Thursday, May 28, 2009

தியாகராஜ கிருதி - வனஜ நயனுட3னி - ராகம் கேதா3ர கௌ3ள - Vanaja Nayanudani - Raga Kedara Gaula

பல்லவி
வனஜ நயனுட3னி வலசிதிவோ வானி
மனஸுன த3ய லேதே3

அனுபல்லவி
1முனுபடி சரிதமுலனு வினியுன்ன
வனித
ஸ்வபா4வமு வலன ஸ்ரீ ராமுனி (வன)

சரணம்
2ஒருல பா34லகு ஓர்வகயுண்டு3
பரம த4ர்ம
மனுசு பா3கு33 பல்குனு
வரது3டு3 ஆஸ்1ரித வத்ஸலுட3னி பேரே
4ர ஜயமொஸங்கு3 ஸ்ரீ த்யாக3ராஜ வினுதுனி (வன)


பொருள் - சுருக்கம்
ஏ மனமே!
  • கமலக்கண்ணனென காதலித்தாயோ? அவன் உள்ளத்தினில் இரக்கம் இல்லையே!

  • முந்தைய சரிதங்களைச் செவிமடுத்துள்ள வனிதையின் இயல்பினைப் போலும், இராமனை கமலக்கண்ணனென காதலித்தாயோ? அவன் உள்ளத்தினில் இரக்கம் இல்லையே!

    • மற்றவர் துன்பங்களைக் கண்டு பொறுக்காதிருத்தல் தலையாய அறமென நன்கு பகர்வான்;

    • (அவனுக்கு) வரமருள்வோன், சார்ந்தோரிடம் கனிவுடையோனெனப் பெயரே;

  • புவியில் வெற்றியளிக்கும், தியாகராசனால் போற்றப் பெற்றோனை கமலக்கண்ணனென காதலித்தாயோ? அவன் உள்ளத்தினில் இரக்கம் இல்லையே!



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
வனஜ/ நயனுடு3/-அனி/ வலசிதிவோ/ வானி/
கமல/ கண்ணன்/ என/ காதலித்தாயோ/ அவன்/

மனஸுன/ த3ய/ லேதே3/
உள்ளத்தினில்/ இரக்கம்/ இல்லையே/


அனுபல்லவி
முனுபடி/ சரிதமுலனு/ வினி-உன்ன/
முந்தைய/ சரிதங்களை/ செவிமடுத்துள்ள/

வனித/ ஸ்வபா4வமு/ வலன/ ஸ்ரீ ராமுனி/ (வன)
வனிதையின்/ இயல்பினை/ போலும்/ ஸ்ரீ ராமனை/ கமலக்கண்ணனென...


சரணம்
ஒருல/ பா34லகு/ ஓர்வக/-உண்டு3ட/
மற்றவர்/ துன்பங்களைக் கண்டு/ பொறுக்காது/ இருத்தல்/

பரம/ த4ர்மமு/-அனுசு/ பா3கு33/ பல்குனு/
தலையாய/ அறம்/ என/ நன்கு/ பகர்வான்/

வரது3டு3/ ஆஸ்1ரித/ வத்ஸலுடு3/-அனி/ பேரே/
(அவனுக்கு) வரமருள்வோன்/ சார்ந்தோரிடம்/ கனிவுடையோன்/ என/ பெயரே/

4ர/ ஜயமு/-ஒஸங்கு3/ ஸ்ரீ த்யாக3ராஜ/ வினுதுனி/ (வன)
புவியில்/ வெற்றி/ யளிக்கும்/ ஸ்ரீ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனை/ கமலக்கண்ணனென...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
1 - முனுபடி சரிதமுலனு வினியுன்ன வனித - முந்தைய சரிதங்களை செவிமடுத்துள்ள வனிதை - ருக்மிணி (கண்ணனின் மனைவி). சிறு வயதிலேயே, கண்ணனின் கதைகளைச் செவிமடுத்து, அவனையே கணவனாகவும் வரித்தாள் ருக்மிணி. ஆனால், அவள் தமையனோ அவளை கண்ணனுக்கு மணம் செய்துகொடுக்க விரும்பவில்லை. எனவே, ருக்மிணி ஒரு அந்தணர் மூலமாக கண்ணனுக்கு, தன்னுடைய உள்ளப் பாங்கினைத் தெரிவித்து, மடலெழுதி யனுப்பினாள். அதில் 'உன்னை இப்பிறவியில் அடைய முடியாவிட்டால், நூறு பிறவிகள் எடுத்தாகிலும் அடைவேன்' என தன்னுடைய திடமான எண்ணத்தினைத் தெரியப்படுத்தினாள். இதனைத்தான் தியாகராஜர் 'வனிதை' என்று குறிப்பிடுகின்றார் எனத் தோன்றுகின்றது. பாகவத புராணம், 10-வது புத்தகம், அத்தியாயம் 52 நோக்கவும்.

2 - ஒருல பா34லகு ஓர்வகயுண்டு3ட பரம த4ர்மமு - மற்றவர் துன்பங்களைக் கண்டு பொறுக்காதிருத்தல் - வால்மீகி ராமாயணம், ஆரண்ய காண்டம், அத்தியாயம் 10-ல் ராமன் சீதையிடம், தண்டகாரண்யத்தில் வாழும் முனிவர்களைக் காப்பதற்கான தன்னுடை விரதத்தின் காரணங்களை விளக்கிக் கூறுவதை, இங்கு தியாகராஜர் குறிப்பிடுவதாகத் தோன்றுகின்றது.

Top

விளக்கம்

இப்பாடல் தியாகராஜர் தனது மனதை நோக்கிப்பகர்வதாக அமைந்துள்ளது.

Top


Updated on 29 May 2009

2 comments:

V Govindan said...

(Comments received by me thru email)
திரு கோவிந்தன் அவர்களே

முனுபடி சரிதமுலனு வினியுன்ன வனித - ஸ்வபா4வமு வலன :- ஸ்வபா4வமு வலன என்பது இயல்பின் காராணமாக என்று பொருள் தராதா? வினியுன்னா என்பது வினியுன்ன என்று மறுவி நின்றது என்று எடுத்துக் கொண்டால் ’முந்தைய சரித்திரங்களைக் கேட்டிருந்தும் பெண் புத்தி காரணமாக’ என்று பொருள் தராதா?

வலன என்பதற்குப் பதிலாக வலெ என்றிருந்தால் போல என்று பொருள் தரும்.

மனஸுன த3ய லேதே3 என்பது எவ்வாறு கிருஷ்ணனுக்குப் பொருந்தும்?

வணக்கம்
கோவிந்தசாமி

V Govindan said...

திரு கோவந்தசாமி அவர்களுக்கு,

'வலெ', 'வலெனு' என்ற சொற்களுக்கு, கிட்டத்தட்ட ஒரே பொருள்தான்.

இச்சொல்லுக்கு 'காரணமாக' என்று பொருள் கொள்ள இயலாது என்று நினைக்கின்றேன்.

இந்த சரணத்தினை என்னுடைய நோக்கில் நான் மொழிபெயர்த்துள்ளேன். எனக்குத் தெரிந்தவரை, இது ருக்மிணியைக் குறிக்கும் என்று நம்புகின்றேன். சீதைக்குப் பொருந்தாது.

தியாகராஜர், ஒருதலைக் காதலைப் பற்றிச் சொல்கின்றார். கிருஷ்ணனுக்கு தயை இருந்தது. அதனால் ருக்மிணியைக் கவர்ந்து சென்று மணந்துகொண்டான். ஆனால், 'ராமனுக்கு அந்தமாதிரி கருணை இல்லையே' என்று தியாகராஜர் அங்கலாய்க்கின்றார்.

வணக்கம்,
கோவிந்தன்.