Friday, January 2, 2009

தியாகராஜ கிருதி - ஸுந்த3ர த3ஸ1ரத2 - ராகம் காபி - Sundara Dasaratha - Raga Kaapi

பல்லவி
ஸுந்த3ர த31ரத2 நந்த3ன வந்த3னமொனரிஞ்செத3ரா

சரணம்
சரணம் 1
பங்கஜ லோசன த4ரஜாயங்கமுன வெலுங்க33 கனி (ஸு)

சரணம் 2
பரம த3யா கர ஸு14 கர 1கி3ரிஸ1 மனோஹர ஸ1ங்கர (ஸு)

சரணம் 3
கரமுன கொ3டு3கி3டு3கொனி ஸோத3ரு ப4ரதுடு3 கரக33 கனி (ஸு)

சரணம் 4
ஸு-கு3ணுட3னில தனயுடு3 23வய க3வாக்ஷுலு கொலுவக3 கனி (ஸு)

சரணம் 5
4டஜ வஸிஷ்ட2 ம்ரு2கண்டு3ஜ கௌ3தமாது3லு பொக33 கனி (ஸு)

சரணம் 6
3அகளங்க முக2 4த்யாக3ராஜுனு ப்3ரோசின 5அவ்யாஜ கருணா ஸாக3ர (ஸு)


பொருள் - சுருக்கம்
அழகிய தசரதன் மைந்தனே! கமலக்கண்ணா! மிக்கு தயை யுடையோனே! நலமருள்வோனே! மலையீசன் மனம் கவர்ந்தோனே! மங்களமருள்வோனே! களங்கமற்ற முகத்தோனே! தியாகராசனைக் காத்த நோக்கமற்ற கருணைக் கடலே!
  • வந்தனம் செய்தேனய்யா

  • புவிமகள் (உனது) மடியில் விளங்கக் கண்டு, வந்தனம் செய்தேனய்யா

  • கையில் குடையேந்தி (உனது) சோதரன் பரதன் உருகக் கண்டு, வந்தனம் செய்தேனய்யா

  • நற்குணங்களுடைய வாயு மைந்தன், கவயன், கவாட்சன் ஆகியோர் (உனக்கு) தொண்டு செய்யக் கண்டு, வந்தனம் செய்தேனய்யா

  • அகத்தியர், வசிட்டர், மார்க்கண்டேயர், கௌதமர் முதலானோர் (உன்னைப்) புகழக் கண்டு, வந்தனம் செய்தேனய்யா



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸுந்த3ர/ த31ரத2/ நந்த3ன/ வந்த3னமு/-ஒனரிஞ்செத3ரா/
அழகிய/ தசரதன்/ மைந்தனே/ வந்தனம்/ செய்தேனய்யா/


சரணம்
சரணம் 1
பங்கஜ/ லோசன/ த4ரஜா/ அங்கமுன/ வெலுங்க33/ கனி/ (ஸு)
கமல/ கண்ணா/ புவிமகள்/ (உனது) மடியில்/ விளங்க/ கண்டு/ அழகிய..


சரணம் 2
பரம/ த3யா/ கர/ ஸு14/ கர/ கி3ரி/-ஈஸ1/ மனோஹர/ ஸ1ங்கர/ (ஸு)
மிக்கு/ தயை/ உடையோனே/ நலம்/ அருள்வோனே/ மலை/ ஈசன்/ மனம் கவர்ந்தோனே/ மங்களமருள்வோனே/ அழகிய..


சரணம் 3
கரமுன/ கொ3டு3கு3/-இடு3கொனி/ ஸோத3ரு/ ப4ரதுடு3/ கரக33/ கனி/ (ஸு)
கையில்/ குடை/ யேந்தி/ சோதரன்/ பரதன்/ உருக/ கண்டு/ அழகிய..


சரணம் 4
ஸு-கு3ணுடு3/-அனில/ தனயுடு3/ க3வய/ க3வாக்ஷுலு/ கொலுவக3/ கனி/ (ஸு)
நற்குணங்களுடைய/ வாயு/ மைந்தன்/ கவயன்/ கவாட்சன் ஆகியோர்/ தொண்டு செய்ய/ கண்டு/ அழகிய...


சரணம் 5
4டஜ/ வஸிஷ்ட2/ ம்ரு2கண்டு3ஜ/ கௌ3தம/-ஆது3லு/ பொக33/ கனி/ (ஸு)
குட முனி/ வசிட்டர்/ மார்க்கண்டேயர்/ கௌதமர்/ முதலானோர்/ புகழ/ கண்டு/ அழகிய...


சரணம் 6
அகளங்க/ முக2/ த்யாக3ராஜுனு/ ப்3ரோசின/ அவ்யாஜ/ கருணா/ ஸாக3ர/ (ஸு)
களங்கமற்ற/ முகத்தோனே/ தியாகராசனை/ காத்த/ நோக்கமற்ற/ கருணை/ கடலே/ அழகிய...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
4 - த்யாக3ராஜுனு - த்யாக3ராஜுனி.

மேற்கோள்கள்
2 - 3வய க3வாக்ஷுலு - கவயன், கவாட்சன் - இரு வானரப்படைத் தலைவர்கள். ராமேஸ்வரத்தில் கவய - காவாக்ஷ தீர்த்தங்கள் உள்ளன.

5 - அவ்யாஜ கருணா - லலிதா ஸஹஸ்ரநாமத்தில் தாயாருக்கு 'அவ்யாஜ கருணாமூர்த்தி' (நோக்கமின்றி கருணை புரிபவள்) என்றும் 'பஞ்ச க்ருத்ய பராயணா' (ஐந்தொழில் புரிபவள்) என்றும் இரண்டு பெயர்கள் உண்டு. ஐந்தொழிலாவது - படைத்தல், காத்தல், சுருட்டல், மறைத்தல், அருளல். இவை யாவுமே ஏதும் வெளிப்படையான நோக்கத்தினாலோ, காரணங்களாலோ ஏற்படாததால் அம்மைக்கு அத்தகைய பெயர்.
Top

விளக்கம்
1 - கி3ரிஸ1 - மலையீசன் - சிவன் - இது வடசொல். 'கி3ரி' + 'ஈஸ1' இரண்டு சொற்களும் சேர்ந்தால் 'கி3ரீஸ1' என்று வரும். ஆனால் தெலுங்கு மொழியில் 'கி3ரிஸு1டு3' (குறில் 'ரி') - சிவனைக் குறிக்கும்.

3 - அகளங்க முக2 - தியாகராஜர் எல்லலாவிடங்களிலும் இறைவனை 'மதி முகத்தோனே' என்று அழைக்கின்றார். ஆனால் மதியிலும் களங்கமுண்டு; இறைவனில் அத்தகைய களங்கமேதும் கிடையாது என்பதனை இதன் மூலம் விளக்குகின்றார்.

புவிமகள் - சீதை
குட முனி - அகத்தியர்
Top


Updated on 02 Jan 2009

No comments: