Thursday, April 16, 2009

தியாகராஜ கிருதி - ராரா ப2ணி ஸ1யன - ராகம் ஹரி காம்போ4ஜி - Raaraa Phani Sayana - Raga Hari Kambhoji

பல்லவி
ராரா ப2ணி ஸ1யன ரவி ஜலதி4ஜ நயன
ராகா ஸ1ஸி1 வத3ன ரமணீயாபக4

சரணம்
சரணம் 1
ராரா ப4வ தரண ராராமித ஸுகு3
ராரா பூ4-ரமண ராராப்3ஜ ஸு-சரண (ரா)


சரணம் 2
ராரா ஸு-குமார ராராஸம ஸூ1
ராரா ரகு4 வீர ராரா யுதி4 தீ4ர (ரா)


சரணம் 3
ராரா ஜானகிதோ ராரா ஸஹஜுலதோ
ராரா பவனஜுதோ ராரா ப4க்துலதோ (ரா)


சரணம் 4
நாகா3வன நேத ராக3 கு3ண விரஹித
ஸாக3ர தனய யுத த்யாக3ராஜ வினுத (ரா)


பொருள் - சுருக்கம்
  • அரவணையோனே!

  • பரிதி மதி கண்களோனே!

  • முழுமதி வதனத்தோனே!

  • கவர்ச்சியான உடலோனே!

  • பிறவிக் கடலைக் கடத்துவோனே!

  • மிக்கு நற்குணத்தோனே!

  • பூமி கொழுநனனே!

  • கமலத் திருவடிகளோனே!

  • சுகுமாரா!

  • நிகரற்ற சூரா!

  • இரகுவீரா!

  • களத்தில் தீரா!

  • கரியைக் காத்த தலைவா!

  • இச்சை மற்றும் குணங்களற்றோனே!

  • கடல் மகளுடனுறையே!

  • தியாகராசனால் போற்றப் பெற்றோனே!

    • வாராய்.

    • வாராய், சானகியுடன், உடன் பிறந்தோருடன், வாயு மைந்தனுடன், தொண்டர்களுடன்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராரா/ ப2ணி/ ஸ1யன/ ரவி/ ஜலதி4ஜ/ நயன/
வாராய்/, அரவு/ அணையோனே/ பரிதி/ கடலுதித்தோன் (மதி)/ கண்களோனே/

ராகா ஸ1ஸி1/ வத3ன/ ரமணீய/-அபக4ன/
முழுமதி/ வதனத்தோனே/ கவர்ச்சியான/ உடலோனே/!


சரணம்
சரணம் 1
ராரா/ ப4வ/ தரண/ ராரா/-அமித/ ஸுகு3ண/
வாராய்/ பிறவிக் கடலை/ கடத்துவோனே/ வாராய்/ மிக்கு/ நற்குணத்தோனே/

ராரா/ பூ4/-ரமண/ ராரா/-அப்3ஜ/ ஸு-சரண/ (ரா)
வாராய்/, பூமி/ கொழுநனனே/ வாராய்/ கமல/ திருவடிகளோனே/


சரணம் 2
ராரா/ ஸு-குமார/ ராரா/-அஸம/ ஸூ1ர/
வாராய்/, சுகுமாரா/ வாராய்/ நிகரற்ற/ சூரா/

ராரா/ ரகு4 வீர/ ராரா/ யுதி4/ தீ4ர/ (ரா)
வாராய்/ இரகுவீரா/ வாராய்/ களத்தில்/ தீரா/


சரணம் 3
ராரா/ ஜானகிதோ/ ராரா/ ஸஹஜுலதோ/
வாராய்/ சானகியுடன்/ வாராய்/ உடன் பிறந்தோருடன்/

ராரா/ பவனஜுதோ/ ராரா/ ப4க்துலதோ/ (ரா)
வாராய்/ வாயு மைந்தனுடன்/ வாராய்/ தொண்டர்களுடன்/


சரணம் 4
நாக3/-அவன/ நேத/ ராக3/ கு3ண/ விரஹித/
கரியை/ காத்த/ தலைவா/ இச்சை/ மற்றும்/ குணங்கள்/ அற்றோனே/

ஸாக3ர/ தனய/ யுத/ த்யாக3ராஜ/ வினுத/ (ரா)
கடல்/ மகள்/ உடனுறையே/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்

விளக்கம்
திரு TK கோவிந்த ராவ் அவர்களின் 'Compositions of Tyagaraja' என்ற புத்தகத்தில், இப்பபாடல் தியாகராஜர் இயற்றினாரா என்று ஐயமிருப்பதாகவும், அவருடைய சில சீடப் பரம்பரையினரே இப்பாடலைப் பாடுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சில புத்தகங்களில், 'ஸயன', 'நயன'.... போன்ற அனைத்து சொற்களும் 'ஸயனா', 'நயனா'.... என்று கொடுக்கப்பட்டுள்ளது.

கடல் மகள் - இலக்குமி

Top


Updated on 16 Apr 2009

No comments: