Wednesday, March 18, 2009

தியாகராஜ கிருதி - ஸொக3ஸுகா3 ம்ரு2தங்க3 - ராகம் ஸ்ரீ ரஞ்ஜனி - Sogasugaa Mrdanga - Raga Sri Ranjani

பல்லவி

ஸொக3ஸுகா3 ம்ரு23ங்க3 தாளமு ஜத கூர்சி நினு
ஸொக்க ஜேயு தீ4ருடெ3வ்வடோ3

அனுபல்லவி

1நிக3ம ஸி1ரோர்த2மு கல்கி3
நிஜ வாக்குலதோ ஸ்வர ஸு1த்34முதோ (ஸொ)

சரணம்

2யதி 3விஸ்1ரம ஸத்34க்தி
விரதி த்3ராக்ஷா ரஸ 4நவ-ரஸ
யுத க்ரு2திசே 54ஜியிஞ்சு
யுக்தி த்யாக3ராஜுனி தரமா 6ஸ்ரீ ராம (ஸொ)


பொருள் - சுருக்கம்

ஸ்ரீ ராமா
  • சொகுசாக, மிருதங்க தாளத்தினைச் சோடு கட்டி, உன்னை சொக்கவைக்கும் தீரனெவனோ!

  • மறைமுடியின் பொருளுடைய, உண்மையான சொற்களுடனும், சுரத் தூய்மையுடனும், சொகுசாக, மிருதங்க தாளத்தினைச் சோடு கட்டி, உன்னை சொக்கவைக்கும் தீரனெவனோ!

  • யதி, விஸ்ரமம், தூய பக்தி, (உலகப்) பற்றின்மை, திராட்சைச் சாறு (நிகர்) நவரசம் கூடிய பாடல்களுடன் வழிபடும் முறைமை தியாகராசனின் தரமா?



பதம் பிரித்தல் - பொருள்

பல்லவி

ஸொக3ஸுகா3/ ம்ரு23ங்க3/ தாளமு/ ஜத/ கூர்சி/ நினு/
சொகுசாக/ மிருதங்க/ தாளத்தினை/ சோடு/ கட்டி/ உன்னை/

ஸொக்க/ ஜேயு/ தீ4ருடு3/-எவ்வடோ3/
சொக்க/ வைக்கும்/ தீரன்/ எவனோ/


அனுபல்லவி

நிக3ம/ ஸி1ரோ/-அர்த2மு/ கல்கி3ன/
மறை/ முடியின்/ பொருள்/ உடைய/

நிஜ/ வாக்குலதோ/ ஸ்வர/ ஸு1த்34முதோ/ (ஸொ)
உண்மையான/ சொற்களுடனும்/ சுர/ தூய்மையுடனும்/ சொகுசாக...


சரணம்

யதி/ விஸ்1ரம/ ஸத்3-ப4க்தி/
யதி/ விஸ்ரமம்/ தூய பக்தி/

விரதி/ த்3ராக்ஷா/ ரஸ/ நவ/-ரஸ/
(உலகப்) பற்றின்மை/ திராட்சை/ சாறு/ (நிகர்) நவ/ ரசம்/

யுத/ க்ரு2திசே/ ப4ஜியிஞ்சு/
கூடிய/ பாடல்களுடன்/ வழிபடும்/

யுக்தி/ த்யாக3ராஜுனி/ தரமா/ ஸ்ரீ ராம/ (ஸொ)
முறைமை/ தியாகராசனின்/ தரமா/ ஸ்ரீ ராமா/


குறிப்புக்கள் - (Notes)

வேறுபாடுகள் - (Pathanthara)

5 - 4ஜியிஞ்சு - ப4ஜியிஞ்சே

6 - ஸ்ரீ ராம - ராம

Top

மேற்கோள்கள்

1 - நிக3ம ஸி1ரோ - மறை முடி - உபநிடதங்கள் - மறைமுடி

2 - யதி - இடைவெளி : யதி-1 : யதி-2 : திருவாளர் AS பஞ்சாபகேசய்யரின் 'கர்நாடக சங்கீத சாஸ்த்ரம்' நோக்கவும்

3 - விஸ்1ரம - அமைதி : விஸ்ரம

யதி, விஸ்ரமம் - இசைக்கலையின் சிறப்புச் சொற்கள் - இவற்றிற்க்கீடான தமிழ்ச் சொற்களென்ன?

4 - நவ-ரஸ - நவரசம் - அற்புதம், சினம், கருணை, அருவருப்பு, அமைதி, சிங்காரம், அச்சம், பெருநகை, வீரம்

Top

விளக்கம்

இக்கீர்த்தனையில் தியாகராஜர் இசைக்கலையின் சிறப்புச் சொற்களைப் (Technical Terms) பயன்படுத்தியுள்ளார். எனக்கு இசையறிவு இல்லையாகையால் கூடியவரைக்கும் முன்கூறப்பட்ட ஆதாரங்களை வைத்து மொழிபெயர்த்துள்ளேன். தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்.

Top


Updated on 18 Mar 2009

2 comments:

Govindaswamy said...

திரு கோவிந்தன் அவர்களே
அனுபல்லவியில் அர்த2மு/ கல்கி3ன/ என்பதற்கு பொருள் உடைத்த என்பதற்குப் பதிலாக பொருளுடைய என்பது எளிதில் விளங்கும்.
வணக்கம்
கோவிந்தசாமி
 

V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,

நீங்கள் கூறியபடியே திருத்திவிட்டேன்

வணக்கம்
கோவிந்தன்