Friday, May 29, 2009

தியாகராஜ கிருதி - வாரிஜ நயன - ராகம் கேதா3ர கௌ3ள - Vaarija Nayana-1 - Raga Kedara Gaula - Prahlada Bhakti VijayaM

பல்லவி
வாரிஜ நயன நீவாட3னு நேனு
1வாரமு நன்னு 2ப்3ரோவு

அனுபல்லவி
ஸாரெகு மாயா ஸாக3ரமந்து3
நேரக முனிகெ3டு3 நேமமு லேது3 (வாரிஜ)

சரணம்
சரணம் 1
4ன கனகமுலனு தா3ர புத்ருல
கைகொனி மரவனு ரவி தனயுடு3 கானு (வாரிஜ)


சரணம் 2
வாஜி ரத2முலனு வாரமு கைகொனி
ராஜுலனட3சு பார்த2 ராஜு நே கானு (வாரிஜ)


சரணம் 3
நீ ஜபமுலு 3நவ நிது4லௌ த்யாக3-
ராஜ வினுதயீ து3ராஸல தக3லனு (வாரிஜ)


பொருள் - சுருக்கம்
கமலக்கண்ணா! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
  • உன்னவன் நான்; எவ்வமயமும் என்னைக் காப்பாய்

  • எவ்வமயமும், மாயையெனும் கடலில், அறியாமையினால், மூழ்கும் நோக்கமில்லை;

  • செல்வம், பொன், மனைவி, மக்களை ஏற்று, (உன்னை) மறப்பதற்கு, பரிதி மைந்தனல்லன்;

  • குதிரை, தேர்களை எவ்வமயமும் வைத்துக்கொண்டு, அரசர்களையடக்கும், பார்த்த மன்னன் நானல்லன்;

  • உனது செபமே நவ நிதிகளாகும்; இத்தீய ஆசைகளில் அகப்படேன்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
வாரிஜ/ நயன/ நீவாட3னு/ நேனு/
கமல/ கண்ணா/ உன்னவன்/ நான்/

வாரமு/ நன்னு/ ப்3ரோவு/
எவ்வமயமும்/ என்னை/ காப்பாய்/


அனுபல்லவி
ஸாரெகு/ மாயா/ ஸாக3ரமு-அந்து3/
எவ்வமயமும்/ மாயையெனும்/ கடலில்/

நேரக/ முனிகெ3டு3/ நேமமு/ லேது3/ (வாரிஜ)
அறியாமையினால்/ மூழ்கும்/ நோக்கம்/ இல்லை/


சரணம்
சரணம் 1
4ன/ கனகமுலனு/ தா3ர/ புத்ருல/
செல்வம்/ பொன்/ மனைவி/ மக்களை/

கைகொனி/ மரவனு/ ரவி/ தனயுடு3/ கானு/ (வாரிஜ)
ஏற்று/ (உன்னை) மறப்பதற்கு/ பரிதி/ மைந்தன்/ அல்லன்/


சரணம் 2
வாஜி/ ரத2முலனு/ வாரமு/ கைகொனி/
குதிரை/ தேர்களை/ எவ்வமயமும்/ வைத்துக்கொண்டு/

ராஜுலனு/-அட3சு/ பார்த2/ ராஜு/ நே/ கானு/ (வாரிஜ)
அரசர்களை/ அடக்கும்/ பார்த்த/ மன்னன்/ நான்/ அல்லன்/


சரணம் 3
நீ/ ஜபமுலு/ நவ/ நிது4லௌ/ த்யாக3ராஜ/
உனது/ செபமே/ நவ/ நிதிகளாகும்/ தியாகராசனால்/

வினுத/-ஈ/ து3ராஸல/ தக3லனு/ (வாரிஜ)
போற்றப் பெற்றோனே/ இந்த/ தீய ஆசைகளில்/ அகப்படேன்/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - வாரமு நன்னு - வாரமு நனு - வாரிஜானன

2 - ப்3ரோவு - ப்3ரோவுமு

Top

மேற்கோள்கள்
3 - நவ நிது4லௌ - குபேரனின் நிதிகள் - பத்ம, மகாபத்ம, சங்க, மகர, கச்சப, முகுந்த, நந்த, நீல மற்றும் கர்வ ஆகியவை. முன்காலத்தில் இவைகள், எண்ணிக்கைகளைக் குறித்தன. உதாரணமாக 'பத்ம நிதி' 10**32 -ஐக் குறிக்கும். வேதகால கணக்கியல் நோக்கவும்.

Top

விளக்கம்
இப்பாடல் 'பிரகலாத ப4க்தி விஜயம்' என்னும் நாட்டிய-நாடகத்தின் அங்கமாகும். இப்பாடல் பிரகலாதன் இறைவனை நோக்கி உரைப்பதாக

பரிதி மைந்தன் - சுக்கிரீவன்

பார்த்த மன்னன் - அருச்சுனன்

Top


Updated on 30 May 2009

No comments: