Sunday, April 19, 2009

தியாகராஜ கிருதி - அபி4மானமு லேதே3மி - ராகம் ஆந்தா3ளி - Abhimaanamu Ledemi - Raga Andali

பல்லவி
அபி4மானமு லேதே3மி
நீவபி4னய வசனமுலாடே3தே3மி

சரணம்
சரணம் 1
மாலிமிஞ்சுகைன லேதா3 1தன்னு
மாலின
4ர்மமு கலதா3 2வன
மாலி
நாபை த3ய ராதா3 பாலு-
மாலின கு3ணமிகனைன போதா3 (அபி4)


சரணம் 2
கலிமியுண்டே பெட்டுகோரா க்ரு2
கலுகு3னனுசு வேடி3னாரா நா
கலவரமுலு வினி ராரா
போகலு நீகு கலத3னி நேனெருங்க3 லேரா (அபி4)


சரணம் 3
ராஜு நீவனி நம்மினானு க3
ராஜுன்ன விதமு வின்னானு ரதி
ராஜ தா3ஸுல வேட3 லேனு த்யாக3-
ராஜு நீவாட3னி பேரு கொன்னானு (அபி4)


பொருள் - சுருக்கம்
வனமாலி!
  • (என்னிடம்) அன்பு இல்லையா என்ன? நீ சைகை வசனங்கள் பகர்வதென்ன?


  • கனிவு கொஞ்சமும் இல்லையோ?

    • தன்னை விலக்கிய அறம் உளதோ?

    • என்மீது தயை வாராதோ?

    • காலம் தாழ்த்தும் பண்பு (உன்னை விட்டு) இனியாகிலும் அகலாதோ?


  • செல்வமுண்டாகில் (நீயே) வைத்துக்கொள்ளய்யா;

    • கிருபை தோன்றுமென வேண்டினேனய்யா;

    • எனது கலவரத்தினைக் கேட்டு வாராயய்யா;

    • பொல்லாமை உனக்குண்டென நானறியேனய்யா;


  • அரசன் நீயென நம்பினேன்;

    • கரியரசன் இருந்த நிலையைப் பற்றி செவி மடுத்தேன்;

    • இரதிபதியின் அடிமைகளை வேண்டேன்;

    • தியாகராசன் உன்னவனெனப் பெயர் கொண்டேன்;



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
அபி4மானமு/ லேதா3/-ஏமி/
அன்பு/ இல்லையா/ என்ன/

நீவு/-அபி4னய/ வசனமுலு/-ஆடே3தி3/-ஏமி/
நீ/ சைகை/ வசனங்கள்/ பகர்வது/ என்ன/



சரணம்
சரணம் 1
மாலிமி/-இஞ்சுகைன/ லேதா3/ தன்னு/
கனிவு/ கொஞ்சமும்/ இல்லையோ/ தன்னை/

மாலின/ த4ர்மமு/ கலதா3/
விலக்கிய/ அறம்/ உளதோ/

வன மாலி/ நாபை/ த3ய/ ராதா3/
வன/ மாலி/ என்மீது/ தயை/ வாராதோ/

பாலு-மாலின/ கு3ணமு/-இகனைன/ போதா3/ (அபி4)
காலம் தாழ்த்தும்/ பண்பு/ இனியாகிலும்/ அகலாதோ/


சரணம் 2
கலிமி/-உண்டே/ பெட்டுகோரா/ க்ரு2ப/
செல்வம்/ உண்டாகில்/ (நீயே) வைத்துக்கொள்ளய்யா/ கிருபை/

கலுகு3னு/-அனுசு/ வேடி3னாரா/ நா/
தோன்றும்/ என/ வேண்டினேனய்யா/ எனது/

கலவரமுலு/ வினி/ ராரா/
கலவரத்தினை/ கேட்டு/ வாராயய்யா/

போகலு/ நீகு/ கலது3/-அனி/ நேனு/-எருங்க3 லேரா/ (அபி4)
பொல்லாமை/ உனக்கு/ உண்டு/ என/ நான்/ அறியேனய்யா/


சரணம் 3
ராஜு/ நீவு/-அனி/ நம்மினானு/
அரசன்/ நீ/ யென/ நம்பினேன்/

3ஜ/ ராஜு/-உன்ன/ விதமு/ வின்னானு/
கரி/ அரசன்/ இருந்த/ நிலையைப் பற்றி/ செவி மடுத்தேன்/

ரதி/ ராஜ/ தா3ஸுல/ வேட3 லேனு/
இரதி/ பதியின்/ அடிமைகளை/ வேண்டேன்/

த்யாக3ராஜு/ நீவாடு3/-அனி/ பேரு/ கொன்னானு/ (அபி4)
தியாகராசன்/ உன்னவன்/ என/ பெயர்/ கொண்டேன்/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்

விளக்கம்
1 - தன்னு மாலின த4ர்மமு கலதா3 - தன்னை விலக்கிய அறம் உளதா? - தனக்கே எதிரான அறம் உளதா? பல்லவியில் 'என்னிடம் அன்பு இல்லையா?' என்றும், 3-வது சரணத்தில் 'தியாகராஜன், உன்னவனெனப் பெயர் கொண்டேன்' என்ற இரண்டினையும் சேர்த்து நோக்குகையில், 'நான் உன்னவனாகையால், என்னைக் காத்தல் உனது தருமம் (அறம்) ஆகும். அப்படித் தவறினால், அஃது உன்னையே ஏமாற்றிக்கொண்டது போலாகும்' என்கிறார் எனத் தோன்றுகின்றது.

2 - வன மாலி - விஷ்ணு அணியும், 'வைஜயந்தி' எனும், துளசி, மல்லிகை, மந்தாரம், பாரிஜாதம் மற்றும் தாமரை மலர்களின் மாலைக்கு, 'வனமாலை' என்று பெயர். அதனை அணிபவன் 'வனமாலி'.

இரதிபதி - காமன்

Top


Updated on 19 Apr 2009

No comments: