Monday, April 13, 2009

தியாகராஜ கிருதி - சனி தோடி3 தேவே - ராகம் ஹரி காம்போ4ஜி - Chani Todi Teve - Raga Hari Kaambhoji

பல்லவி
சனி 1தோடி3 தேவே ஓ மனஸா

அனுபல்லவி
2கனிகரமுதோ கனி கரமிடி3 சிர
காலமு ஸுக2மனுப4விம்ப வேக3மே (ச)

சரணம்
பதிதுல ப்3ரோசே 3பட்டாதி4காரினி
4பரமார்த2 மத 5வஸிஷ்டா2னுஸாரினி
த்3யுதி நிர்ஜித ஸ161ம்ப3ராரினி
7து4ரீண த்யாக3ராஜ ஹ்ரு2ச்-சாரினி (ச)


பொருள் - சுருக்கம்
ஓ மனமே!
  • சென்றழைத்துவாடி;

  • கனிவுடன், கண்டு, கரம்பற்றி, பல காலம் சுகமனுபவிக்க, விரைவில் சென்றழைத்துவாடி;

    • வீழ்ந்தோரைக் காக்கும் பட்டமேந்துவோனை,

    • மெய்யறிவு நெறி நிற்கும், வசிட்டரின் வழி நடப்போனை,

    • ஒளியில், நூறு சம்பரன் பகைவனை வென்றோனை,

    • உலக பளு சுமக்கும், தியாகராசனின் இதயத்தில் உலவுவோனை,

  • சென்றழைத்துவாடி.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
சனி/ தோடி3 தேவே/ ஓ மனஸா/
சென்று/ அழைத்துவாடி/ ஓ மனமே/


அனுபல்லவி
கனிகரமுதோ/ கனி/ கரமு/-இடி3/ சிர/
கனிவுடன்/ கண்டு/ கரம்/ பற்றி/ பல/

காலமு/ ஸுக2மு/-அனுப4விம்ப/ வேக3மே/ (ச)
காலம்/ சுகம்/ அனுபவிக்க/ விரைவில்/ சென்று...


சரணம்
பதிதுல/ ப்3ரோசே/ பட்ட/-அதி4காரினி/
வீழ்ந்தோரை/ காக்கும்/ பட்டம்/ ஏந்துவோனை/

பரம-அர்த2/ மத/ வஸிஷ்ட2/-அனுஸாரினி/
மெய்யறிவு/ நெறி நிற்கும்/ வசிட்டரின்/ வழி நடப்போனை/

த்3யுதி/ நிர்ஜித/ ஸ1த/ ஸ1ம்ப3ர/-அரினி/
ஒளியில்/ வென்றோனை/ நூறு/ சம்பரன்/ பகைவனை/

து4ரீண/ த்யாக3ராஜ/ ஹ்ரு2த்/-சாரினி/ (ச)
(உலக) பளு சுமக்கும்/ தியாகராசனின்/ இதயத்தில்/ உலவுவோனை/ சென்று...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
5 - வஸிஷ்ட2 - விஸி1ஷ்ட

Top

மேற்கோள்கள்
5 - வஸிஷ்டா2னுஸாரினி - வசிட்டரின் வழி நடப்போன் - வசிட்டர் இராமனின் ஆசான். வசிட்டர் இயற்றிய யோக வாசிஷ்டம் எனும் நூலின் சுருக்கம் காணவும்

6 - 1ம்ப3ராரி - சம்பரன் என்ற அரக்கனைக் கொன்றது கண்ணனின் மகன் பிரத்யும்நன். அவன் சிவனால் எரிக்கப்பட்ட மன்மதனின் மறுபிறவியாகும். எனவே இங்கு இச்சொல்லுக்கு 'காமன்' என்று பொருள் கொள்ளப்பட்டது.

Top

விளக்கம்
1 - தோடி3 தேவே - அழைத்து வாடி - மனத்தினைப் பெண்பாலில் விளிக்கின்றார் .

2 - கனிகரமுதோ கனி கரமிடி3 - கனவுடன், கண்டு, கரம் பற்றி, - சில புத்தகங்களில், இறைவன், தியாகராஜரின் கரம் பற்றுவதாக பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இப்பாடல், மனத்திற்கு வேண்டுகோளாகையால், இச்சொற்கள் மனத்தினைக் குறிக்கும்.

3 - பட்டாதி4காரினி - பொதுவாக, இச்சொல் 'பட்டமணியும் அரசனை'க் குறிக்கும். ஆனால் இங்கு 'வீழ்ந்தோரைக் காக்கும் பட்டம் (விருது) வகிக்கும்' இறைவனைக் குறிக்கும்.

Top

4 - பரமார்த2 மத - இப்பாடலின் விளக்கம் காணவும். இந்த விளக்கத்தின்படி, இச்சொல்லுக்கு 'சரணாகதி' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் அடுத்து வரும் 'வஸிஷ்ட அனுசாரினி' - 'வசிட்டரின் வழி நடப்பவன்' சொற்களினால், 'பரமார்த்த மதம்' என்பது வசிட்டரால் இயற்றப் பெற்ற 'யோக வாசிஷ்டம்' என்ற நூலில் உரைத்த கோட்பாடுகளைக் குறிக்கவேண்டும். அந்நூலின்படி, வசிட்டர், 'அத்துவைத' வழி முறையையே விவரிக்கின்றார். அதனால் தானே என்னவோ, 'வஸிஷ்ட' என்ற சொல்லினை 'விஸிஷ்ட' என்று மாற்றி 'சரணாகதி' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது.

'பரமார்த்த மதம்' என்பது 'மெய்யறிவு சேர்க்கும் நெறியினை'க் குறிக்கும். 'மெய்யறிவு' என்னவென்பது குறித்து அத்துவைத, துவைத, மற்றும் விஸிஷ்டாத்துவைதிகள் ஒன்றுக்கொன்று முரண்பாடான கருத்துகளைக் கொண்டுள்ளனர். 'வஸிஷ்ட' என்ற சொல் ஒரு புத்தகம் தவிர மற்ற எல்லா புத்தகங்களிலும் காணப்படுவதனால், 'வஸிஷ்ட' சரியான சொல்லாகயிருக்கும் என்றும், 'விஸிஷ்ட' என்ற சொல் திணிக்கப்ட்டதாகவும் கருத ஏதுக்களிருக்கின்றன.

7 - து4ரீண - பளு சுமக்கும் - பொதுவாக இச்சொல் இறைவனைக் குறிக்கும். ஆனால் ஒரு புத்தகத்தினில் இதனை தியாகராஜருக்குக் கூறப்பட்டுள்ளது - 'அடிமை தியாகராஜன்' என.

மெய்யறிவு நெறி நிற்கும் - வசிட்டரைக் குறிக்கும்
உலக பளு சுமக்கும் - இறைவனைக் குறிக்கும்

Top


Updated on 14 Apr 2009

2 comments:

Govindaswamy said...

திரு கோவிந்தன் அவர்களே
பல்லவியிலுள்ள த்3யுதி என்பதற்கு ஓளியில் என்று தவறாகக் கொடுக்கப்பட்டுள்ளது.இதனை ஒளியில் என்று திருத்தவும்.
வணக்கம்
கோவிந்தசாமி

V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,

தவறினைத் திருத்திவிட்டேன்.

நன்றி,
வணக்கம்
கோவிந்தன்