Saturday, April 18, 2009

தியாகராஜ கிருதி - லாலி லாலியனி - ராகம் ஹரி காம்போ4ஜி - Laali Laaliyani - Raga Hari Kambhoji

பல்லவி
லாலி லாலியனியூசேரா 1வன-
மாலி
மாலிமிதோ ஜூசேரா

சரணம்
சரணம் 1
தே3வ தே3வயனி பிலிசேரா
மஹானுபா42பா4வமுன தலசேரா (லா)


சரணம் 2
ராம ராமயனி பலிகேரா
நிஷ்காம காம ரிபு நுத ராரா (லா)


சரணம் 3
கோரி கோரி நின்னு கொலிசேரா 3மாயா
தா3ரி
தா3ரி ஸத்344ஜனரா (லா)


சரணம் 4
ராஜ ராஜயனி பொக3டே3ரா த்யாக3-
ராஜ ராஜயனி ம்ரொக்கேரா (லா)


பொருள் - சுருக்கம்
வனமாலி! பெருந்தகையே! இச்சைகளற்றோனே! காமனின் பகைவனால் போற்றப் பெற்றோனே! மாயையின்தலைவா!
  • 'லாலி லாலி'யெனத் தாலாட்டினேனய்யா;

  • காதலுடன் நோக்கினேனய்யா;

  • 'தேவ தேவா'யென அழைத்தேனய்யா;

  • உள்ளத்தினில் நினைத்தேனய்யா;

  • 'இராமா இராமா'யெனப் பகர்ந்தேனய்யா;

  • வேண்டி வேண்டியுன்னை சேவித்தேனய்யா;

  • நன்னெறி உனது புகழ் பாடுதலய்யா;

  • 'மன்னா மன்னா'யெனப் புகழ்ந்தேனய்யா;

  • தியாகராசனின் மன்னனென வணங்கினேனய்யா;

வாருமய்யா.


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
லாலி/ லாலி/-அனி/-ஊசேரா/
'லாலி/ லாலி'/யென/ தாலாட்டினேனய்யா/

வனமாலி/ மாலிமிதோ/ ஜூசேரா/
வனமாலி/ காதலுடன்/ நோக்கினேனய்யா/


சரணம்
சரணம் 1
தே3வ/ தே3வ/-அனி/ பிலிசேரா/
'தேவ/ தேவா'/ யென/ அழைத்தேனய்யா/

மஹானுபா4வ/ பா4வமுன/ தலசேரா/ (லா)
பெருந்தகையே/ உள்ளத்தினில்/ நினைத்தேனய்யா/


சரணம் 2
ராம/ ராம/-அனி/ பலிகேரா/
'இராமா/ இராமா/' யென/ பகர்ந்தேனய்யா/

நிஷ்காம/ காம/ ரிபு/ நுத/ ராரா/ (லா)
இச்சைகளற்றோனே/ காமனின்/ பகைவனால்/ போற்றப் பெற்றோனே/ வாருமய்யா/


சரணம் 3
கோரி/ கோரி/ நின்னு/ கொலிசேரா/ மாயா/
வேண்டி/ வேண்டி/ யுன்னை/ சேவித்தேனய்யா/ மாயையின்/

தா3ரி/ தா3ரி/ ஸத்3-ப4ஜனரா/ (லா)
தலைவா/ நன்னெறி/ (உனது) புகழ் பாடுதலய்யா/


சரணம் 4
ராஜ/ ராஜ/-அனி/ பொக3டே3ரா/
'மன்னா/ மன்னா'/ யென/ புகழ்ந்தேனய்யா/

த்யாக3ராஜ/ ராஜ/-அனி/ ம்ரொக்கேரா/ (லா)
தியாகராசனின்/ மன்னன்/ என/ வணங்கினேனய்யா/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - மாயா தா3ரி - மாய தா3ரி.

4 - 4ஜனரா - ப4ஜனெரா.

ஊசேரா, ஜூசேரா, பிலிசேரா... போன்ற சொற்கள் - ஊசெத3ரா, ஜூசெத3ரா, பிலிசெத3ரா... என.

Top

மேற்கோள்கள்
1 - வனமாலி - வனமாலி - வைஜயந்தி எனப்படும் மாலை அணியும் அரி. துளசி, மல்லிகை, மந்தாரம், பாரிஜாதம் மற்றும் தாமரை மலர்களாலான மாலை. 'மாலைகள்' நோக்கவும்.

Top

விளக்கம்
2 - பா4வமுன தலசேரா - இஃது உள்ளப்பாங்கினைக் காட்டுவது. இந்நிலையினை உணரத்தான் முடியும்; சொற்களினால் விவரிக்க இயலாது.

3 - மாயா தா3ரி - தா3ரி என்ற வடமொழிச்சொல்லுக்கு, 'அழிப்பவன்' என்றும் 'தலைவன்' என்றும் பொருளுண்டு. அதே தெலுங்கு சொல்லுக்கு, 'அழிப்பவன்', 'தலைவன்' மற்றும் 'அணிபவன்' என்றும் பொருளுண்டு. ஆயின், 'மாயையின் தலைவன்' என்று இங்கு
பொருள் கொள்ளல், கீழ்க்கண்ட பகவத்-கீதை அத்தியாயம் 7, செய்யுள் 14-ன் படி பொருந்தும் -

கண்ணன் பகர்வது -
"உண்மையில், குணங்களாலான எனது இந்த மாயை கடத்தற்கரியது. எனக்கு தொண்டு செய்பவர்கள் மட்டுமே இந்த மாயையினை கடக்கவல்லர்." (ஸ்வாமி ஸ்வரூபாநந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்.)

காமனின் பகைவன் - சிவன்
மாயையின் தலைவா - 'மாயையினை அழிப்போனே' எனவும் கொள்ளலாம்.
Top


Updated on 18 Apr 2009

No comments: