Friday, February 13, 2009

தியாகராஜ கிருதி - எவரிச்சிரிரா - ராகம் மத்4யமாவதி - Evaricchiriraa - Raga Madhyamavati

பல்லவி
எவரிச்சிரிரா ஸ11சாபமுலு
நீகின குலாப்3தி4 சந்த்3

அனுபல்லவி
அவதரிஞ்சு வேளனுண்டெ3னோ லேக
அவனிகேகி3 ஆர்ஜிஞ்சிதிவோ ஸ்ரீ ராம நீ(கெவ)

சரணம்
2ஒகடேஸி பதி3 நூரை வெய்யை
3செகபிகலாடி31த்ருலனணசெனட
விகலுனி காகினி ப்3ரோவ 4த்ரி-மூர்துலு
வெனுக 5தீஸிரட
ஸகல நதீ3 பதிகை 6த்3ருமகுல்யுல
ஸம்ஹரிஞ்செனட
7ப்ரகட கீர்தி கல்கி3 கோத3ண்ட3
பாணி ஸ்ரீ 8த்யாக3ராஜ வினுத நீ(கெவ)


பொருள் - சுருக்கம்
பரிதி குலக்கடலின் மதியே! ஓ இராமா! உலகறிந்த புகழுடைத்த கோதண்டத்தினை ஏந்துவோனே! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
  • உனக்கு எவரளித்தனரய்யா, வில்லம்புகள்?

  • அவதரித்த போழ்தே யிருந்தனவோ யன்றி அவனிக்கு வந்தபின் தேட்டினையோ ?

    • ஒன்றெய்ய, பத்து, நூறாகி, ஆயிரமாகி, திகைக்க வைத்து, எதிரிகளை அடக்கினவாம்;

    • ஒற்றைக் கண், காகத்தினைக் காக்க மும்மூர்த்திகளும் பின்வாங்கினராம்;

    • அனைத்து நதிகளின் தலைவனுக்காக துருமகுலத்தினரை யழித்தனவாம்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
எவரு/-இச்சிரிரா/ ஸ1ர/ சாபமுலு/
எவர/ ளித்தனரய்யா/ அம்பு (மற்றும்)/ விற்கள்/

நீகு/-இன/ குல/-அப்3தி4/ சந்த்3ர/
உனக்கு/ பரிதி/ குல/ கடலின்/ மதியே/


அனுபல்லவி
அவதரிஞ்சு/ வேள/-உண்டெ3னோ/ லேக/
அவதரித்த/ போழ்தே/ யிருந்தனவோ/ யன்றி/

அவனிகி/-ஏகி3/ ஆர்ஜிஞ்சிதிவோ/ ஸ்ரீ ராம/ நீகு/-(எவ)
அவனிக்கு/ வந்தபின்/ தேட்டினையோ/ ஸ்ரீ இராமா/ உனக்கு.../


சரணம்
ஒகடி/-ஏஸி/ பதி3/ நூரை/ வெய்யை/
ஒன்று/ எய்ய/ பத்து/ நூறாகி/ ஆயிரமாகி/

செகபிகலாடி3/ ஸ1த்ருலனு/-அணசெனட/
திகைக்க வைத்து/ எதிரிகளை/ அடக்கினவாம்/

விகலுனி/ காகினி/ ப்3ரோவ/ த்ரி-மூர்துலு/
ஒற்றைக் கண்/ காகத்தினை/ காக்க/ மும்மூர்த்திகளும்/

வெனுக தீஸிரட/
பின்வாங்கினராம்/

ஸகல/ நதீ3/ பதிகை/ த்3ருமகுல்யுல/
அனைத்து/ நதிகளின்/ தலைவனுக்காக/ துருமகுலத்தினரை/

ஸம்ஹரிஞ்செனட/
யழித்தனவாம்/

ப்ரகட/ கீர்தி/ கல்கி3ன/ கோத3ண்ட3/
உலகறிந்த/ புகழ்/ உடைத்த/ கோதண்டத்தினை/

பாணி/ ஸ்ரீ த்யாக3ராஜ/ வினுத/ நீகு/-(எவ)
ஏந்துவோனே/ ஸ்ரீ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/ உனக்கு.../


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - சாபமுலு - சாபமு

2 - ஒகடேஸி - ஒகடேஸின

3 - செகபிகலாடி3 - எல்லா புத்தகங்களிலும் 'சகபகலாடி3' என்று கொடுக்கப்பட்டுள்ளது. தெலுங்கில், 'சிகபிக', 'செகபிக' என்று இரண்டு சொற்கள்தான் உள்ளன. 'சிகபிக' என்பதற்கு 'சிதறடித்தல்' என்றும், 'செகபிக' என்பதற்கு 'துன்புறுத்த' என்றும் பொருளாகும். 'செகபிகலாடி3' என்ற சொல்லுக்கு 'துன்புறுத்தி' என பொருளாகும். எனவே 'செகபிகலாடி3' இங்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. 'துன்புறுத்தி' என்பதற்கு பதிலாக 'திகைக்க வைத்து' என்ற பொருள் கொள்ளப்பட்டது.

5 - தீஸிரட - தீஸினாரட

8 - த்யாக3ராஜ வினுத - த்யாக3ராஜ நுத

Top

மேற்கோள்கள்
2 - ஒகடேஸி பதி3 நூரை வெய்யை - ஓரம்பெய்ய, பத்து, நூறாகி, ஆயிராமாகி - வால்மீகி ராமாயணம், ஆரண்ய காண்டம், அத்தியாயம் 31-ல், ஸுபாஹுவைக் கொன்று, மாரீசனை துரத்தி கடலில் புகச்செய்த ராம பாணத்தினைப் பற்றி் அகம்பனன் ராவணனிடம் பகர்வதனை நோக்கவும்.

வால்மீகி ராமாயணம், யுத்த காண்டம், அத்தியாயம் 93-ல் - ராமன் புரிந்த யுத்தத்தினைப் பற்றி் விவரணையை நோக்கவும்.

"மேற்கூறிய அரக்கர்கள், சில சமயம், ஆயிரமாயிரம் ராமர்களை போர்க்களத்தினில் கண்டனர்; பிற சமயங்களில் ஒரு ராமனையே கண்டனர்." (செய்யுள் 27)

"பகலின் எட்டிலொரு பகுதி நேரத்தினில் (ஒன்றரை மணி), காற்று வேகத்தில் செல்லும் பல விதமான தேர்களையும், பதினெட்டாயிரம் விரைந்து செல்லும் யானைகளையும், பதினாலாயிரம் குதிரைகளையும் , குதிரையேறுவோரையும், இரண்டு லக்ஷம் காற்படையாளிகளயும் கொண்ட, தன் விருப்பப்படி உருமாறும், அரக்கர்களின் படையினை, ராமன் ஒருவனாகவே, தனது தீப்பிழம்புகள் போன்ற, அம்புகளினால் அழித்தான்." (செய்யுள் 31-33)

4 - த்ரி-மூர்துலு - மும்மூர்த்திகள் - வால்மீகி ராமாயணம், ஸுந்தர காண்டம், அத்தியாயம் 38-ல் - காக்கையசுரனைப் பற்றி கூறப்பட்டது -
"இராமனின் பாணத்தினால் துரத்தப்பட்ட காக்கை, பல இடங்களில் அடைக்கலம் தேடி கிடைக்காது, பிரபஞ்சம் முழுவதினியைம் சுற்றினான். இங்ஙனம், மூவுலகங்களிலும் திரிந்தும், தன்னுடை தந்தையாலும் (இந்திரன்), தலைசிறந்த இருடிகளாலும் கைவிடப்பட்டு, கடைசியில் ராமனிடமே சரண் புகுந்தான்." (செய்யுள் 31, 32)

Top

6 - த்3ருமகுல்யுல - துருமகுலத்தோர் - வால்மீகி ராமாயணம், யுத்த காண்டம், அத்தியாயம் 22-ல் கூறப்பட்டது.
பாவிகளும், கொலைகாரர்களும், மிக்கு கொடூரமானவர்களுமான, துருமகுலமெனப்படும் 'மாரு காந்தாரம்' (தற்போதைய ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மார்வார், பிகானீர்) பகுதி வாழும், ஆபீ4ரஸ் (AbhIras) எனப்படுவோரை, ராமன் ஏவிய பிராமாத்திரம் அழித்தது. இந்த பிரமாத்திரத்தினை, முதலில், கடலில் பாலம் அமைக்க உதவி செய்யத் தயங்கிய கடலரசனை நோக்கி ராமன் ஏவினான். ஆனால், கடலரசன் ராமனிடம் சரணடைந்து, அந்த அத்திரத்தினை மேற்கூறிய பகுதியில் செலுத்துமாறு வேண்டினான்.

ஆபீ4ரஸ் (AbhIras) பற்றி மேற்கொண்டு விவரம் அறிய பாகவத புராணம், 2-வது புத்தகம், 4-வது அத்தியாயம் (செய்யுள் 18) நோக்கவும்.
Top

விளக்கம்
7 - ப்ரகட கீர்தி கல்கி3 - உலகறிந்த புகழுடைத்த - இது நேரடியாக ராமனையே குறிக்கலாம். ஆனால், இந்த பாடல் ராமனின் ஆயதங்களைப் புகழந்து கூறுவதனால், இதனை கோதண்டத்திற்கு அடைமொழியாகக் கொள்ளப்பட்டது.

ஒன்றெய்ய - ஓரம்பெய்ய

காகம் - காகாசுரன்

நதிகளுக்குத் தலைவன் - வருணன் - கடலரசன்

அனைத்து நதிகளின் தலைவனுக்காக - கடலரசன் வேண்டுகோளுக்காக
Top


Updated on 14 Feb 2009

No comments: