Saturday, February 14, 2009

தியாகராஜ கிருதி - தே3வ ஸ்ரீ தபஸ்தீர்த2 - ராகம் மத்4யமாவதி - Deva Sri Tapasteertha - Raga Madhyamavati

பல்லவி
தே3வ ஸ்ரீ 1தபஸ்தீர்த2 புர நிவாஸ
தே3ஹி ப4க்திமது4னா

அனுபல்லவி
பாவன ப்ரவ்ரு2த்34 ஸ்ரீமதி
ஹ்ரு2த்34வன ஸகல ஜக33வன ஸ்ரீ மஹா (தே3வ)

சரணம்
சரணம் 1
2பாஸ1 ஹஸ்த க3ணேஸ1 ஹரண
3பலாஸ1னாரி நுதேஸ1 வரத3
குஸே11யாரி த4ராஸ1ரேப4
ம்ரு2கே31 4ஸப்த ரு2ஷீஸ1 தே3வ (தே3வ)


சரணம் 2
5நீல க3 ஸுர ஜால நுத நத
பால கி3ரீஸ1 6விஸா1ல பா2
க்ரு2பாலவால ஸு-ஸீ1ல கௌ3ரீ
லோல ஸி1வ மாம் பாலயாத்3பு4த (தே3வ)


சரணம் 3
நாக3 பூஜித 7நாக33னுஜ
ஹராக3 மர்த38 வாக3தி4
வினுதாக3ணித கு3ண ராக3 மத3
தூ3ராக4 ஹர ஸ்ரீ த்யாக3ராஜ (தே3வ)


பொருள் - சுருக்கம்
  • தேவா! திருத்தவத்துறை உறைவோனே!

  • புனித, வல்லமை மிக்க, திருமதி இதயத்தில் உறைவோனே! பல்லுலகையும் காப்போனே! மகாதேவா!

  • சுருக்குக் கயிற்றுப் படை ஈசனை வென்றோனே! ஊனுண்போரின் பகைவனால் போற்றப் பெற்ற ஈசனே! வரதா! கமலப் பகையை யணிவோனே! அரக்கரெனும் களிற்றினுக்குச் சிங்கமே! ஏழிருடியர் இறைவா! தேவதேவா!

  • நீலகண்டனே! வானோரால் போற்றப் பெற்றோனே! பணிவோரைக் காக்கும் மலையீசா! அகன்ற நெற்றியோனே! கருணைக் கடலே! நற்குணத்தோனே! கௌரி மணாளனாகிய சிவனே! அற்புதத் தேவா!

  • அரவு தொழும், கரியரக்கனை அழித்தோனே! மலையை (அரவினை) நசித்தோன் மற்றும் நாவரசனால் போற்றப் பெற்றோனே! எண்ணிறந்த குணங்களோனே! பற்று மற்றும் செருக்கினை விலக்கியோனே! வினையறுப்போனே! இத்தியாகராசனின் தேவா!

    • அருள்வாய், பக்தியினை இவ்வமயமே;

    • என்னைக் காப்பாய்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
தே3வ/ ஸ்ரீ தபஸ்தீர்த2 புர/ நிவாஸ/
தேவா/ திருத்தவத்துறை/ உறைவோனே/

தே3ஹி/ ப4க்திம்/-அது4னா/
அருள்வாய்/ பக்தியினை/ இவ்வமயமே/


அனுபல்லவி
பாவன/ ப்ரவ்ரு2த்34/ ஸ்ரீமதி/
புனித/ வல்லமை மிக்க/ திருமதி/

ஹ்ரு2த்3/-ப4வன/ ஸகல ஜக3த்3/-அவன/ ஸ்ரீ மஹா/ (தே3வ)
இதயத்தில்/ உறைவோனே/ பல்லுலகையும்/ காப்போனே/ ஸ்ரீமகா/ தேவா!


சரணம்
சரணம் 1
பாஸ1 ஹஸ்த/ க3ண/-ஈஸ1/ ஹரண/
சுருக்குக் கயிற்றுப்/ படை/ ஈசனை/ வென்றோனே/

பல/-அஸ1ன/-அரி/ நுத/-ஈஸ1/ வரத3/
ஊன்/ உண்போரின்/ பகைவனால்/ போற்றப் பெற்ற/ ஈசனே/ வரதா/

குஸே11ய/-அரி/ த4ர/-ஆஸ1ர/-இப4/
கமல/ பகையை/ அணிவோனே/ அரக்கரெனும்/ களிற்றினுக்கு/

ம்ரு23-ஈஸ1/ ஸப்த/ ரு2ஷி/-ஈஸ1/ தே3வ/ (தே3வ)
சிங்கமே/ ஏழு/ இருடியர்/ இறைவா/ தேவ/ தேவா!


சரணம் 2
நீல/ க3ள/ ஸுர ஜால/ நுத/ நத/
நீல/ கண்டனே/ வானோரால்/ போற்றப் பெற்றோனே/ பணிவோரை/

பால/ கி3ரி/-ஈஸ1/ விஸா1ல/ பா2ல/
காக்கும்/ மலை/ ஈசா/ அகன்ற/ நெற்றியோனே/

க்ரு2பா/-ஆலவால/ ஸு-ஸீ1ல/ கௌ3ரீ/
கருணை/ கடலே/ நற்குணத்தோனே/ கௌரி/

லோல/ ஸி1வ/ மாம்/ பாலய/-அத்3பு4த/ (தே3வ)
மணாளனாகிய/ சிவனே/ என்னை/ காப்பாய்/ அற்புத/ தேவா!


சரணம் 3
நாக3/ பூஜித/ நாக3/ த3னுஜ/
அரவு/ தொழும்/ கரி/ அரக்கனை/

ஹர/-அக3/ மர்த3ன/ வாக்3/-அதி4ப/
அழித்தோனே/ மலையை (அரவினை)/ நசித்தோன் (மற்றும்)/ நா/ அரசனால்/

வினுத/-அக3ணித/ கு3ண/ ராக3/ மத3/
போற்றப் பெற்றோனே/ எண்ணிறந்த/ குணங்களோனே/ பற்று (மற்றும்)/ செருக்கினை/

தூ3ர/-அக4/ ஹர/ ஸ்ரீ த்யாக3ராஜ/ (தே3வ)
விலக்கியோனே/ வினை/ யறுப்போனே/ ஸ்ரீ தியாகராசனின்/ தேவா


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
1 - தபஸ்தீர்த2 புர - திருத்தவத்துறை - இன்றைய லால்குடி.

2 - பாஸ1 ஹஸ்த க3ணேஸ1 ஹரண - சுருக்குக் கயிற்றுப் படை ஈசனை வென்றோனே - சுருக்குக் கயிற்றுப் படை - எம தூதர்கள் - அவர்தமீசன் - நமன் - இது மார்க்கண்டேயனைக் காப்பாற்ற சிவன் நமனை காலால் உதைத்த சம்பவத்தினைக் குறிக்கும். மார்க்கண்டேயன்.

4 - ஸப்த ரு2ஷீஸ1 - ஏழிருடியர் இறைவன் - திருத்தவத்துறை அப்பனின் பெயர் - ஏழு ரிஷிகள் - அத்ரி, ஆங்கீ3ரஸ, கௌ3தம, ஜமத3க்3னி, ப4ரத்3வாஜ, வஸி1ஷ்ட, விஸ்1வாமித்ர - (அல்லது) - அகத்தியர், ஆங்கீ3ரஸ, கௌ3தம, காஸ்1யப, புலஸ்த்ய, மார்க்கண்டே3ய, வஸி1ஷ்ட ஆகியோர் (இன்னும் பல வேறுபாடுகளும் உண்டு)

Top

7 - நாக33னுஜ ஹர - கரியரக்கன் - சிவனால் கொல்லப்பட்ட கரி முக அரக்கன்.

8 - அக3 மர்த3 - மலையை நசித்தோன் - இந்திரன் - வால்மீகி ராமாயணம், சுந்தர காண்டத்தில் (அத்தியாயம் 1) - மைனாக மலை தனது கதையினை அனுமனுக்கு வருணிப்பதனை நோக்கவும்

8 - அக3 மர்த3 - அரவினை நசித்தோன் - கண்ணன் - யமுனை நதியில் காளியன் என்ற பாம்பின் தலையின் மீது கண்ணன் நர்த்தனம் செய்ததனைக் குறிக்கும். இந்த தலத்தினில் விஷ்ணு சிவனை வழிபட்டு ஆழி (சக்கராயுதம்) பெற்றதாக தல புராணம் கூறும். எனவே இதுவும் இவ்விடத்தினில் பொருந்தும்

Top

விளக்கம்
2 - பாஸ1 ஹஸ்த க3ணேஸ1 ஹரண - கணபதியும் தனது கையினில் பாசம் வைத்திருக்கின்றார். ஆனால் அடுத்துவரும் 'ஹரண' (வென்ற அல்லது அழித்த) என்ற சொல் கணபதிக்குப் பொருந்தாது.

3 - பலாஸ1 - 'பல' என்ற சொல்லுக்கு 'ஊன்' என்றும் 'இறைச்சி'யென்றும் பொருள். இவ்விடத்தில் ஊனுண்ணும் அரக்கரைக் குறிக்கும் - அரக்கரின் பகைவன் - இந்திரன்

5 - நீல க3 - நீல கண்டன் - ஆலாகால விடமுண்டு அதை தொண்டையிலேயே இருத்திக்கொண்டதனால் சிவனுக்கு அப்பெயர்

Top

6 - விஸா1ல பா2 - சிவன் முக்கண்ணன் ஆகையால் அகன்ற நெற்றியுடையோன்

திருமதி - திருத்தவத்துறை அம்மையின் பெயர்

கமலப் பகை - மதி

மலையீசன் - சிவன்

அரவு தொழும் - அரவு - சேடன்

நாவரசன் - பிரமன்

Top


Updated on 15 Feb 2009

No comments: