Sunday, April 19, 2009

தியாகராஜ கிருதி - அபி4மானமென்னடு3 - ராகம் குஞ்ஜரி - Abhimaanamennadu - Raga Kunjari

பல்லவி
அபி4மானமென்னடு3 கல்கு3ரா
அனாது2டை3ன நாது3பை நீகு

அனுபல்லவி
அபராத4முலன்னி மன்னிம்புமய்ய
அபி4ராம பட்டாபி4ராம நாயந்து3 (அபி4)

சரணம்
கன்ன தல்லியு கன்ன தண்ட்3ரியு
அன்னியு நீவேயனி நம்ம லேதா3
நினு வினா க3தி நாகெவரு லேரே
நன்னு ப்3ரோவு த்யாக3ராஜ வினுத (அபி4)


பொருள் - சுருக்கம்
களிப்பூட்டும் பட்டாபிராமா! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
  • அன்பு என்றுண்டாகுமய்யா, அனாதையான என்மீது உனக்கு?

  • குற்றங்கள் யாவற்றையும் மன்னியுமய்யா;

  • பெற்ற தாயும், பெற்ற தந்தையும், யாவும் நீயேயென நம்பவில்லையா?

    • உன்னையன்றி கதியெனக்கெவருமிலரே;

    • என்னைக் காப்பாய்,



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
அபி4மானமு/-என்னடு3/ கல்கு3ரா/
அன்பு/ என்று/ உண்டாகுமய்யா/

அனாது2டை3ன/ நாது3பை/ நீகு/
அனாதையான/ என்மீது/ உனக்கு/


அனுபல்லவி
அபராத4முலு/-அன்னி/ மன்னிம்புமு/-அய்ய/
குற்றங்கள்/ யாவற்றையும்/ மன்னியும்/ அய்யா/

அபி4ராம/ பட்டாபி4ராம/ நாயந்து3/ (அபி4)
களிப்பூட்டும்/ பட்டாபிராமா/ என்னிடம்/ அன்பு...


சரணம்
கன்ன/ தல்லியு/ கன்ன/ தண்ட்3ரியு/
பெற்ற/ தாயும்/ பெற்ற/ தந்தையும்/

அன்னியு/ நீவே/-அனி/ நம்ம லேதா3/
யாவும்/ நீயே/ யென/ நம்பவில்லையா/

நினு/ வினா/ க3தி/ நாகு/-எவரு/ லேரே/
உன்னை/ அன்றி/ கதி/ எனக்கு/ எவரும்/ இலரே;

நன்னு/ ப்3ரோவு/ த்யாக3ராஜ/ வினுத/ (அபி4)
என்னை/ காப்பாய்/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்

விளக்கம்
ஸ்ரீ TK கோவிந்த ராவ் அவர்களின் 'Compositions of Tyagaraja' என்ற புத்தகத்தினில், இப்பாடல் தியாகராஜரால் இயற்றப்பெற்றதா என ஐயமிருப்பதாகவும், அவருடைய (தியாகராஜருடைய) ஓரிரு சீடப் பரம்பரையினரே இப்பாடலைப் பாடுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Top


Updated on 20 Apr 2009

No comments: