Thursday, January 1, 2009

தியாகராஜ கிருதி - ராம ரகு4 குல - ராகம் காபி - Rama Ragahu Kula - Raga Kaapi

பல்லவி
ராம ரகு4 குல ஜல நிதி4 ஸோம லோகாபி4ராம

அனுபல்லவி
தாமர சூலிகைனனு நீ மஹிமலு தெலிய வஸ1மா (ரா)

சரணம்
சரணம் 1
1ரணாக3த ஜன ரக்ஷக ஸுர பால முக2 ஜித ஸுதா4-
கர நின்னு விபீ4ஷணுடு31ரணனகா3னே
ஸுர முனி ஜன வைரி ஸஹோத3ருட3னுசுனுனெஞ்சக நீ
1பி3ருது3னு பொக3டு3சு லங்கா புர பதிகா3 ஜேஸின ஸ்ரீ (ரா)

சரணம் 2
ஸுர பூஜித பத3 நீது3 வர ரூபமு கன ஜாலக
கி3ரிஜா ரிபு ஹர ஸ1ங்கர ஸௌமித்ரி
4ரஜானில தனய விபா4கர ஸுத த31 வத3னானுஜ
4ரதுலு பொக333 தொம்மிதி3 கு3ரிகி 2தி3வ்ய த்3ரு2ஷ்டினிச்சின (ரா)

சரணம் 3
ஜலஜாருண சரணாஸுர ஜலதா3ஸு13 ஸ்ரீ ரகு4 குல
திலகாத்3பு4த கு33ஸு14முலு க3 த்யாக3ராஜ
குல பாவன கலி யுக3 மனுஜுலகுனு 4நீ தாரகமு
நிடல நேத்ருனி சேதனு வீனுல பல்கனுகா3
ஜேஸின (ரா)


பொருள் - சுருக்கம்
இராமா! இரகு குலமெனும் கடலில் (உதித்த) மதியே! உலகினை மகிழ்விப்போனே! சரணடைந்தோரைக் காப்போனே! வானோரைப் பேணுவோனே! மதியை வெல்லும் வதனத்தோனே! வானோர் தொழும் திருவடியோனே! கமல (நிகர்) சிவந்த திருவடிகளோனே! அரக்கரெனும் முகிலைக் கலைக்கும் புயலே! இரகு குலத் திலகமே! வியத்தகு பண்புகளோனே! சுபங்களுடைத்த தியாகராசனின் குலத்தைப் புனிதப்படுத்தியவனே!
  • தாமரையில் உதித்தோனுக்காகிலும் உனது மகிமைகளையறிய இயலுமா?

  • உன்னை விபீடணன் புகல் (அடைந்தேன்) என்றவுடனேயே, வானோர் மற்றும் முனிவர்களின் பகைவனின் சோதரனென் றெண்ணாது, உனது விருதுகளைப் புகழ்ந்து, இலங்கை நகருக்கு அரசனாகச் செய்த இராமா!

  • உனது திருவுருவத்தினைக் காணவியலாது மலைமகள், சத்துருக்கினன், சங்கரன், இலக்குவன், புவிமகள், அனுமன், பரிதி மைந்தன், இராவணனின் பின்னோன்,
    பரதன் ஆகியோர் புகழ, ஒன்பதினோருக்கும் தெய்வீகப் பார்வையளித்த இராமா!

  • கலியுக மனிதருக்கு, உனது தாரக (நாம)த்தினை, நெற்றிக்கண்ணோனால், காதுகளில், (காசியில் இறக்கும் தறுவாயில்,) பகரும்படிச் செய்த இராமா!பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராம/ ரகு4/ குல/ ஜல நிதி4/ ஸோம/ லோக/-அபி4ராம/
இராமா/ இரகு/ குல/ கடலில்/ (உதித்த) மதியே/ உலகினை/ மகிழ்விப்போனே/


அனுபல்லவி
தாமர/ சூலிகி/-ஐனனு/ நீ/ மஹிமலு/ தெலிய/ வஸ1மா/ (ரா)
தாமரையில /உதித்தோனுக்கு/ ஆகிலும்/ உனது/ மகிமைகளை/ அறிய/ இயலுமா/


சரணம்
சரணம் 1
1ரண/-ஆக3த ஜன/ ரக்ஷக/ ஸுர/ பால/ முக2/ ஜித/
சரணம்/ அடைந்தோரை/ காப்போனே/ வானோரை/ பேணுவோனே/ வதனத்தில்/ வென்ற/

ஸுதா4கர/ நின்னு/ விபீ4ஷணுடு3/ ஸ1ரணு/-அனகா3னே/
மதியை/ உன்னை/ விபீடணன்/ புகல் (அடைந்தேன்)/ என்றவுடனேயே/

ஸுர/ முனி ஜன/ வைரி/ ஸஹோத3ருடு3/-அனுசுனு/-எஞ்சக/ நீ/
வானோர்/ முனிவர்களின்/ பகைவனின்/ சோதரன்/ என்று/ எண்ணாது/ உனது

பி3ருது3னு/ பொக3டு3சு/ லங்கா/ புர/ பதிகா3/ ஜேஸின/ ஸ்ரீ/ (ரா)
விருதுகளை/ புகழ்ந்து/ இலங்கை/ நகருக்கு/ அரசனாக/ செய்த/ ஸ்ரீ/ ராமா..


சரணம் 2
ஸுர/ பூஜித/ பத3/ நீது3/ வர/ ரூபமு/ கன/ ஜாலக/
வானோர்/ தொழும்/ திருவடியோனே/ உனது/ திரு/ உருவத்தினை/ காண/ இயலாதுய

கி3ரிஜா/ ரிபு ஹர/ ஸ1ங்கர/ ஸௌமித்ரி/
மலைமகள்/ சத்துருக்கினன்/ சங்கரன்/ இலக்குவன்/

4ரஜா/ அனில/ தனய/ விபா4கர/ ஸுத/ த31/ வத3ன/-அனுஜ/
புவிமகள்/ வாயு/ மைந்தன்/ பரிதி/ மைந்தன்/ பத்து/ தலையன்/ பின்னோன்/

4ரதுலு/ பொக333/ தொம்மிதி3 கு3ரிகி/ தி3வ்ய/ த்3ரு2ஷ்டினி/-இச்சின/ (ரா)
பரதன் ஆகியோர்/ புகழ/ ஒன்பதினோருக்கும்/ தெய்வீக/ பார்வை/ யளித்த/ ராமா..


சரணம் 3
ஜலஜ/-அருண/ சரண/-அஸுர/ ஜலத3/-ஆஸு13/ ஸ்ரீ ரகு4/ குல/
கமல (நிகர்)/ சிவந்த/ திருவடிகளோனே/ அரக்கரெனும்/ முகிலை/ (கலைக்கும்) புயலே/ இரகு/ குல/

திலக/-அத்3பு4த/ கு3ண/ ஸு14முலு/ க3ல/ த்யாக3ராஜ/
திலகமே/ வியத்தகு/ பண்புகளோனே/ சுபங்கள்/ உடைத்த/ தியாகராசனின்/

குல/ பாவன/ கலி/ யுக3/ மனுஜுலகுனு/ நீ/ தாரகமு/
குலத்தை/ புனிதப்படுத்தியவனே/ கலி/ யுக/ மனிதருக்கு/ உனது/ தாரக (நாம)த்தினை/

நிடல/ நேத்ருனி சேதனு/ வீனுல/ பல்கனுகா3/ ஜேஸின/ (ரா)
நெற்றி/ கண்ணோனால்/ காதுகளில்/ பகரும்படி/ செய்த/ ராமா..


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
1 - பி3ருது3னு பொக3டு3சு - விபீடணனுக்கு் புகலளிக்கையில், இராமன் தனது குலத்தினைப் பற்றி பகர்ந்த சொற்களை, வைணவர்கள் 'சரணாகதி சாத்திரம்' எனப் போற்றுவர் - (வால்மீகி ராமாயணம் - யுத்த காண்டம் - அத்தியாயம் 18) -

"'நான் உன்னவன்' என்று கூறி், புகல் வேண்டி, என்னிடம் வருபவனுக்கு, எல்லா உயிர்களிடமிருந்தும் (ஏற்படும்) அச்சத்தினை போக்குவேன் - இதுவே எனது விரதம்"

4 - நீ தாரகமு நிடல நேத்ருனி சேதனு வீனுல பல்கனுகா3 - "காசி க்ஷேத்திரத்தினில் மரிப்போருக்கு, 'ராமா' என்னும் தாரகத்தினை, அவர்கள் முக்தி அடையவேண்டி, காதினில் உபதேசிக்கின்றேன்" என்று சிவன் கூறுவதாக - அத்யாத்ம ராமாயணம், யுத்த காண்டம், அத்தியாயம் 15 நோக்குக.

"காசியில், ப்ரம்மநாளத்தினில் மரிப்போர், தாரக மந்திரத்தினையும், மறுபிறவியகற்றும் முக்தியையும் அடைவர். காசியில், வேறு இடத்தினில் மரிப்போருக்கு, சிவன் தாரக மந்திரத்தினை அவர்களின் வலது காதினில் உபதேசிப்பார்" - ராமனுக்கும் அனுமனுக்கும் நடந்த உரையாடலில் ராமன் கூறியது (முக்திகா உபநிடதம்-1; முக்திகா உபநிடதம்-2)
Top
விளக்கம்
2 - தி3வ்ய த்3ரு2ஷ்டினிச்சின - தெய்வீகப் பார்வையினை ஒன்பது பேருக்களித்த - இச்சம்பவம் எங்கு விவரிக்கப்பட்டுள்ளதெனத் தெரியவில்லை.

3 - ஸு14முலு க3 - சுபங்களுடைத்த - இச்சொல், தியாகராஜரைக் குறிக்கும், 'த்யாகராஜ குல' என்ற சொற்களுடனோ, அன்றி இறைவனைக் குறிக்கும் 'பாவன' என்ற சொல்லுடனோ சேர்த்து பொருள் கொள்ளலாம்.
Top

தாமரையிலுதித்தோன் - பிரமன்
முனிவர்களின் பகைவன் - இராவணன்
விருதுகள் - தனது மற்றும் குலப் பெருமைகள்
மலைமகள் - பார்வதி
வாயு மைந்தன் - அனுமன்
புவிமகள் - சீதை
பரிதி மைந்தன் - சுக்கிரீவன்
பத்துத் தலையோன் - இராவணன்
இராவணனின் பின்னோன் - விபீடணன்
Top


Updated on 01 Jan 2009

No comments: