Wednesday, January 7, 2009

தியாகராஜ கிருதி - ஸ்ரீ ரம்ய சித்த - ராகம் ஜய மனோஹரி - SrI Ramya Chitta - Raga Jaya Manohari

பல்லவி
ஸ்ரீ ரம்ய சித்தாலங்கார ஸ்வரூப ப்3ரோவுமு

அனுபல்லவி
மாராரி தே3வேந்த்3ர பிதாமஹாத்3யஷ்ட தி3க்பால ஸேவ்ய (ஸ்ரீ)

சரணம்
ஸுரேஸா1ரி ஜீவாபஹர வர ஸோத314ரா-ப ஸ்ரீ-ப
நரானந்த3 நே நீ வலெ கானரா த்யாக3ராஜார்சித பத3 (ஸ்ரீ)


பொருள் - சுருக்கம்
திருமகள் உள்ளம் களிக்கும் அலங்கார வடிவினனே!
காமாரி, தேவேந்திரன், தாதை, எண்டிசைப்பாலர் ஆகியோரால் சேவிக்கப்பட்டோனே!

இந்திரன் பகைவனின் உயிர்குடித்தோனின் மேலான சோதரனே! நிலமகள் மணாளா! திருமகள் மணாளா! மனிதரின் களிப்பே! தியாகராசனால் தொழப்பெற்ற திருவடியோனே!

நான் உன்னைப் போன்று (எங்கும்) காணேனய்யா; காப்பாய்.


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸ்ரீ/ ரம்ய/ சித்த/-அலங்கார/ ஸ்வரூப/ ப்3ரோவுமு/
திருமகள்/ களிக்கும்/ உள்ளம்/ அலங்கார/ வடிவினனே/ காப்பாய்/


அனுபல்லவி
மார/-அரி/ தே3வ/-இந்த்3ர/ பிதாமஹ/-ஆதி3/-அஷ்ட/ தி3க்/ பால/ ஸேவ்ய/ (ஸ்ரீ)
காமன்/ அரி / தேவர்/ இந்திரன்/ தாதை/ ஆகியோரால்/ எண்/ திசை/ பாலர்/ சேவிக்கப்பட்டோனே/


சரணம்
ஸுர-ஈஸ1/-அரி/ ஜீவ/-அபஹர/ வர/ ஸோத3ர/ த4ரா/-ப/ ஸ்ரீ/-ப/
இந்திரன்/ பகைவனின்/ உயிர்/ குடித்தோனின்/ மேலான/ சோதரனே/ நிலமகள்/ மணாளா/ திருமகள்/ மணாளா/

நர/-ஆனந்த3/ நே/ நீ/ வலெ/ கானரா/ த்யாக3ராஜ/-அர்சித/ பத3/ (ஸ்ரீ)
மனிதரின்/ களிப்பே/ நான்/ உன்னை/ போன்று/ காணேனய்யா/ தியாகராசனால்/ தொழப்பெற்ற/ திருவடியோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்

விளக்கம்
1 - 4ரா-ப ஸ்ரீ-ப - விஷ்ணுவின் இரு மனைவியர் - நிலமகள் - திருமகள்

காமாரி - சிவன்
தாதை - பிரமன்
இந்திரன் பகைவன் - இந்திரசித்து - இராவணின் மைந்தன்
இந்திரன் பகைவனின் உயிர்குடித்தோன் - இலக்குவன்
இந்திரன் பகைவனின் உயிர்குடித்தோனின் சோதரன் - இராமன்

மனிதரின் களிப்பே - இதனை 'மனித உருவத்தோனே' என்றும் 'எவ்வமயமும் களித்திருப்போனே' என்றும் பிரிக்கலாம்.
Top


Updated on 07 Jan 2009

No comments: