Saturday, May 30, 2009

தியாகராஜ கிருதி - வாரிஜ நயன - ராகம் கேதா3ர கௌ3ள - Vaarija Nayana2 - Raga Kedara Gaula

பல்லவி
வாரிஜ நயன நீவாட3னு நேனு
வாரமு நன்னு ப்3ரோவுமு

சரணம்
சரணம் 1
ஸ்வல்ப ப2லாது3லகு வேல்புலுயேசின
அல்புட3னுசு நன்னந்த3ரு பல்கின (வாரி)


சரணம் 2
ஸரி வாரலு ஈ த4ரலோ நவ்வின
பரி பரி வித4முல பா34லு பெட்டின (வாரி)


சரணம் 3
கஷ்டமு ரானியிஷ்டமு ரானி
து3ஷ்டுட3னுசு நனு தூ3ரின கானி (வாரி)


சரணம் 4
பாபுலு நாபை மோபின நேரமு
ஸ்ரீ பதி நீ பத3 சிந்தனே கானி (வாரி)


சரணம் 5
பா3கு33 நீவே பா4க்3யமு கானி
ராக3 ரஹித த்யாக3ராஜ வினுத ஹரே (வாரி)


பொருள் - சுருக்கம்
கமலக்கண்ணா! மாமணாளா! பற்றற்றோனே! தியாகராசனால் போற்றப் பெற்ற அரியே!
  • உன்னவன் நான்; எவ்வமயமும் என்னைக் காப்பாய்

    • சிறு பயன்களுக்கு, கடவுளரென்னை ஏய்த்தாலும், அற்பனென என்னை அனைவரும் பகன்றாலும்,

    • (அல்லது) சிறு பயன்களுக்கு, கடவுளரால் ஏய்க்கப் பெற்ற அற்பனென, என்னை அனைவரும் பகன்றாலும்,

    • ஈடானோர் இப்புவியில் நகைத்தாலும், பற்பல விதமாக, துயருறுத்தினாலும்,

    • துன்பம் நேர்ந்தாலும், விருப்பம் கிடைத்தாலும், தீயவனென என்னைத் தூற்றினாலும் கூட,

    • பாவிகள் என் மீது குற்றங்களைச் சுமத்தினாலும், உனது திருவடிச் சிந்தனையே யன்றோ;

    • நன்கு நீயே பேறாகுமன்றோ!

  • உன்னவன் நான்; எவ்வமயமும் என்னைக் காப்பாய்



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
வாரிஜ/ நயன/ நீவாட3னு/ நேனு/
கமல/ கண்ணா/ உன்னவன்/ நான்/

வாரமு/ நன்னு/ ப்3ரோவுமு/
எவ்வமயமும்/ என்னை/ காப்பாய்/


சரணம்
சரணம் 1
ஸ்வல்ப/ ப2லாது3லகு/ வேல்புலு/-ஏசின/
சிறு/ பயன்களுக்கு/ கடவுளர் (கடவுளரால்)/ ஏய்த்தாலும் (ஏய்க்கப் பெற்ற)/

அல்புடு3-/அனுசு/ நன்னு/-அந்த3ரு/ பல்கின/ (வாரி)
அற்பன்/ என/ என்னை/ அனைவரும்/ பகன்றாலும்/ கமலக்கண்ணா!...


சரணம் 2
ஸரி வாரலு/ ஈ/ த4ரலோ/ நவ்வின/
ஈடானோர்/ இந்த/ புவியில்/ நகைத்தாலும்/

பரி பரி/ வித4முல/ பா34லு/ பெட்டின/ (வாரி)
பற்பல/ விதமாக/ துயர்/ உறுத்தினாலும்/ கமலக்கண்ணா!...


சரணம் 3
கஷ்டமு/ ரானி/-இஷ்டமு/ ரானி/
துன்பம்/ நேர்ந்தாலும்/ விருப்பம்/ கிடைத்தாலும்/

து3ஷ்டுடு3/-அனுசு/ நனு/ தூ3ரின/ கானி/ (வாரி)
தீயவன்/ என/ என்னை/ தூற்றினாலும்/ கூட/ கமலக்கண்ணா!...


சரணம் 4
பாபுலு/ நாபை/ மோபின/ நேரமு/
பாவிகள்/ என் மீது/ சுமத்தினாலும்/ குற்றங்களை/

ஸ்ரீ/ பதி/ நீ/ பத3/ சிந்தனே/ கானி/ (வாரி)
மா/ மணாளா/ உனது/ திருவடி/ சிந்தனையே/ யன்றோ/


சரணம் 5
பா3கு33/ நீவே/ பா4க்3யமு/ கானி/
நன்கு/ நீயே/ பேறாகும்/ அன்றோ/

ராக3/ ரஹித/ த்யாக3ராஜ/ வினுத/ ஹரே/ (வாரி)
பற்று/ அற்றோனே/ தியாகராசனால்/ போற்றப் பெற்ற/ அரியே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்

விளக்கம்
இப்பாடல் திரு TK கோவிந்த ராவ் அவர்களின் 'Compositions of Tyagaraja' என்ற புத்தகத்தில் மட்டுமே காணப்படுகின்றது.

அப்புத்தகத்திலும், இப்பாடல் தியாகராஜரால் இயற்றப்பெற்றதாவென ஐயமிருப்பதாகவும், இஃது அவருடைய (தியாகராஜருடைய) சில சீட பரம்பரையினரால் மட்டும் பாடப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Top


Updated on 30 May 2009

No comments: