Tuesday, April 14, 2009

தியாகராஜ கிருதி - தி3ன மணி வம்ஸ1 - ராகம் ஹரி காம்போ4ஜி - Dina Mani Vamsa - Raga Hari Kambhoji

பல்லவி
தி3ன மணி வம்ஸ1 திலக லாவண்ய
தீ3ன ஸ1ரண்ய

அனுபல்லவி
மனவினி பா3கு33 மதி3னி தலஞ்சுசு
சனுவுனனேலு சாலுகா3 ஜாலு (தி3)

சரணம்
11ர்வ வினுத நனு ஸம்ரக்ஷிஞ்சனு
3ர்வமு ஏல காசுவாரெவரே
2நிர்விகார கு3 நிர்மல கர த்4ரு2
பர்வத த்யாக3ராஜ ஸர்வஸ்வமௌ (தி3)


பொருள் - சுருக்கம்
தியாகராசனின் அனைத்துமாகிய தினமணி குலத்திலகமே! எழிலோனே! எளியோரின் புகலே! சர்வனால் போற்றப் பெற்றோனே! மாற்றம், குணங்களற்றோனே! மாசற்றோனே! கையினில் மலையை ஏந்தியவனே!
  • வேண்டுகோளை நன்கு மனதில் நினைந்து, கனிவுடன் ஆள்வாய்;

  • போதுமே தாமதம்;

  • என்னைப் பேணுதற்கு செருக்கேனோ?

  • காப்பவர் யாரே?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
தி3ன/ மணி/ வம்ஸ1/ திலக/ லாவண்ய/
தின/ மணி/ குல/ திலகமே/ எழிலோனே/

தீ3ன/ ஸ1ரண்ய/
எளியோரின்/ புகலே/


அனுபல்லவி
மனவினி/ பா3கு33/ மதி3னி/ தலஞ்சுசு/
வேண்டுகோளை/ நன்கு/ மனதில்/ நினைந்து/

சனுவுன/-ஏலு/ சாலுகா3/ ஜாலு/ (தி3)
கனிவுடன்/ ஆள்வாய்/ போதுமே/ தாமதம்/


சரணம்
1ர்வ/ வினுத/ நனு/ ஸம்ரக்ஷிஞ்சனு/
சர்வனால்/ போற்றப் பெற்றோனே/ என்னை/ பேணுதற்கு/

3ர்வமு/ ஏல/ காசுவாரு/-எவரே/
செருக்கு/ ஏனோ/ காப்பவர்/ யாரே/

நிர்விகார/ கு3ண/ நிர்மல/ கர/ த்4ரு2த/
மாற்றமற்றோனே/ குணங்கள் (அற்றோனே)/ மாசற்றோனே/ கையினில்/ ஏந்தியவனே/

பர்வத/ த்யாக3ராஜ/ ஸர்வஸ்வமௌ/ (தி3)
மலையை/ தியாகராசனின்/ அனைத்துமாகிய/ தினமணி குல...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
1 - 1ர்வ - சர்வன் - சிவன் : சிவனுடைய பெயர்களை - வியாச முனிவர் இயற்றிய 'ஸ1த ருத்3ரீயம்' என்ற நூலில் காண்க.

விளக்கம்
2 - நிர்விகார கு3 - 'நிர்' எனும் பகுதி (prefix) 'விகார' மற்றும் 'குண' - இரண்டிற்கும் பொதுவாகும் - 'நிர்விகார', 'நிர்குண'. இதனைத் தொடர்ந்து வரும் 'நிர்மல' என்ற சொல்லினால் இது விளங்கும். அப்படி இல்லையாகில், 'குண' என்ற சொல் தனியாக நிற்க இயலாது - அதற்கு பொருள் கூறுவதும் இயலாது.

தினமணி - பகலவன்
மலையை ஏந்திய - கோவர்த்தன மலை

Top


Updated on 15 Apr 2009

No comments: