Thursday, May 28, 2009

தியாகராஜ கிருதி - லாலி லாலய்ய - ராகம் கேதா3ர கௌ3ள - Laali Laalayya - Raga Kedara Gaula

பல்லவி
1லாலி லாலய்ய லாலி

அனுபல்லவி
லாலி கு3ண ஸா1லி 2வன மாலி ஸு-ஹ்ரு23யன
லாலி ம்ரு2து3-தர 3ஹம்ஸ தூலிகா1யன (லாலி)

சரணம்
சரணம் 1
இன வம்ஸ1மந்து3 ஜனியிஞ்சின க4னாப4
கனக மய சேல தி3னகர கோடி ஸோ14
வனஜ 4நயனாக்ரூர வரதா3ப்3ஜ நாப4
ஸனகாதி3 நுத ஸகல ஸத்34க்த ஸுலப4 (லாலி)


சரணம் 2
கர கலித ஸ1ர சாப 52ர ஸி1ரோ-ஹரண
அருணாப்3ஜ நிப4 சரண அஸுர மத3 ஹரண
புர வைரி வினுத ஸம்பூர்ண ஸ1ஸி1 வத3
கருணா ரஸாக்ஷ க3த காம முனி ஸ1ரண (லாலி)


சரணம் 3
6புட3மி வருட3 நாது3 பூஜ கைகொனுமா
கடு3 நம்முவாரிண்ட கலுகு3 ஸ்ரீ-கரமா
7கட3 கண்டி சூபு 8நீகதி3 சால க4னமா
எட3-பா3ய ஜால நன்னேலு குல த4னமா (லாலி)


சரணம் 4
கோடி ஸூர்ய ப்ரப4ல கேரு மண்டபமு
சாடுகா3னலங்கரிஞ்சினதி3 நெலகொனுமு
ஸாடி தொ3ரகனி ஸாது4 ஜன வந்த்3ய விடெ3மு
மாடி மாடிகியொஸகி3 மரவக கொலுதுமு (லாலி)


சரணம் 5
அந்து3 மத்4யம்பு3னனு அபரஞ்ஜிதோனு
ஸுந்த3ரம்பை3ன மஞ்சமு வேஸினானு
அந்து3பை ஜாஜுலனு அமர 9பரிசினானு
அந்த3மௌ நீ 10பாத3 யுக3மு பட்டெத3னு (லாலி)


சரணம் 6
அஸமான ஸூ1ர முக்தாவளுலு மெரய
11அஸமான கி3ரி மத்4ய குஸுமமுலு குரிய
பி3ஸ-ருஹ ப4வாதி3 ஸுர 12ப்3ரு2ந்த3 கோடுலரய
அஸலைன பி3ருது3லிடி3யூசெத3னு ஸத3ய (லாலி)


சரணம் 7
பா43வத 13ஸேவலோ ப33லியுன்னாவு
ராக3 விரஹித நன்னு 14மரவனு பொய்யெத3வு
பா3கை3ன ஜனகஜா பா4க்3யமா நீவு
த்யாக3ராஜுனி நிண்டு33ய சேஸி ப்3ரோவு (லாலி)


பொருள் - சுருக்கம்
 • தாலேலோ! கண்ணுறங்கய்யா! தாலேலோ!


 • தாலேலோ! நற்பண்புகளோனே! வனமாலி! நல்லிதயத்தோனே!

 • தாலேலோ! மென்மையான அன்னத்தூவியில் பள்ளிகொள்வோனே!

 • தாலேலோ! பரிதி குலத்தினில் பிறந்த முகில் வண்ணா! பொன் மயமான ஆடைகளோனே! கோடி பரிதி ஒளியோனே! கமலக்கண்ணா! அக்குரூரருக்கு அருள்வோனே! கமலவுந்தியோனே! சனகாதியரால் போற்றப்பெற்றோனே! அனைத்து நற்றொண்டருக்கெளியோனே!

 • தாலேலோ! கைகளில் வில்லம்பேந்துவோனே! கரனின் தலை கொண்டவனே! செந்தாமரை நிகர் திருவடியோனே! அசுரர் செருக்கையழித்தோனே! புரமெரித்தோனால் போற்றப் பெற்றோனே! முழுமதி வதனத்தோனே! கருணைச்சாறு கண்களோனே! இச்சைகளற்றோனே! முனிவர் புகலே!


 • பூமிதேவியின் கேள்வா! மிக்கு நம்புவோரின் இல்லங்களில் தோன்றும் சீரருள்வோனே! எமது குலச்செல்வமே! ஈடற்ற, நன்மக்களால் தொழப்பெற்றோனே! நிகரற்ற சூரனே! கருணையுடையோனே! ஆசைகளற்றோனே! சிறந்த சனகன் மகளின் பேறே!

  • எனது வழிபாட்டினை யேற்பாய்; கடைக்கண் பார்வை; அஃதுனக்கு மிக்கு பளுவா? இடை பிரியவியலேன்; என்னையாள்வாய்;

  • கோடிப் பரிதியினொளியைப் பழிக்கும் மண்டபம் நன்கலங்கரிக்கப்பட்டுளது; (அதனில்) நிலைபெறுவாய்; வீடிகை அடிக்கடி அளித்து மறவாது சேவிப்போம்;

  • அங்கு (மண்டபத்தின்) நடுவினில் புடமிட்ட பொன்னாலான அழகிய மஞ்சத்தினை வேய்ந்துள்ளேன்; அதன்மீது மல்லிகை மலர்களை நன்கு பரப்பியுள்ளேன்; அழகான உனது திருவடிகளைப் பிடித்துவிட்டேன்;

  • முத்துச் சரங்கள் (திரு மார்பினில்) ஒளிர, நிகரற்ற மலை நடு மலர்கள் பொழிய, மலரோன் முதலான கோடிக்கணக்கான வானோர் தரிசிக்க, அசலான விருதுகளிட்டு ஊஞ்சலாட்டினேன்;

  • பாகவதர்களின் சேவையினில் களைத்துள்ளாய்; என்னை மறக்கப் போகின்றாய்! நீ தியாகராசனை மிக்கு தயை செய்து காப்பாய்.பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
லாலி/ லாலய்ய/ லாலி/
தாலேலோ/ கண்ணுறங்கய்யா/ தாலேலோ/


அனுபல்லவி
லாலி/ கு3ண-ஸா1லி/ வன-மாலி/ ஸு-ஹ்ரு23யன/
தாலேலோ/ நற்பண்புகளோனே/ வனமாலி/ நல்லிதயத்தோனே/

லாலி/ ம்ரு2து3-தர/ ஹம்ஸ/ தூலிகா/ ஸ1யன/ (லாலி)
தாலேலோ/ மென்மையான/ அன்ன/ தூவியில்/ பள்ளிகொள்வோனே/


சரணம்
சரணம் 1
இன/ வம்ஸ1மு-அந்து3/ ஜனியிஞ்சின/ க4ன/-ஆப4/
பரிதி/ குலத்தினில்/ பிறந்த/ முகில்/ வண்ணா/

கனக/ மய/ சேல/ தி3னகர/ கோடி/ ஸோ14/
பொன்/ மயமான/ ஆடைகளோனே/ பரிதி/ கோடி/ ஒளியோனே/

வனஜ/ நயன/-அக்ரூர/ வரத3/-அப்3ஜ/ நாப4/
கமல/ கண்ணா/ அக்குரூரருக்கு/ அருள்வோனே/ கமல/ உந்தியோனே/

ஸனக-ஆதி3/ நுத/ ஸகல/ ஸத்3-ப4க்த/ ஸுலப4/ (லாலி)
சனகாதியரால்/ போற்றப்பெற்றோனே/ அனைத்து/ நற்றொண்டருக்கு/ எளியோனே/


சரணம் 2
கர/ கலித/ ஸ1ர/ சாப/ க2ர/ ஸி1ரோ/-ஹரண/
கைகளில்/ ஏந்துவோனே/ அம்பு/ வில்/ கரனின்/ தலை/ கொண்டவனே/

அருண/-அப்3ஜ/ நிப4/ சரண/ அஸுர/ மத3/ ஹரண/
செந்/ தாமரை/ நிகர்/ திருவடியோனே/ அசுரர்/ செருக்கை/ யழித்தோனே/

புர/ வைரி/ வினுத/ ஸம்பூர்ண/ ஸ1ஸி1/ வத3ன/
புரம்/ (பகை) எரித்தோனால்/ போற்றப் பெற்றோனே/ முழு/ மதி/ வதனத்தோனே/

கருணா/ ரஸ/-அக்ஷ/ க3த/ காம/ முனி/ ஸ1ரண/ (லாலி)
கருணை/ சாறு/ கண்களோனே/ அற்றோனே/ இச்சைகள்/ முனிவர்/ புகலே/


சரணம் 3
புட3மி/ வருட3/ நாது3/ பூஜ/ கைகொனுமா/
பூமிதேவியின்/ கேள்வா/ எனது/ வழிபாட்டினை/ யேற்பாய்/

கடு3/ நம்முவாரு/-இண்ட/ கலுகு3/ ஸ்ரீ-கரமா/
மிக்கு/ நம்புவோரின்/ இல்லங்களில்/ தோன்றும்/ சீரருள்வோனே/

கட3/ கண்டி/ சூபு/ நீகு/-அதி3/ சால/ க4னமா/
கடை/ கண்/ பார்வை/ உனக்கு/ அஃது/ மிக்கு/ பளுவா/

எட3/-பா3ய/ ஜால/ நன்னு/-ஏலு/ குல/ த4னமா/ (லாலி)
இடை/ பிரிய/ இயலேன்/ என்னை/ ஆள்வாய்/ (எமது) குல/ செல்வமே/


சரணம் 4
கோடி/ ஸூர்ய/ ப்ரப4ல/ கேரு/ மண்டபமு/
கோடி/ பரிதியின்/ ஒளியை/ பழிக்கும்/ மண்டபம்/

சாடுகா3னு/-அலங்கரிஞ்சினதி3/ நெல/ கொனுமு/
நன்கு/ அலங்கரிக்கப்பட்டுளது/ (அதனில்) நிலை/ பெறுவாய்/

ஸாடி/ தொ3ரகனி/ ஸாது4/ ஜன/ வந்த்3ய/ விடெ3மு/
ஈடு/ அற்ற/ நன்/ மக்களால்/ தொழப்பெற்றோனே/ வீடிகை/

மாடி மாடிகி/-ஒஸகி3/ மரவக/ கொலுதுமு/ (லாலி)
அடிக்கடி/ அளித்து/ மறவாது/ சேவிப்போம்/


சரணம் 5
அந்து3/ மத்4யம்பு3னனு/ அபரஞ்ஜிதோனு/
அங்கு/ (மண்டபத்தின்) நடுவினில்/ புடமிட்ட பொன்னாலான/

ஸுந்த3ரம்பை3ன/ மஞ்சமு/ வேஸினானு/
அழகிய/ மஞ்சத்தினை/ வேய்ந்துள்ளேன்/

அந்து3பை/ ஜாஜுலனு/ அமர/ பரிசினானு/
அதன்மீது/ மல்லிகை மலர்களை/ நன்கு/ பரப்பியுள்ளேன்/

அந்த3மௌ/ நீ/ பாத3/ யுக3மு/ பட்டெத3னு/ (லாலி)
அழகான/ உனது/ திருவடி/ இணையினை/ பிடித்துவிட்டேன்/


சரணம் 6
அஸமான/ ஸூ1ர/ முக்தா/-ஆவளுலு/ மெரய/
நிகரற்ற/ சூரனே/ முத்து/ சரங்கள்/ (திரு மார்பினில்) ஒளிர/

அஸமான/ கி3ரி/ மத்4ய/ குஸுமமுலு/ குரிய/
நிகரற்ற/ மலை/ நடு/ மலர்கள்/ பொழிய/

பி3ஸ-ருஹ ப4வ/-ஆதி3/ ஸுர/ ப்3ரு2ந்த3 கோடுலு/-அரய/
மலரோன்/ முதலான/ வானோர்/ கோடிக்கணக்கான/ தரிசிக்க/

அஸலைன/ பி3ருது3லு/-இடி3/-ஊசெத3னு/ ஸத3ய/ (லாலி)
அசலான விருதுகள்/ இட்டு/ ஊஞ்சலாட்டினேன்/ கருணையுடையோனே/


சரணம் 7
பா43வத/ ஸேவலோ/ ப33லி-உன்னாவு/
பாகவதர்களின்/ சேவையினில்/ களைத்துள்ளாய்/

ராக3/ விரஹித/ நன்னு/ மரவனு/ பொய்யெத3வு/
ஆசைகள்/ அற்றோனே/ என்னை/ மறக்க/ போகின்றாய்!

பா3கை3ன/ ஜனகஜா/ பா4க்3யமா/ நீவு/
சிறந்த/ சனகன் மகளின்/ பேறே/ நீ/

த்யாக3ராஜுனி/ நிண்டு3/ த3ய/ சேஸி/ ப்3ரோவு/ (லாலி)
தியாகராசனை/ மிக்கு/ தயை/ செய்து/ காப்பாய்/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - லாலி லாலய்ய லாலி - லாலி லாலய்ய லாலி (ராமய்ய)

6 - புட3மி வருட3 - புட3மி வரத3 : 'புட3மி வருட3' சரியாகும்.

8 - நீகதி3 - நீகிதி3

9 - பரிசினானு - பரிசானு : 'பரிசினானு' சரியாகும்

14 - மரவனு பொய்யெத3வு - மரவக பொய்யேவு : 'மரவனு பொய்யெத3வு' என்பதற்கு 'என்னை மறக்கப் போகின்றாய்!' என்று பொருள் - அதாவது 'என்னை மறந்துவிடாதே' என. 'மரவக பொய்யேவு' என்பதற்கு அதற்கு எதிரான பொருளாகும். எனவே 'மரவக பொய்யேவு' தவறாகும்

Top

மேற்கோள்கள்
2 - வன மாலி - விஷ்ணு அணியும் துளசி, மல்லிகை, மந்தாரை, பாரிஜாதம் மற்றும் தாமரை மலர்களால் தொடுக்கப்பட்ட 'வைஜயந்தி மாலை' வனமாலை எனப்படும்.

4 - அக்ரூர வரத - அக்குரூரர் - கண்ணனை மதுரைக்கழைத்துச் சென்றவர் - பாகவத புராணம், 10-வது புத்தகம், அத்தியாயம் 40 நோக்கவும்.

Top

5 - 2ர ஸி1ரோ-ஹரண - கரன் - சூர்ப்பணகையின் சோதரன் - வால்மீகி ராமாயணம், ஆரண்ய காண்டம், அத்தியாயம் 30 நோக்கவும்.

11 - அஸமான கி3ரி மத்4ய குஸுமமுலு - நிகரற்ற மலை - மேரு மலை - நிகரற்ற மலை நடு மலர் - பாரிஜாத மலர் - பாரிஜாத மரம் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றியது. தேவி பாகவதம், புத்தகம் 12, அத்தியாயம் 10-ல் இம்மரம், 'மணித்3வீபம்' எனும் தீவின் நடுவிலிருப்பதாக கூறப்படுகின்றது.

பிரமாண்ட புராணம், லலிதோபாக்யானத்தின்படி , ஸ்ரீபுரம், மேரு மலையின் நடுவிலிருப்பதாகவும், பாரிஜாத மரம், ஸ்ரீபுரத்தின் 7-வது கோட்டையில் இருப்பதாகவும் கூறப்படும்.

Top

விளக்கம்
3 - ஹம்ஸ தூலிகா - அன்னத்தூவி - அன்னப்பறவையின் இறகுகளாலான மெத்தை - இலவம் பஞ்சினாலான மெத்தையினையும் 'ஹம்ஸ தூலிகா' என்று கூறுவதுண்டு.

7 - கட3 கண்டி சூபு - கடைக்கண் பார்வை. இறைவனின் கடைக்கண் பார்வை 'அருள் செய்தல்' எனப்படும். தியாகராஜர், 'ராம ராம ராமசந்த்3ர' என்ற 'க4ண்டா' ராக கிருதியில், 'எல்லோர் முன்னிலையிலும் உன்னைக் கைப்பிடித்த பின்னர், கடைக்கண்ணால் கண்டால் என்னவுள்ளது தரம்?' என்கின்றார். அதாவது, அவர், கடைக்கண் பார்வையினாலும் நி்றைவுறவில்லை. இறைவன், தன்னை நேருக்கு நேர் காண வேண்டுகின்றார்.


Top

10 - பாத3 யுக3மு பட்டெத3னு - உறங்குமுன் பாதங்களைப் பிடித்துவிடுவதல் ஆயுர்வேத வைத்திய முறையினில் 'பத3ப்4யங்க3ம்' எனப்படும்.

12 - ப்3ரு2ந்த3 கோடி - கோடி - 100 லட்சங்களாகும் (10^7); 'ப்3ரு2ந்த3' அல்லது 'வ்ரு2ந்த3' - 1000 கோடிகள் (அல்லது 10 கோடிகள்) எனப்படும் (10^11 அல்லது 10^9); எனவே 'ப்3ரு2ந்த3 கோடி' - 10^18 அல்லது 10^16 - ஆகும்.

13 - ஸேவலோ ப33லியுன்னாவு - பாகவதர்களின் சேவையினில் - இறைவன் தொண்டர்களைக் காக்கும் பணியில் ஈடுபட்டதனால் களைத்ததாக

சனகாதியர் - சனகர், சனந்தனர் முதலிய பிரமனின் புதல்வர்கள்

ஈடற்ற - இறைவனைக் குறிக்கும்

Top


Updated on 28 May 2009

No comments: