 26 May 2009

No comments: