Sunday, March 15, 2009

தியாகராஜ கிருதி - ஸரியெவ்வரே - ராகம் ஸ்ரீ ரஞ்ஜனி - Sariyevvare - Raga Sri Ranjani

பல்லவி
ஸரியெவ்வரே ஸ்ரீ ஜானகி நீ

அனுபல்லவி
1பரமாத்முனிகை க3டி3தேரி ஸதா3
ஸிருலிச்சுடகு சேரி கொலிசின நீ (ஸரி)

சரணம்
2வனமந்து34யங்கரமைன
தாவுன நில்துனனி
மனஸு தெலிஸி
கனகாங்கி3யந்த3ந்து3ன ராஜ ஸுக2ம்பு3னு
கல்க3 ஜேஸிதிவே த்யாக3ராஜ நுதே (ஸரி)


பொருள் - சுருக்கம்
தாயே ஜானகி! பொன்னங்கத்தினளே! தியாகராசனால் போற்றப் பெற்றவளே!
    நிகர் யாரே, உனக்கு?
  • பரம்பொருளுக்கென தகுதிபெற்று, எவ்வமயமும் சுகமளிக்க, உடனிருந்து சேவை செய்தனை;

  • பயங்கரமான வனத்தினில் நிற்பேனென, (அவன்) உளமறிந்து, ஆங்காங்கு அரச சுகங்களினை உண்டாக்கினையே!

  • நிகர் யாரே, உனக்கு?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸரி/-எவ்வரே/ ஸ்ரீ ஜானகி/ நீ/
நிகர்/ யாரே/ ஸ்ரீ ஜானகி/ உனக்கு/


அனுபல்லவி
பரமாத்முனிகை/ க3டி3தேரி/ ஸதா3/
பரம்பொருளுக்கென/ தகுதிபெற்று/ எவ்வமயமும்/

ஸிருலு/-இச்சுடகு/ சேரி/ கொலிசின/ நீ/ (ஸரி)
சுகம்/ அளிக்க/ உடனிருந்து/ சேவை செய்த/ உனக்கு/ நிகர்...


சரணம்
வனமந்து3/ ப4யங்கரமைன/
வனத்தினில்/ அச்சமூட்டும்/

தாவுன/ நில்துனு/-அனி/ மனஸு/ தெலிஸி/
இடத்தினில்/ நிற்பேன்/ என/ (அவன்) உளம்/ அறிந்து/

கனக/-அங்கி3/-அந்த3ந்து3ன/ ராஜ/ ஸுக2ம்பு3னு/
பொன்/ அங்கத்தினளே/ ஆங்காங்கு/ அரச/ சுகங்களினை/

கல்க3 ஜேஸிதிவே/ த்யாக3ராஜ/ நுதே/ (ஸரி)
உண்டாக்கினையே/ தியாகராசனால்/ போற்றப் பெற்றவளே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
2 - வனமந்து3 நில்துனனி - ராமன் சீதையை வனத்திற்கு அழைத்துச் செல்ல மறுக்கவே, சீதை, தனக்குத் திருமணமாகுமுன்பே, ஒரு பிக்ஷிணி, தான் வனத்திற்குச் செல்லப்போவதைப் பற்றி முன் கூட்டியே மொழிந்ததைக் கூறினாள். அப்படியும், ராமன் இணங்காகததனால், அவனை (ராமனை) 'நீ ஆண் மகனா?' என்று கூசாமல் கேட்டாள். அதன் பின்னரே, ராமன் சீதையை உடன் அழைத்துச் செல்ல சம்மதிக்கின்றான். வால்மீகி ராமாயணம், அயோத்தியா காண்டம், அத்தியாயங்கள் 28 - 30 நோக்கவும்.

Top

விளக்கம்
1 - பரமாத்முனிகை க3டி3தேரி - பரம்பொருளுக்கென தகுதிபெற்று - இராமனுக்கு இல்லாளாக இருக்க - பரம்பொருளை கணவனாக அடைதல் அத்தனை எளிதா? மகாபாரதத்தில், ருக்மிணி கண்ணனுக்கு அந்தணன் மூலமாக அனுப்பிய ஓலையில் கூறியது -

"நான், பரம புருஷனை, தக்க அளவுக்கு, நல்ல காரியங்கள், வேள்விகள், கொடை, நோன்புகள், விரதங்களினால் வழிபட்டதும், மற்ற தெய்வங்களையும், அந்தணர்களையும், ஆசான்களையும் தொழுததும் உண்மையானால், கண்ணன் எனது கைப்பற்றட்டும் - மற்றெவருமல்ல."

(ஒரு பிறவியில் மட்டுமே யாரும் கண்ணனை அடைந்துவிடமுடியாது என ருக்மிணிக்குத் தெரியும். அதனால், பணிவுடன் தான் முற்பிறவிகளில் செய்த தவங்களைக் குறித்து குறிப்பிடுகிறாள் - என உரையாசிரியர் விளக்குகின்றார்.) ஸ்வாமி பக்தி வேதாந்தம் அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம். பாகவத புராணம், 10-வது புத்தகம், அத்தியாயம் 52, செய்யுள் 40

Top


Updated on 15 Mar 2009

2 comments:

Govindaswamy said...

திரு கோவிந்தன் அவர்களே
சரணத்தில் ’அரச சுகங்களினை உண்டாக்கினையே’ என்பதற்குப் பதிலாக ‘அரச சுகங்களினை அடையச் செய்தனையே” என்பது பொருந்துமா?
வணக்கம்
கோவிந்தசாமி

V Govindan said...

தி்ரு கோவிந்தசாமி அவர்களுக்கு,

கிருதி சொற்கள் 'கல்க3 ஜேஸிதிவே' என்பதற்கு 'உண்டாக்கினை' என்பதுதான் சரியான மொழிபெயர்ப்பாகும். இல்லாததொன்றினை உண்டாக்குவது வேறு, இருப்பதனை அடையச்செய்வது வேறு என்று நான் கருதுகின்றேன்.

வணக்கம்
கோவிந்தன்