Monday, April 20, 2009

தியாகராஜ கிருதி - நேனெந்து3 வெதுகுது3ரா - ராகம் கர்னாடக பெ3ஹாக்3 - Nenendu Vetukudura - Raga Karnaataka Behag

பல்லவி
நேனெந்து3 வெதுகுது3ரா ஹரி

அனுபல்லவி
1நால்கு3 மோமுல-வானி மொர-
நாலகிஞ்சி ரானி நின்னு (நேனெந்து3)

சரணம்
கலுஷாத்முடை3 து3ஷ்-கர்ம யுதுடை3
பலுமாரு து3ர்-பா4ஷியை
இலலோ ப4க்தாக்3ரேஸருல
வேஷியை த்யாக3ராஜ பூஜித (நேனெந்து3)


பொருள் - சுருக்கம்
அரியே! தியாகராசனால் தொழப் பெற்றோனே!
  • நானெங்கு தேடுவேனய்யா?

  • அந்நான்கு வதனத்தோனின் முறையீட்டினையும் கருதி வாராத உன்னை நானெங்கு தேடுவேனய்யா?

    • களங்க உள்ளத்தோனாகி,

    • தீயச் செயல்கள் கூடியவனாகி,

    • பன்முறை, தீயச் சொற்களோனாகி,

    • புவியில், தொண்டரிற் சிறந்தோரின் வேடத்தோனாகி,

  • நானெங்கு தேடுவேனய்யா?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நேனு/-எந்து3/ வெதுகுது3ரா/ ஹரி/
நான்/ எங்கு/ தேடுவேனய்யா/ அரியே/


அனுபல்லவி
ஆ/ நால்கு3/ மோமுல-வானி/ மொரனு/-
அந்த/ நான்கு/ வதனத்தோனின்/ முறையீட்டினையும்/

ஆலகிஞ்சி/ ரானி/ நின்னு/ (நேனு-எந்து3)
கருதி/ வாராத/ உன்னை/ நானெங்கு...


சரணம்
கலுஷ/-ஆத்முடை3/ து3ஷ்-/கர்ம/ யுதுடை3/
களங்க/ உள்ளத்தோனாகி/ தீய/ செயல்கள்/ கூடியவனாகி/

பலுமாரு/ து3ர்-/பா4ஷியை/
பன்முறை/ தீய/ சொற்களோனாகி/

இலலோ/ ப4க்த/-அக்3ரேஸருல/
புவியில்/ தொண்டரிற்/ சிறந்தோரின்/

வேஷியை/ த்யாக3ராஜ/ பூஜித/ (நேனு-எந்து3)
வேடத்தோனாகி/ தியாகராசனால்/ தொழப் பெற்றோனே/ நானெங்கு...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
திரு TK கோவிந்த ராவ் அவர்களின் 'Compositions of Tyagaraja' என்ற புத்தகத்தில், இப்பாடலின் ராகம் 'கர்னாடக பெ3ஹாக்3' என்று கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற புத்தகங்களில், ராகம் 'ஹரி காம்போ4ஜி' என்று கொடுக்கப்பட்டுள்ளது.

Top

மேற்கோள்கள்
1 - நால்கு3 மோமுல-வானி மொர - அந்நான்கு வதனத்தோனின் முறையீட்டினை. 'ஸமுகா2ன நில்வ' என்ற கீர்த்தனையில் தியாகராஜர் கூறுவது -

"பிரமனும், தேவர்களும், திசைமன்னர்களும் மற்றோரும் உன்னை, பாற்கடலில் காணவியலாமல், அவர்கள் யாவரும் ஒன்று கூடி முறையிடவே, அவர்களுடைய கோரிக்கை நிறைவேறியது."

அனேகமாக, இஃது பாற்கடலில், பிரமனும் மற்றோரும் விஷ்ணுவை, ராவணனை வதைப்பதற்கு அவதரிக்க வேண்டியதைக் குறிக்கும். வால்மீகி ராமாயணம், பால காண்டம், அத்தியாயம் 15 நோக்கவும்.

Top

விளக்கம்
நான்கு வதனத்தோன் - பிரமன்

Top


Updated on 20 Apr 2009

No comments: