Saturday, April 11, 2009

தியாகராஜ கிருதி - எந்த ரானி - ராகம் ஹரி காம்போ4ஜி - Enta Raani - Raga Hari Kaambhoji

பல்லவி
எந்த ரானி தனகெந்த போனி நீ
1செந்த 2விடு3வ ஜால ஸ்ரீ ராம

அனுபல்லவி
3அந்தகாரி நீ செந்த ஜேரி
ஹனுமந்துடை3
கொலுவ லேதா3 (எ)

சரணம்
சரணம் 1
4ஸே1ஷுடு3 ஸி1வுனிகி பூ4ஷுடு3 லக்ஷ்மண
வேஷியை கொலுவ லேதா3 (எ)


சரணம் 2
ஸி1ஷ்டுடு3 மௌனி வரிஷ்டு2டு3 கொ3ப்ப
வஸிஷ்டு2டு3 5ஹிதுடு3கா3 லேதா3 (எ)


சரணம் 3
நர வர நீகை 6ஸுர க3ணமுலு
வானருலை
7கொலுவக3 லேதா3 (எ)


சரணம் 4
ஆக3மோக்தமகு3 நீ கு3ணமுலு ஸ்ரீ
த்யாக3ராஜு பாட33 லேதா3 (எ)


பொருள் - சுருக்கம்
ஸ்ரீ ராமா! மனிதரில் உத்தமனே!
  • என்ன வரினும் தனக்கென்ன போயினும் உனதண்மை விட இயலேன்;

    • நமன் பகைவன் உனதண்மையடைந்து அனுமனாகிச் சேவிக்கவில்லையா?

    • சேடன், சிவனுக்கு அணிகலன், இலக்குவனின் வேடமணிந்து சேவிக்கவில்லையா?

    • அறிஞன், முனிவர்களில் சிறந்தோன், உயர் வசிட்டன் நல்லதுரைப்போனாக இல்லையா?

    • உனக்காக வானோர்கள் வானரராகிச் சேவிக்கவில்லையா?

    • ஆகமங்களுரைக்கும் உனது குணங்களை தியாகராசன் பாடவில்லையா?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
எந்த/ ரானி/ தனகு/-எந்த/ போனி/ நீ/
என்ன/ வரினும்/ தனக்கு/ என்ன/ போயினும்/ உனது/

செந்த/ விடு3வ/ ஜால/ ஸ்ரீ ராம/
அண்மை/ விட/ இயலேன்/ ஸ்ரீ ராமா/


அனுபல்லவி
அந்தக/-அரி/ நீ/ செந்த/ ஜேரி/
நமன்/ பகைவன்/ உனது/ அண்மை/ அடைந்து

ஹனுமந்துடை3/ கொலுவ லேதா3/ (எ)
அனுமனாகி/ சேவிக்கவில்லையா/


சரணம்
சரணம் 1
ஸே1ஷுடு3/ ஸி1வுனிகி/ பூ4ஷுடு3/ லக்ஷ்மண/
சேடன்/ சிவனுக்கு/ அணிகலன்/ இலக்குவனின்/

வேஷியை/ கொலுவ லேதா3/ (எ)
வேடமணிந்து/ சேவிக்கவில்லையா/


சரணம் 2
ஸி1ஷ்டுடு3/ மௌனி/ வரிஷ்டு2டு3/ கொ3ப்ப/
அறிஞன்/ முனிவர்களில்/ சிறந்தோன்/ உயர்/

வஸிஷ்டு2டு3/ ஹிதுடு3கா3/ லேதா3/ (எ)
வசிட்டன்/ நல்லதுரைப்போனாக/ இல்லையா/


சரணம் 3
நர/ வர/ நீகை/ ஸுர க3ணமுலு/
மனிதரில்/ உத்தமனே/ உனக்காக/ வானோர்கள்/

வானருலை/ கொலுவக3 லேதா3/ (எ)
வானரராகி/ சேவிக்கவில்லையா/


சரணம் 4
ஆக3ம/-உக்தமகு3/ நீ/ கு3ணமுலு/
ஆகமங்கள்/ உரைக்கும்/ உனது/ குணங்களை/

ஸ்ரீ த்யாக3ராஜு/ பாட33 லேதா3/ (எ)
ஸ்ரீ தியாகராசன்/ பாடவில்லையா/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - செந்த - சிந்த : சில புத்தகங்களில் 'சிந்த' என்று ஏற்று, 'நினைவு' (உனது நினைவினை விடேன்) என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. அனுபல்லவியிலும், சரணங்கள் 1 - 3-லும், ராமனின் அண்மையிலிருந்து சேவை செய்வது பற்றியே கூறப்பட்டுள்ளது. எனவே, 'செந்த' தான் பொருத்தமாகும். மேலும், எதுகை மோனை (ப்ராஸ-அனுப்ராஸ) முறையிலும் 'செந்த' பொருந்தும்.

2 - விடு3வ ஜால ஸ்ரீ ராம - விடு3வ ஜால

7 - கொலுவக3 - கொலுவ

Top

மேற்கோள்கள்
3 - அந்தகாரி ஹனுமந்துடை3 - 'ஆட3 மோடி33லதே3' என்ற கிருதியில், அனுமனை, 'சிவனின் அம்சம்' (ஸ1ங்கராம்ஸு1டை3) என்று விவரிக்கின்றார். இங்கு, சிவனே அனுமனாக வந்ததாகக் கூறுகிறார். அனுமனுக்கு, அந்த பெயர் ஏன் வந்தது என்றும், அவன் எங்ஙனம் 'சிவனின் அம்சம்' என்று கூறப்படுகின்றான் என்பதனை அனுமனின் கதையினில் காணவும்.

6 - ஸுர க3ணமுலு வானருலை - வானோர்கள் வானரர்களாகி - வால்மீகி ராமாயணம், பால காண்டம், அத்தியாயம் 17 காணவும்.

Top

விளக்கம்
4 - ஸே1ஷுடு3 ஸி1வுனிகி பூ4ஷுடு3 - சேடன், விஷ்ணுவுக்கு படுக்கையாகவும். சிவனுக்கு அணிகலனாகவும், உமைக்கு விரல் மோதிரமாகவும், விநாயகருக்கு கேயூரமாகவும் கூறப்படும்.

5 - ஹிதுடு3 - நல்லதுரைப்போன் - புரோகிதர் என்றும் கொள்ளலாம்

நமன் பகைவன் - சிவன்

Top


Updated on 11 Apr 2009

No comments: