Wednesday, April 15, 2009

தியாகராஜ கிருதி - ராம நன்னு ப்3ரோவ - ராகம் ஹரி காம்போ4ஜி - Rama Nannu Brova - Raga Hari Kambhoji

பல்லவி
ராம நன்னு ப்3ரோவ 1ராவேமகோ லோகாபி4(ராம)

அனுபல்லவி
சீமலோ ப்3ரஹ்மலோ ஸி1வ கேஸ1வாது3லலோ
ப்ரேம மீர மெலகு3சுண்டே3 பி3ருது3 வஹிஞ்சின ஸீதா (ராம)

சரணம்
மெப்புலகை கன்ன தாவுனப்பு பட3க விர்ர வீகி3
தப்பு பனுலு லேகயுண்டே3 த்யாக3ராஜ 2வினுத ஸீதா (ராம)


பொருள் - சுருக்கம்
  • இராமா! உலகினை மகிழ்விப்போனே!

  • எறும்பிலும், பிரமனிலும், சிவன், கேசவன் முதலானோரிலும், மிக்கு கனிவுடன், இயங்கிக்கொண்டிருக்கும் விருதினை யேந்திய சீதாராமா!

  • தியாகராசனால் போற்றப் பெற்ற சீதாராமா!

    • புகழுக்காக, கண்ட இடங்களில் கடன் படாமலும்,

    • செருக்குற்று, தவறான செயல்கள் புரியாமலும் இருக்கின்றேன்.

    • அப்படியிருக்க, என்னைக் காக்க வாராயேனோ?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராம/ நன்னு/ ப்3ரோவ/ ராவு-ஏமகோ/ லோக/-அபி4ராம/
இராமா/ என்னை/ காக்க/ வாராயேனோ/ உலகினை/ மகிழ்விப்போனே/


அனுபல்லவி
சீமலோ/ ப்3ரஹ்மலோ/ ஸி1வ/ கேஸ1வ/-ஆது3லலோ/
எறும்பிலும்/ பிரமனிலும்/ சிவன்/ கேசவன்/ முதலானோரிலும்/

ப்ரேம/ மீர/ மெலகு3சு-உண்டே3/ பி3ருது3/ வஹிஞ்சின/ ஸீதா/ (ராம)
கனிவு/ மிக/ இயங்கிக்கொண்டிருக்கும்/ விருதினை/ ஏந்திய/ சீதா/ ராமா!


சரணம்
மெப்புலகை/ கன்ன/ தாவுன/-அப்பு/ பட3க/ விர்ர வீகி3/
புகழுக்காக/ கண்ட/ இடங்களில்/ கடன்/ படாமலும்/ செருக்குற்று/

தப்பு/ பனுலு/ லேக/-உண்டே3/ த்யாக3ராஜ/ வினுத/ ஸீதா/ (ராம)
தவறான/ செயல்கள்/ புரியாமலும் (இல்லாமலும் )/ இருக்கும்/ தியாகராசனால்/ போற்றப் பெற்ற/ சீதா/ ராமா!


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - வினுத - நுத.

மேற்கோள்கள்

விளக்கம்
1 - ராவேமகோ - ராவு+ஏமகோ : 'ஏமகோ' என்ற சொல் தெலுங்கு அகராதியில் காணப்படவில்லை. ஆயினும், இவ்விடத்தில் 'ஏமகோ' என்ற சொல்லுக்கு 'ஏனோ' என்று பொருளாகும். அதற்கீடான (ஏனோ) தெலுங்கு சொல் 'ஏமிடிகோ'. அனேகமாக, 'ஏமகோ', 'ஏமிடிகோ' என்ற சொல்லின் திரிபாக பேச்சு வழக்கலிருக்கலாம்.

Top


Updated on 15 Apr 2009

2 comments:

Govindaswamy said...

திரு கோவிந்தன் அவர்களே
ஏமகோ/ ஏமிகோ என்ற சொல்லைப் பற்றி விரிவாக கருத்துப் பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது. அன்னமாச்சாரியாரின் கிருதிகள் Emoko Emoko ciguruTa மற்றும் ’ ஏமனி வர்ணிஞ்சுனுகோ இந்த புராணமுலெல்ல என்பவையும் உங்களுக்கு எடுத்துக் காட்டப்பட்டன. ஏமொகோ என்பது ஏன்,எதற்காக, எக்காரணத்தால் என்ற பொருள்களில் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. வர்ணிஞ்சுனுகோ என்பதில் இது அசைச் சொல்லாகத் தோன்றுகிறது.
திருத்தப்பட்ட வலையேற்றத்தில் இவற்றைத் தாங்கள் ஒதுக்கி விட்டீர்களே. புதிதாகப் பார்ப்பவர்கள் மற்றவர்களின் கருத்துக்களை அறிய இயலாதே. Blog ல் எல்லோரது கருத்துக்களும் இடம் பெறுவது நலம்.
வணக்கம்
கோவிந்தசாமி

V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,

அன்னமாச்சாரியாரின் கிருதியில் உள்ள 'ஏமெகோ' (எவளுக்கோ) என்ற சொல்லுக்கும், தியாகராஜர், இந்த கிருதியில் பயன்படுத்தும் 'ஏமகோ' (எதற்கோ) என்ற சொல்லுக்கும் ஏதும் தொடர்பு இல்லை.

நம்முடைய கருத்துப்பறிமாறல், கீர்த்தனையின் ஆங்கில மொழிபெயர்ப்பினில் இடம் பெற்றது. எனவே, அதனை இங்கும் கொணரவேண்டுமென நீங்கள் எண்ணினால், அதனை இங்கும் நீங்கள் comment-ஆக எழுதினால் நான் அதனை வெளியடலாம்.

உமது கருத்துக்கள் சிலவற்றுடன் நான் சம்மதிக்காவிடினும், அவற்றினை நான் முழுமையாக வெளியிடுகின்றேன். எனவே, இந்த blog-களை நோக்குவோர் தங்கள் கருத்துக்களையும் அறியமுடியும்.

வணக்கம்
கோவிந்தன்.