Saturday, April 11, 2009

தியாகராஜ கிருதி - எந்து3கு நிர்த3ய - ராகம் ஹரி காம்போ4ஜி - Enduku Nirdaya - Raga Hari Kaambhoji

பல்லவி
எந்து3கு நிர்த3ய எவருன்னாருரா

அனுபல்லவி
இந்து3 நிபா4னன இன குல சந்த3ன (எ)

சரணம்
சரணம் 1
பரம பாவன 1பரிமளாபக4 (எ)


சரணம் 2
நே பர தே3ஸி1 பா3பவே கா3ஸி (எ)


சரணம் 3
2உட3த ப4க்தி கனி

உப்33தில்லக3 லேதா3 (எ)


சரணம் 4
1த்ருல மித்ருல ஸமமுக3 ஜூசே நீகு-(எ)


சரணம் 5
4ரலோ நீவை த்யாக3ராஜுபை (எ)


பொருள் - சுருக்கம்
மதி நிகர் முகத்தோனே! பரிதி குல உத்தமனே! முற்றிலும் தூயோனே! மணக்கும் அங்கத்தோனே!
  • ஏன் கருணையின்மை? எவருளரய்யா?

  • நான் அனாதை; துயர் தீர்ப்பாயய்யா;

  • அணிலின் பக்தி கண்டு பொங்கவில்லையா?

  • பகைவரையும் நண்பரையும் சமமாக நோக்குமுனக்கு ஏன் கருணையின்மை?

  • புவியில் (யாவும்) நீயாயிருக்க, தியாகராசனின் மீது ஏன் கருணையின்மை?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
எந்து3கு/ நிர்த3ய/ எவரு/-உன்னாருரா/
ஏன்/ கருணையின்மை/ எவர்/ உளரய்யா/


அனுபல்லவி
இந்து3/ நிப4/-ஆனன/ இன/ குல/ சந்த3ன/ (எ)
மதி/ நிகர்/ முகத்தோனே/ பரிதி/ குல/ உத்தமனே/


சரணம்
சரணம் 1
பரம/ பாவன/ பரிமள/-அபக4ன/ (எ)
முற்றிலும்/ தூயோனே/ மணக்கும்/ அங்கத்தோனே/


சரணம் 2
நே/ பர தே3ஸி1/ பா3பவே/ கா3ஸி/ (எ)
நான்/ பரதேசி (அனாதை)/ தீர்ப்பாயய்யா/ துயரினை/


சரணம் 3
உட3த/ ப4க்தி/ கனி/

உப்33தில்லக3 லேதா3/ (எ)
அணிலின்/ பக்தி/ கண்டு/ பொங்கவில்லையா/


சரணம் 4
1த்ருல/ மித்ருல/ ஸமமுக3/ ஜூசே/ நீகு-/(எ)
பகைவரையும்/ நண்பரையும்/ சமமாக/ நோக்கும்/ உனக்கு/ ஏன்...


சரணம் 5
4ரலோ/ நீவை/ த்யாக3ராஜுபை/ (எ)
புவியில்/ (யாவும்) நீயாயிருக்க/ தியாகராசனின் மீது/ ஏன்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
1 - பரிமளாபக4 - மணக்கும் அங்கத்தோன் - இது குறித்து, 'Practice of Brahmacharya' (பிரமசரியத்தினை அனுஷ்டித்தல்) எனும் ஸ்வாமி சிவானந்தரின் புத்தகம் நோக்கவும். அதில் அவர் கூறுவது -

"எவனொருவன், உண்மையிலியே 'ஊர்த்4வ ரேதஸ்'-ஆக (வீரீயம் கட்டுதல்) உள்ளானோ, அவனுடைய உடல் தாமரை மலரின் இனிய மணம் உடைத்திருக்கும். மாறாக, எவன் பிரமசரியத்தை கடைப்பிடிக்காது உள்ளானோ - அதாவது எவனுடலில் வீரியம் உண்டாகின்றதோ - அவனுடல் ஆட்டுக் கடாவின் மணம் உடைத்திருக்கும்.

2 - உட3த ப4க்தி - அணிலின் பக்தி - கடல் மீது வாராவதி அமைக்க உதவியதற்கு - இது குறித்து, வால்மீகி ராமாயணத்தில் ஏதும் குறிப்பு காணப்படவில்லை. ஆனால், தமிழ் நாட்டில், அப்படியொரு வழக்குண்டு. இது குறித்து திருமழிசை ஆழ்வார் கூறியுள்ளதனைக் காணவும் - அணிலின் பக்தி

Top

விளக்கம்



Updated on 12 Apr 2009

1 comment:

Unknown said...

The bhakthi displayed by the Squirrel is found in Thirumalai composed by Thondaradipodiyazhwar and not Thirumazhisai Azhwar.